சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடு-அசாமில் தலைமை தேர்தல் ஆணைய குழு ஆய்வு
அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் முழு குழுவினர் கவுகாத்தி வந்தனர். அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பதவிக்காலம் வரும் மே 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு அங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, அந்த மாநிலத்தில் மொத்தம் 2,49,58,139 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்காக பதற்றமான […]
கார் மீது விழுந்த ராட்சத கம்பம் – சமாஜ்வாதி கட்சி தலைவர் பலி
உ.பி பிரதாப்கர் மாவட்டம் அந்து பகுதியில், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய நிர்வாகி லால் பகதூர் யாதவ் (47) சென்ற கார் மீது, சுமார் 1,000 கிலோ எடையுள்ள ராட்சத மின் கம்பம் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாபுகஞ்ச் சந்தை அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தொழிலாளர்கள் உயர் அழுத்த மின் கம்பத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தக் கம்பம் சமநிலையை இழந்து அவ்வழியாகச் சென்ற கார் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. […]
சபரிமலை தங்கம் திருட்டு… எஸ்ஐடி விசாரணை- கேரளா ஐகோர்ட்
சபரிமலை தங்கத் திருட்டு குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் எஸ்.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது என கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை தேவசம் போர்டு கண்காணித்து வருகிறது எனவும் கேரளா ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் பதில் மனு தாக்கலுக்கு பின் விசாரிப்பதாக கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தில்’லான பாட்டியை தேடி சென்று கெளரவித்த போலீஸ்
டிராபிக் போலீசுக்கே சவால் விடும் வகையில், கேரளாவின் பிரபாவதி என்ற பாட்டி துணிச்சலுடன் செய்த சம்பவம் SM-ல் வைரலாகி வருகிறது. கோழிக்கோட்டில் ஸ்கூட்டரை நடைபாதையில் ஓட்டி வந்தவரை தடுத்து, அவரை சாலையில் பயணிக்க வைத்த பாட்டியை பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் கேரள போலீசார் பிரபாவதியின் வீட்டிற்கே நேரில் சென்று அவருக்கு சால்வை அணிவித்து கெளரவித்துள்ளனர். அதன் வீடியோவையும் பகிர்ந்துள்ளனர்.
ஜோதிடர் பேச்சை கேட்டு தாயை தலையணையால் அமுக்கி கொன்ற கொடூர மகள்..
கர்நாடகா மாநிலம் அனூபனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுசித்ரா (33) என்பவரின் தந்தை சுமார் 18 மாதங்கள் முன்பு உயிரிழந்தார். தந்தையின் திடீர் மரணத்தால் வேதனையில் இருந்த சுசித்ரா, இது குறித்து ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது சுசித்ராவின் தந்தை உயிரிழப்புக்கு அவரது தாயார் புஷ்பாவதி செய்த பில்லி சூனியம் தான் காரணம் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார். இதனை அப்படியே நம்பிய சுசித்ரா, தனது 55 வயது தாயின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். […]
பாத்திரம் கழுவும் ரசாயனத்தை குடித்த 4 பேர் பலி…ராஜஸ்தானில் சோகம்
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஆலோலி கிராமத்தில், மது என நினைத்து பாத்திரம் கழுவும் ரசாயன திரவத்தை அருந்திய மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆலோலி கிராமத்தில் நடைபெற்ற ஒரு இல்ல திருமண விழாவில், பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் ஒப்பந்த வேலையை ரத்தன், சுஷிலா தேவி, ஜம்னி தேவி மற்றும் பதாமி தேவி ஆகிய 4 பேரும் செய்துள்ளனர். வேலை முடிந்ததும், அங்கிருந்த பாத்திரம் கழுவும் திரவத்தை மது என்று தவறாகக் […]
மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார்.. புதுச்சேரி முதல்வர் அதிரடி
புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார் என்று சட்டசபையில் ரங்கசாமி அறிவித்தார். Puducherry Assembly unanimously passes resolution seeking statehood – India Today புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில், அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நடந்தது. அப்போது எதிர்கட்சித்தலைவர் குறுக்கிட்டு, புதுவை எங்கும் போராட்டம் நடக்கிறது. ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தை அரசு […]
சர்ச்சை வீடியோவால் உயிரிழந்த தீபக்-ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்
கேரளாவில் பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் கைதான யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமின் வழங்கியது. 21 நாட்கள் சிறையில் இருந்ததை கணக்கில் கொண்டு நிபந்தனைகளுடன் கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் அளித்தது
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு!
கேரளா: மண்டல, மகர விளக்கு பூஜைக் காலத்திற்கு பிறகு மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று (பிப்.12) மாலை திறக்கப்படுகிறது. பிப்.17 வரை சபரிமலை நடை திறக்கப்பட்டிருக்கும்; sabarimalaonline.org.in மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் ஒடிசா பயிற்சியாளர் மாயம்..ஹெலிகாப்டரில் தேடுதல்
ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த சார்த்தக் மகாபத்ரா (23) என்பவர், வணிகக் கப்பல் ஒன்றில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். அந்தக் கப்பல் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, கடந்த 2ம் தேதி இரவு 9 மணியளவில் அவர் தனது தாயுடன் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் பேசியுள்ளார். அப்போது அவர் மிகவும் இயல்பாக இருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் 3ம் தேதி அதிகாலை 6.15 மணியளவில் தனது அறைக்குள் சென்ற சார்த்தக், அதன் […]