தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு மகா யாகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தி முன்னிட்டு தம்பிக்கோட்டை ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மஹா யாகம் வளர்க்கப்பட்டு யாகத்தில் 10 கிலோ வெண்ணெய் ஊற்றப் பட்டது அதோடு 100 கிலோ பழங்கள் 50 கிலோ இனிப்பு வகைகள் யாக

த்தில் போடப்பட்டனர். அதோடு பட்டு வேஷ்டி பட்டு துண்டு யாகத்தில் போடப்பட்டன பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால் தேன் சந்தானம் பன்னீர் கரும்புச்சாறு என ஐம்பது வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப

ஆராதனை நடைபெற்றது. இவ்விழாவில் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து மற்றும் கிராம பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஆலயத்தில் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பாக இரவு நேரம் என்பதால் பக்தர்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுத்தனர்.
