தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட்”- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ““இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள்! ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை […]
இடைக்கால பட்ஜெட்: “காது குத்தும் விழா” என அதிமுக விமர்சனம் – தமிழக அரசு அதிரடி விளக்கம்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை மாபெரும் காது குத்தும் விழா என்று அதிமுக விமர்சனம் செய்திருந்தது. அதிமுகவின் இந்த விமர்சனத்திற்கு, புதிய திட்டங்களுக்கு அறிவிப்பு வெளியிடுவது மரபல்ல என்று தமிழக அரசு பதிலடி கொடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தல் முடிந்து வெற்றி பெற்று ஆட்சி பொறுப்புக்கு வருபவர்கள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்கள் இது தான் வழக்கம். […]
காதலியைக் கொன்று ஆவி வரவழைக்கப் பூஜை: இந்தூர் காதலனின் கொடூரச் செயல்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகபுரி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த நிதூர் போலீசார் கதவை உடைத்து அந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது அங்கு 24 வயது பெண் ஒருவர் படுக்கை அறையில் நிர்வாணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதனை தொடர்ந்து போலீசார் தீவிர […]
பட்ஜெட் எப்படி இருக்கணும்னு- நிர்மலா சீதாராமன் இங்க வந்து பார்க்க வேண்டும்”- செல்வப்பெருந்தகை
ஒரு நிதி நிலை அறிக்கை எப்படி இருக்க வேண்டுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கு வந்து பார்க்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று (17.02.2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மாண்புமிகு நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தமிழ்நாடு காங்கிரஸ் […]
வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் நாடகமா?– இபிஎஸ் கேள்வி!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட்டை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இது வெற்று அறிவிப்புகள் மற்றும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினுக்கி உரை” என்று குற்றம் சாட்டினார். உருப்படியாக எதுவும் இல்லை என்றும், மக்களை ஏமாற்றும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், “2021 தேர்தலில் திமுக […]
எனக்கு மறைக்க ஒன்றும் இல்லை… எஃப்ஸ்டீன் வழக்கில் டிரம்ப் மீண்டும் மறுப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜெஃப்ரி எஃப்ஸ்டீன் வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு எதுவும் மறைக்க ஒன்றும் இல்லை. நான் முழுமையாக விடுவிக்கப்பட்டேன் (exonerated). எஃப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று தெளிவாகக் கூறினார். எஃப்ஸ்டீன் கோப்புகள் வெளியான பின்னணியில் இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.சமீபத்தில் நீதித்துறை வெளியிட்ட எஃப்ஸ்டீன் கோப்புகளில் (மூன்று மில்லியன் ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள்) […]
ரூ.10 கோடி செலுத்த கூடுதல் அவகாசம் கேட்ட நடிகர் விஷால் மனு தள்ளுபடி
லைகா நிறுவனத்துக்கான கடனை திருப்பி செலுத்தும் விவகாரத்தில், நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த, அவகாசம் வழங்கக் கோரி, நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, விஷால் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் […]
TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா IAS பொறுப்பேற்பு
டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா ஐஏஎஸ் பொறுப்பேற்றார். சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகள், உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 ஏ பணிகளுக்கு 828 பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதன்மைப் போட்டித்தேர்வுகள் கடந்த 9-ஆம் தேதி காலையும், மாலையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவிருந்தது. ஆனால், அதற்கான நுழைவுச் சீட்டுகளை வழங்குவதில் நடந்த குளறுபடிகளால் தேர்வுகள் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே அத்தேர்வுகள் […]
வேலூரில் பிப்.23ம் தேதி விஜய் பிரசாரம்
சேலத்தைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அந்த பரப்பரைக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதில் சேலம் கூட்டம் போலவே சுமார் 5000 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்நிலையில் வேலூரில் விஜய் பிரச்சாரம் நடக்கும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார். பிரச்சார திடலில் பொதுமக்கள், தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாகன பார்க்கிங், பிரச்சாரத்திற்கு வந்து, செல்லும் வழி குறித்தும் […]
சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடு-அசாமில் தலைமை தேர்தல் ஆணைய குழு ஆய்வு
அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் முழு குழுவினர் கவுகாத்தி வந்தனர். அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பதவிக்காலம் வரும் மே 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு அங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, அந்த மாநிலத்தில் மொத்தம் 2,49,58,139 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்காக பதற்றமான […]