தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனை
மேற்கூரை சிமெண்ட் காரை பெயர்ந்து தலையில் விழுந்து பெண் காயம்

தஞ்சாவூாில், ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனையில், தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு பிரசவ வார்டு, குழந்தைகள் சிகிச்சைக்கான வார்டு உள்ளன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரண்யா,25,. இவர்களின் ஒன்றரை வயது குழந்தை யாசின், கடந்த நான்கு முன்பு, சாட்டை வெடியை திண்றதால், ராஜாமிராசுதார் மருத்துவமனை, குழந்தை சிகிச்சை வார்டில், சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து, சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, டிஸ்சார்ஜ் அறிக்கை வரும் வரை, குழந்தைகள் சிகிச்சை வார்டில், தனது குழந்தையுடன் படுக்கை ஒன்றில் அமர்ந்து இருந்தார். அப்போது, மேற்கூரையின் சிமெண்ட் காரை பெய்ர்ந்து, சரண்யாவின் தலையில் விழுந்தது. இதில், சரண்யா தலைமையில் காயமடைந்த, தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மருத்துவமனை தரப்பில் விசாரித்து வருகின்றனர்.