இந்த பாடலுக்கு பழங்காலத்து கருவியை பயன்படுத்தினேன்.. ஏர்ஆர் ரகுமான்

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கிய ‘மின்சார கனவு’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே… வெண்ணிலவே’ என்ற பாடல் உருவான விதம் குறித்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனம் நெகிழ்ந்து பேசியிருக்கிறார். கடந்த 1997ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி திரைக்கு வந்த இப்படத்தில் அரவிந்த்சாமி, பிரபுதேவா, கஜோல் நடித்திருந்தனர். இதில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே… வெண்ணிலவே’ என்ற பாடல் ஹிட்டாகி, இன்றுவரை ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடலாக இருக்கிறது. இப்பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு […]

என் குடும்பத்தை பற்றி தவறா சொன்னால்… நடிகை லாவண்யா ஆவேசம்

எனது குடும்பத்தை பற்றி யாராவது தவறாக சொன்னால், பொறுத்து கொள்ள மாட்டேன்” என்று நடிகை லாவண்யா திரிபாதி தெரிவித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளவர் லாவண்யா திரிபாதி. இவர், தமிழில் ‘பிரம்மன்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து ‘மாயவன்’, ‘தணல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2023ம் ஆண்டு லாவண்யா திரிபாதிக்கும், தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜுக்கும் திருமணம் நடந்தது. கடந்தாண்டு லாவண்யாவுக்கு ஆண் குழந்தை […]

தொகுப்பாளரை கரம்பிடித்த நடிகை கிரித்திகா?

பாலிவுட் நடிகை கிரித்திகா காம்ரா (37) மற்றும் பிரபல தொகுப்பாளரான கவுரவ் கபூர் (44) விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இந்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இவர்களது திருமணம் மும்பையில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள்பங்கேற்கும் வகையில் எளிமையாக நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல் நடிகை காலமானார்

மூத்த சீரியல் நடிகை வாஹினி (பத்மா) காலமானார்.வாஹினி கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மட்டுமின்றி, பொருளாதார சிக்கல்களையும் அவர் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது சிகிச்சைக்காக நண்பர்கள், கலைத் துறையை சேர்ந்தவர்கள் உதவி செய்த போதும், நோயின் தீவிரம் காரணமாக அவரை காப்பாற்ற முடியவில்லை.தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி, தமிழ் சின்னத்திரையிலும் அவர் நடித்த தொடர்கள் மூலம் குடும்ப ரசிகர்களிடம் பரிச்சயமான முகமாக மாறினார். நடிகை வாஹினியின் மறைவுச் செய்தியை அவரது […]

2027 ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்- வைரமுத்து

நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஜனவரி 25, 2026) கவிஞர் வைரமுத்து அவர்களின் இல்லத்திற்கு தனிப்பட்ட முறையில் வருகை தந்தார். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையேயான நீண்டகால நட்பின் அடையாளமாக அமைந்தது. வைரமுத்து தனது X பதிவில் இந்த சந்திப்பை விரிவாகப் பகிர்ந்துள்ளார்.வைரமுத்து தனது பதிவில் ரஜினியை “பாசமுள்ள மனிதனப்பா – நான் மீசவச்ச குழந்தையப்பா” என்ற வரிகளுக்கு இலக்கியமாக இலங்குபவர் என்று புகழ்ந்துள்ளார். “வியப்புக்குரிய மனிதர்தான்” என்று குறிப்பிட்ட அவர், அரைநூற்றாண்டாக அரசியல் வெள்ளத்தையும் சமூகப் புயலையும் […]

நடிகை அசின் வீட்டில் விசேஷம்… மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பம்

நடிகை அசின் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர். இங்கிருந்து பாலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கும் தனது சாம்ராஜ்ஜியத்தி விரிவுப்படுத்தினார். ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவர்; தனது கரியர் உச்சத்தில் இருக்கும்போதே மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில் அசினின் வீட்டில் கோலாகலமாக விசேஷம் நடந்திருக்கிறது. கேரளாவை சேர்ந்த அசின் தமிழில் தனது திரை பயணத்தை எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஆரம்பித்தார். முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தொடர்ந்து […]

