கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டி பகுதியில் உள்ள மைதானத்தில் காராள வம்சம் கலை சங்கதின் சார்பில் 5000 பெண்கள் கலந்து கொண்ட 100வது வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது.

பொள்ளாச்சி மக்கள் நல சங்கத்தின் நிறுவனர் நித்தியானந்தம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வள்ளி கும்மி நிகழ்ச்சியில் கோவை சிரவை ஆதீனம் குமரகுரு சுவாமிகள் கலந்து கொண்டார்.

இங்கு நடைபெற்ற இந்த வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என சுமார் 5000 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் உற்சாக நடனத்தினை பாடல்கள் பாடி தங்களது நடனத்தை வெளிப்படுத்தியதை கண்டு பார்வையாளர்கள் வியப்படைந்தனர்.