மூதாட்டி வீட்டில் 4 கிலோ வெள்ளி திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகேஸ்வரி (63). இவர் கடந்த 8ம்தேதி காஞ்சிபுரத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேகத்தை தரிசிப்பதற்காக கடந்த 7ம்தேதி தனது வீட்டை பூட்டிக்கொண்டு காஞ்சிபுரத்தில் வசிக்கும் தனது மகன் ஜெயபிரகாஷ் வீட்டிற்கு சென்றார். நேற்று மாலை மல்லிகேஸ்வரி வீடு திரும்பினார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பரண் மீது வைக்கப்பட்டிருந்த 4 கிலோ வெள்ளி பூஜை பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. […]
திருவண்ணாமலையில் மகா தீபத்தை தரிசிக்க மலை ஏறிய வாலிபர் சாவு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி மகா தீபம் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளிக்கும். அதன்படி, நேற்று 7-வது நாளாக மலை உச்சியில் மகா தீபம் காட்சியளித்தது. இதற்கிடையில் மலை ஏறி சென்று மகா தீபம் காண மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் […]
மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்கா… துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திருக்கோவிலூர் சாலையில் திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவானது, எடப்பாளையம் ஏரியை தூர்வாரி, நிலத்தடி நீர் உயரும் வகையில் மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏரியின் உபரிநீர் வெளியேறும் சிறிய பாலத்தில் வில்நாண் (Bow String) வடிவில் வண்ண மின்விளக்குகளால் ஒளிரக்கூடிய வகையிலான […]
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திரு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருக்கார்த்திகை தீபவிழாவின் 10 ஆம் நாளான இன்று காலை அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக அண்ணாமலையார் கருவறையின் முன்பு காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பின்னர் 6 மணியளவில் சுமார் 2668 அடி உயரமுள்ள மலையின் மீது 5 3/4 அடி உயரம் கொண்ட கொப்பறையில் […]
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசிதி பெற்றதாகும். அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்வான மகா தீபதிருவிழா நாளை நடைபெற உள்ளது.இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பக்தர்கள் நாளை மலையேறவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில், […]
லிவிங் காதலியை அரிவாளுடன் தரதரவென இழுத்து வந்த காதலன்..பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வருபவர் சதிஷ் (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வரும் ஜான்சி என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. மேலும் சதிஷ் என்பவரும் ஜான்சியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஓரே வீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கணவர், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றன. இந்நிலையில் சதிஷ்க்கும் ஜான்சிக்கும் இடையே […]
டீசல் லாரி கவிழ்ந்து மூதாட்டி பலி…
திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, அதே லாரி மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசல் ஆறாக ஓடியதால், கிராம மக்கள் கேன், குடம் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிச் சென்றனர். இந்த விபத்தால் திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பானது. மூதாட்டி மீது லாரியை மோதாமல் இருக்க திருப்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி […]