நீலகிரி அருகே கால்நடைகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதியில் கடந்த 4 மாதங்களாக புலி ஒன்று, ஆடு, மாடு என 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியுள்ளது. மேலும், பொதுமக்களையும் புலி அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து புலியை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கூடலூர் வனத்துறையினர் 5 இடங்களில் இரும்பு கூண்டுகளை வைத்தனர். கூண்டில் புலிக்கு இரையாக ஆடுகளை கட்டி வைத்தனர். ஆனாலும், கடந்த 4 மாதங்களாக புலி சிக்காமல் இருந்தது. பின்னர், கேரள மாநிலம் நிலம்பூரில் […]

புலி தாக்கி பழங்குடியின பெண் பலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி ஊராட்சி, மாவனல்லா பகுதியை சேர்ந்தவர் பாலன் (69). இவரது மனைவி நாகியம்மாள் (65). பழங்குடியின பெண்ணான இவர், ஊருக்கு அருகே உள்ள வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.அப்போது, அருகில் உள்ள வாய்க்காலுக்கு தண்ணீர் குடிக்க வந்த புலி ஒன்று, மரத்தடியில் நின்று கொண்டிருந்த நாகியம்மாளை பாய்ந்து தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு, தூரத்தில் இருந்த பார்த்த சிறுவன் ஒருவன், உடனடியாக ஊருக்குள் ஓடிச்சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்தான். உடனே […]

யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு இடித்து அகற்றம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் காட்டு யானைகள் தனியாக ஊருக்குள் வந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. தனியாக வரும் காட்டு யானை ஊருக்குள் முகாமிட்டு பொதுமக்களை தாக்குவது, பயிர்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறது. அவற்றை வனத்துறையினர், வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். இதற்கிடையே, சிலர் காட்டு யானை வழித்தடத்தில் வீடுகளை கட்டி ஆக்கிரமித்து வருகின்றனர். இவ்வாறு ஆக்கிரமித்து கட்டும் கட்டிடங்களை அதிகாரிகள் இடித்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வாழைத்தோட்டம் பகுதியில் யானை வழித்தடத்தில் வீடு […]