சிவகார்த்திகேயனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து

1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்ற முன்னெடுப்பிற்காக பாராட்டப்பட்டு வருகிறது. ‘பராசக்தி’ திரைப்படம் 2 நாட்களில் ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று ‘பராசக்தி’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் “நடிப்பதற்கு சவாலான கதாப்பாத்திரம் என்பதால் பராசக்தியைதேர்வு […]

“ஜனநாயகன்”-உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறைீடு

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவைத் திங்கட்கிழமை அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

”பராசக்தி” படம் நாளை வௌியாகிறது

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வௌியாகிறது பராசக்தி திரைபடம். பராகத்தி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய பராசகத்தி படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது.நாளை திரைப்படம் வௌியாக உள்ள நிலையில் இன்று தணிக்கை சான்று வழங்கப்பட்டது. பராசக்தி திரைப்படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம். 16வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் பெற்றோருடன் பராசக்தி படம் பார்க்க தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ஜனநாயகன் திரைப்பட வௌியீடு இன்னும் உறுதியாகாத நிலையில் பராசக்திக்கு […]

“பராசக்தி” படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதில் சிக்கல்

சுதா கொங்குராய் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள பராசக்தி திரைப்படம் தமிழ் சினிமாவில் எதிர்ப்பார்வை ஏற்படுத்தி உள்ளது. பொங்கலுக்கு 14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு அதனை தொடர்ந்து 10ம் தேதி முன்கூட்டியே திரைக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியீட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்துள்ள நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை போலவே பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கை குழு தற்போது வரை தணிக்கை […]

நான் எப்பவும் போற ரூட் பத்தி கவலைப்பட்டது கிடையாது… ரஜினியின் பளீச்

உலகம் முழுவதும் 2026 ஆங்கில புத்தாண்டு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழ் படவுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் வீட்டு முன்பு திரண்ட ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து சொன்னார். அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு பறக்கும் முத்தங்களை பரிசளித்தார். பிறகு தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், தனது நடிப்பில் வெளியான ‘முத்து’ என்ற படத்தில் இடம்பெற்ற வீடியோவை பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்து சொன்னார். சாரட் வண்டியில் […]

நடிகர் மோகன்லாலின் தாயார் காலமானார்

நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி எலமகாராவில் உள்ள தனது வீட்டில் காலமானார்.   இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான விஸ்வநாதன் நாயரின் (மறைந்தவர்) மனைவியாவார். சாந்தகுமாரி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், இன்று மதியம் காலமானார். இவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா- ரசிகர்கள் குதூகலம்

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று (டிசம்பர் 27) நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது திடீர் மழை பெய்தது. இதனால், விஐபி இருக்கைகளில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது. இந்த சமயத்தில் விஜய்யின் ‘மேகமாய் வந்து போகிறேன்’ பாடல் ஒலிபரப்பப்பட்டது, மேலும் ரசிகர்கள் மழையோடு சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடினர்.

நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு- ரஜினி இரங்கல்

நடிகர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக கொண்ட ஸ்ரீனிவாசன் உடல்நல குறைவால் காலமானார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்த ஸ்ரீனிவாசன் 225 படங்களில் நடித்துள்ளார். உடல் நல பிரச்னையால் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்து வந்த ஸ்ரீனிவாசன் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 69. தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் […]

பிரபல டைரக்டர் லிங்குசாமிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு, பணமோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.வழக்கின் பின்னணி: என்ன நடந்தது?இந்த விவகாரம் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பானதாகும். லிங்குசாமியின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘திருப்பதி பிரதர்ஸ்’, சினிமா தயாரிப்பு பணிகளுக்காக ‘பிவிபி கேபிடல்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்திடம் ரூ.35 லட்சம் கடன் பெற்றிருந்தது. இந்தக் கடனைத் […]

