இந்த பாடலுக்கு பழங்காலத்து கருவியை பயன்படுத்தினேன்.. ஏர்ஆர் ரகுமான்

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கிய ‘மின்சார கனவு’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே… வெண்ணிலவே’ என்ற பாடல் உருவான விதம் குறித்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனம் நெகிழ்ந்து பேசியிருக்கிறார். கடந்த 1997ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி திரைக்கு வந்த இப்படத்தில் அரவிந்த்சாமி, பிரபுதேவா, கஜோல் நடித்திருந்தனர். இதில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே… வெண்ணிலவே’ என்ற பாடல் ஹிட்டாகி, இன்றுவரை ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடலாக இருக்கிறது. இப்பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு […]

என் குடும்பத்தை பற்றி தவறா சொன்னால்… நடிகை லாவண்யா ஆவேசம்

எனது குடும்பத்தை பற்றி யாராவது தவறாக சொன்னால், பொறுத்து கொள்ள மாட்டேன்” என்று நடிகை லாவண்யா திரிபாதி தெரிவித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளவர் லாவண்யா திரிபாதி. இவர், தமிழில் ‘பிரம்மன்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து ‘மாயவன்’, ‘தணல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2023ம் ஆண்டு லாவண்யா திரிபாதிக்கும், தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜுக்கும் திருமணம் நடந்தது. கடந்தாண்டு லாவண்யாவுக்கு ஆண் குழந்தை […]

தொகுப்பாளரை கரம்பிடித்த நடிகை கிரித்திகா?

பாலிவுட் நடிகை கிரித்திகா காம்ரா (37) மற்றும் பிரபல தொகுப்பாளரான கவுரவ் கபூர் (44) விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இந்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இவர்களது திருமணம் மும்பையில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள்பங்கேற்கும் வகையில் எளிமையாக நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல் நடிகை காலமானார்

மூத்த சீரியல் நடிகை வாஹினி (பத்மா) காலமானார்.வாஹினி கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மட்டுமின்றி, பொருளாதார சிக்கல்களையும் அவர் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது சிகிச்சைக்காக நண்பர்கள், கலைத் துறையை சேர்ந்தவர்கள் உதவி செய்த போதும், நோயின் தீவிரம் காரணமாக அவரை காப்பாற்ற முடியவில்லை.தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி, தமிழ் சின்னத்திரையிலும் அவர் நடித்த தொடர்கள் மூலம் குடும்ப ரசிகர்களிடம் பரிச்சயமான முகமாக மாறினார். நடிகை வாஹினியின் மறைவுச் செய்தியை அவரது […]

2027 ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்- வைரமுத்து

நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஜனவரி 25, 2026) கவிஞர் வைரமுத்து அவர்களின் இல்லத்திற்கு தனிப்பட்ட முறையில் வருகை தந்தார். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையேயான நீண்டகால நட்பின் அடையாளமாக அமைந்தது. வைரமுத்து தனது X பதிவில் இந்த சந்திப்பை விரிவாகப் பகிர்ந்துள்ளார்.வைரமுத்து தனது பதிவில் ரஜினியை “பாசமுள்ள மனிதனப்பா – நான் மீசவச்ச குழந்தையப்பா” என்ற வரிகளுக்கு இலக்கியமாக இலங்குபவர் என்று புகழ்ந்துள்ளார். “வியப்புக்குரிய மனிதர்தான்” என்று குறிப்பிட்ட அவர், அரைநூற்றாண்டாக அரசியல் வெள்ளத்தையும் சமூகப் புயலையும் […]

நடிகை அசின் வீட்டில் விசேஷம்… மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பம்

நடிகை அசின் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர். இங்கிருந்து பாலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கும் தனது சாம்ராஜ்ஜியத்தி விரிவுப்படுத்தினார். ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவர்; தனது கரியர் உச்சத்தில் இருக்கும்போதே மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில் அசினின் வீட்டில் கோலாகலமாக விசேஷம் நடந்திருக்கிறது. கேரளாவை சேர்ந்த அசின் தமிழில் தனது திரை பயணத்தை எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஆரம்பித்தார். முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தொடர்ந்து […]

சிவகார்த்திகேயனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து

1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்ற முன்னெடுப்பிற்காக பாராட்டப்பட்டு வருகிறது. ‘பராசக்தி’ திரைப்படம் 2 நாட்களில் ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று ‘பராசக்தி’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் “நடிப்பதற்கு சவாலான கதாப்பாத்திரம் என்பதால் பராசக்தியைதேர்வு […]

“ஜனநாயகன்”-உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறைீடு

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவைத் திங்கட்கிழமை அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

”பராசக்தி” படம் நாளை வௌியாகிறது

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வௌியாகிறது பராசக்தி திரைபடம். பராகத்தி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய பராசகத்தி படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது.நாளை திரைப்படம் வௌியாக உள்ள நிலையில் இன்று தணிக்கை சான்று வழங்கப்பட்டது. பராசக்தி திரைப்படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம். 16வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் பெற்றோருடன் பராசக்தி படம் பார்க்க தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ஜனநாயகன் திரைப்பட வௌியீடு இன்னும் உறுதியாகாத நிலையில் பராசக்திக்கு […]

“பராசக்தி” படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதில் சிக்கல்

சுதா கொங்குராய் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள பராசக்தி திரைப்படம் தமிழ் சினிமாவில் எதிர்ப்பார்வை ஏற்படுத்தி உள்ளது. பொங்கலுக்கு 14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு அதனை தொடர்ந்து 10ம் தேதி முன்கூட்டியே திரைக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியீட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்துள்ள நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை போலவே பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கை குழு தற்போது வரை தணிக்கை […]