தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்  சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி,மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அங்கிகரீக்கப்பட்ட தேசிய கட்சிகளான, காங்கிரஸ், பாஜக, சிபிஎம், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ்,

அங்கிகரீக்கப்பட்ட மாநில கட்சிளான, திமுக, அதிமுக, தேமுதிக, சிபிஐ, விசிக, நாம் தமிழர் மற்றும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாமக, மதிமுக, தவாக, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதில் பங்கேற்ற கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இதனையடுத்து  ஆலோசனைகளின் படி வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. .

நிகழ்ச்சிகளை ஆபத்துக்களை பொறுத்து மூன்று வகையாக பிரிப்பு 

1. குறைந்த ஆபத்து 
2. மிதமான ஆபத்து 
3. அதிக ஆபத்து 

குறைந்த ஆபத்து என்றால் 200 பேருக்கு ஒரு காவலர். மிதமான ஆபத்து என்றால் நூறு பேருக்கு ஒரு காவலர், அதிக ஆபத்து என்றால் 50 பேருக்கு ஒரு காவலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும் பொதுக்கூட்டத்தில் 5000 பேர் முதல் 10000 பேர் கலந்து கொள்வதாக இருந்தால் 1 லட்சம் ரூபாய் டெபாசிட், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் என்றால் 3 லட்சம் ரூபாய் பெடாசிட், 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான மக்கள் கலந்துகொள்வதாக இருந்தால் 8 லட்சம் வரை டெபாசிட், 50 ஆயிரம் பேருக்கு மேல் 20 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. 

மேலும் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு 10 நாட்கள் முன்பாகவும் 15 நாட்களுக்கு மிகாமலும் மனு கொடுக்க வேண்டும்.  அங்கீகரிக்கப்படாத மற்ற இடத்திற்கு 21 நாட்கள் முன்பாகவும் 30 நாட்களுக்கு மிகாமலும் மனு கொடுக்க வேண்டும். 

 எழுத்துப்பூர்வ உறுதிமொழி

 ரோடு ஷோ தொடர்பான முன்மொழியப்பட்டுள்ள கருத்துக்கள்