அண்ணாமலை – டிடிவி திடீர் சந்திப்பு ஏன்? அமமுக டிடிவி விளக்கம்
சமீபத்தில், டி.டி.வி. தினகரன் மற்றும் கே. அண்ணாமலை இடையேயான சந்திப்பு நடைபெற்றது. பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுகவின் பிரிவுகளை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்தச் சந்திப்பு அமைந்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதினர். இந்தச் சந்திப்பு குறித்து ஊடகங்கள் உடனடியாக, “2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது” அல்லது “அதிமுகவின் பிளவுபட்ட தலைவர்களை மீண்டும் இணைப்பதற்கான மத்தியஸ்த முயற்சியாக இருக்கலாம்” என்று பல யூகங்களைத் தெரிவித்தன. டிடிவி தினகரன் […]
நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம்
தற்போதைய பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை (டிசம்பர் 10) கூடுகிறது. கே.ஏ. செங்கோட்டையன் போன்ற முக்கியப் பிரமுகர்கள் விலகிய நிலையில், கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த கூட்டத்தில் என்னென்ன முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எம்பி கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் – பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் – கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்! நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் […]
பொன்முடிக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பதவி
க.பொன்முடி மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோருக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் இருவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு வழங்கியுள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக பணியாற்றி வந்த மு.பெ.சாமிநாதன் அவர்கள் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக திரு. இல.பத்மநாபன் (நெ.) 4/666, சைட் எண். 103, கிருஷ்ணா நகர், விவேகானந்தா வித்யாலயா பள்ளி எதிரில், தாராபுரம் சாலை, கோவில் வழி, […]
திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட வெற்றிபெற்ற இவர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்து வந்தார். இந்நிலையில், மனோஜ் பாண்டியன் இன்று திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் வந்த மனோஜ் பாண்டியன் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திராவிடக்கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கும் தலைவராகவும், தமிழக உரிமைகளை பாதுகாக்கும் தலைவராகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதால் திமுகவில் இணைந்ததாக மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், இன்று மாலை 4 மணிக்கு […]