கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை: நாடகமாடிய மனைவி போலீசில் சரண்!
மதுரையை சேர்ந்தவர் தேவா என்ற ரித்தீஷ்( 27). கூலித்தொழிலாளி. இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தார். இவரது மனைவி இந்திராணி (26). இவர்களுக்கு 3 வயதில் ஆண்குழந்தை உள்ளது.கடந்த 26-ந்தேதி தேவா திடீரென மாயமானதாகவும், இதில் சந்தேகம் உள்ளதாகவும் அவரது தாயார் சுசீலா, கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவாவை தேடி வந்தனர்.இந்தநிலையில் தேவாவின் மனைவி இந்திராணி நேற்று […]
மதுரையில் 17ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் அம்மா அரசின் பொற்கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்ததைத் தவிர எந்தவிதமான புதிய திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. குறிப்பாக, மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான முன்மொழிவைக்கூட இந்த திமுக அரசு முழுமையாக வழங்கவில்லை. வீடுகளுக்கு 100 சதவீத வரி உயர்வு, வணிக நிறுவனங்களுக்கு 150 சதவீத வரி உயர்வு […]
2 குழந்தைகளுடன் பெண் மாயம்
மதுரை மாவட்டம் மேலூர் பூதமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மனைவி போதும் பொண்ணு (25) தனது 4 வயது மற்றும் 2 வயது மகன்களுடன் கடந்த நவம்பர் 26 அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். அவர்களை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், டிசம்பர் 9 அன்று கணவர் ராஜ் கீழவளவு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.
அமித்ஷா Mind your Tongue”- வைகோ கொந்தளிப்பு
மதுரை ஆரப்பாளையத்தில் மதிமுக நிர்வாகியின் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ” நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார வரம்பை மீறி பேசுகிறார். நீதிபதிகளை நான் மதிக்கிறேன், ஆனால், நீதிபதிகள் வரம்புக்குள் மட்டுமே பேச வேண்டும். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என மிரட்டுகிறார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு ஜனநாயகத்துக்கு விரோதமானது. தமிழ்நாட்டில் இந்துத்துவா சக்திகள் உள்ளே நுழைய நினைக்கிறது. தமிழ்நாட்டில் எந்த காலகட்டத்திலும் […]
வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…
மதுரை மேலமடை அப்பல்லோ சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலு நாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(டிச.7) திறந்து வைத்தார். மதுரை அண்ணாநகர், மாட்டுத்தாவணி, ஆவின் பாலகம், பாண்டி கோயில் ஆகிய நான்கு பகுதிகளை இணைக்கும் விதமாக மேலமடை அப்பல்லோ சந்திப்பு உள்ளது. இந்தப் பகுதி மருத்துவமனைகள், திரையரங்குகள், தனியார் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, அந்த வழியாகச் செல்லும் அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், […]
திருப்பரங்குன்றத்தில் போராட்டம்… பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது
திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று இரவு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு போலீஸ் கமிஷனர் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதால், தீபம் ஏற்ற அனுமதி அளிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, இந்து அமைப்பினர் போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றத்தில் திரண்டுள்ள பாஜகவினர் கலைந்து செல்ல […]
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் இன்று இரவு 7 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றாத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கூறியதாவது: எனது உத்தரவால் யாருக்கும் பாதிப்பு இல்லை. நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளீர்கள். கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக நடந்து இருக்கலாம் எனக்கூறினார். அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்கள். சட்டப்படி 4 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் […]
மதுரை- சாலைகள் ஐசியூவில் வைக்கக்கூடிய நிலைமை- ஆர்.பி.உதயகுமார்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக ஏன் பாஜகவிற்கு ஆதரவாக கலந்து கொள்ளவில்லை என்பதற்கும், நீதிமன்றத்தில் உள்ள இந்த விவகாரம் குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிப்பார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அரசு போக்குவரத்து பணிமனை அருகில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “எஸ்ஐஆர் வந்த போது முதல் […]
திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல்…144 தடை உத்தரவு…
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் ஏற்றக்கூடிய உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஓம் பலகை அருகே தீபம் ஏற்றப்பட்டது. 100 ஆண்டு மரபுப்படி வழக்கமாக ஏற்றப்படும் இடத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், சிஐஎஸ்எப் போலீஸ் பாதுகாப்புடன் மனுதாரர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மலை மீது ஏற தடுப்புகளை […]
சிவகங்கை பஸ் விபத்து… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
சிவங்கை பஸ் விபத்து குறித்து மதுரையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது… சிவகங்கை, கும்பங்குடியில் 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இச்சம்பவம் பெரும் வருத்தமளிக்கிறது. 2 டிரைவர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் நடந்த கோர விபத்து இது. அஜாக்கிரதையால் பேருந்து விபத்து நடந்துள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர்களின் பணிச்சுமை குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று இவ்வாறு தெரிவித்தார்.