ஸ்கூட்டர் மீது கார் மோதல்…கல்லூரி மாணவி பலி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இன்று தனது நண்பருடன் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். செண்டூர் என்ற பகுதியில் சென்றபோது வேகமாக வந்த கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவியின் நண்பருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்ததில் அதில் இருந்தவர்களும் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் […]
திடீர் பிரேக்… ஏரியில் கவிழ்ந்த கார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் (45). இவர் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது செம்மேடு அருகே திடீரென்று டூவீலர் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து கிருஷ்ணகிரி-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள ஏரியில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. மேலும் காரில் பயணத்தை இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.தகவல் அறிந்த நல்லான் பிள்ளைபெற்றால் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விபத்து […]
20 பெண்களை திருமண மோசடி செய்த கல்யாண ராமன்
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தைச் சேர்ந்த 29 வயது இளம்பெண்ணுக்கு மேட்ரிமோனியில் அருண்மொழி (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக நம்பி, அப்பெண் 17 சவரன் நகை, ரூ.2.5 லட்சம், ஆகியவற்றை அவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அருண்மொழி காணாமல் போயுள்ளார். புகாரின் பேரில் அருண்மொழியை கைது செய்தனர். இதனை தொடர்ந்து விசாரணையில், இதுபோல 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி செல்லாமல் ஊா் சுற்றியதை கண்டித்த தந்தை…மாணவர் தற்கொலை…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மரூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் தினேஷ் குமார் (18). இவர், திண்டிவனம் கோனேரிகுப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 20 நாட்களாக இவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் அவரது தந்தை ஏன் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றுகிறாய் என்று கூறி தினேஷ்குமாரை திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தினேஷ் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் […]
கார் – சிலிண்டர் லாரி மோதி விபத்து…சாலையில் சிதறிய சிலிண்டர்கள்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த திருவண்ணாமலை சாலையில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் மீது மோதி லாரி விபத்துக்குள்ளானது. கார் மீது மோதுவதை தவிர்க்கும் நோக்கில் லாரி டிரைவர் லாரியை வேகமாக திருப்பியபோது லாரி கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த சுமார் 350க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் சாலையில் குவியலாக கிடந்தன. சிலிண்டர் வெடிக்காததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பொதுமக்களின் உதவியுடன் சாலையில் கிடந்த […]