நடிகை நிதி அகர்வாலிடம் அத்துமீறிய ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார் நிதி அகர்வால். இவர் தமிழில் வெளிவந்த சிம்புவின் ‘ஈஸ்வரன்’, ரவி மோகன் நடித்த ‘பூமி’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘தி ராஜா சாப்’. இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து முதல் முறையாக நடித்திருக்கிறார். இந்நிலையில், ‘தி ராஜா சாப்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு ஐதராபாத்தில் உள்ள லூலூ மாலில் நடந்தது. இதில் நிதி அகர்வால், இசையமைப்பாளர் […]

ஆஸ்கர் விருதை நெருங்கிய ”ஹோம் பவுண்ட்” திரைப்படம்

98வது அகாடமி விருதுகள் போட்டியில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக ‘ஹோம் பவுண்ட்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் (டிசம்பர் 2025) வெளியான அறிவிப்பின்படி, சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கான இறுதி 15 படங்கள் அடங்கிய ‘ஷார்ட்லிஸ்ட்’ பட்டியலில் இப்படம் இடம்பிடித்துள்ளது. இயக்குநர்: நீரஜ் கய்வான் . இவர் ஏற்கனவே ‘மசான்’ என்ற புகழ்பெற்ற படத்தை இயக்கியவர். தயாரிப்பு: கரண் ஜோஹரின் ‘தர்மா புரொடக்ஷன்ஸ்’ . நடிகர்கள்: ஈஷான் கட்டர், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர். […]

நான் திருமணம் செய்ய நல்ல பார்ட்னர் வேண்டும்- ஸ்ருதி பேட்டி

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர், ஸ்ருதிஹாசன். பல படங்களில் பாடியுள்ளார். தற்போது 39 வயதாகும் அவர், இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். இதற்கு முன்பு இரு முறை காதலித்து, அதற்கு பிறகு பிரேக்அப் செய்திருக்கிறார். இந்நிலையில், திருமணம் செய்துகொள்வது குறித்து அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது… மக்கள் பிரமாண்டமாக திருமணம் செய்வதற்காக வீண்செலவு செய்கிறார்கள். ஒருவேளை நான் திருமணம் செய்துகொள்ளும் நிலை வந்தால், அதை பதிவு திருமணமாக, மிகவும் […]

சூர்யாவின் அடுத்த பட டைட்டில் ”விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்”

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான ‘சூர்யா 46’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்ற டைட்டில் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விரைவில் ரிலீஸ் தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 பேருக்கு சிறைதண்டனை விதித்ததற்கு-நன்றி- நடிகை மஞ்சுவாரியர்

 நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன் “6 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு நன்றி, ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை” என பாதிக்கப்பட்ட நடிகையின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் ஒரு பிரபல மலையாள நடிகை திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த […]

தெலுங்கில் எளிதாக அனிரூத்-க்கு பட வாய்ப்பு கிடைக்குது- தமன் வேதனை

பிரபல இசையமைப்பாளர் எஸ். தமன், தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு கிடைப்பதில் உள்ள சிரமத்தை வெளிப்படையாக விமர்சித்துள்ளார். “தெலுங்கில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் எனக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் வலுவான ஒற்றுமை, தெலுங்கு சினிமாவில் இல்லை” என்று கூறினார். பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு படங்களில் அதிகம் சம்பாதிப்பதாகவும், அவர்கள் தெலுங்கு படங்கள் மீது விருப்பத்தால் அல்லாமல் பணத்திற்காகவே வேலை செய்வதாகவும் தமன் வேதனை தெரிவித்தார். தமன் […]

இந்த கதை எனக்கு கத்தி மேல் நடப்பது போல் இருந்தது- நடிகர் கார்த்தி

நலன் குமாரசாமி எழுதி இயக்கியுள்ள ‘வா வாத்தியார்’ என்ற படம், வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். கார்த்தி, கிரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத், ஜி.எம்.சுந்தர் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்தி கலகலப்பாக பேசியதாவது: நலன் குமாரசாமி ஒரு ஜாலியான கதையை சொல்வார் என்று பார்த்தால், ‘வா வாத்தியார்’ என்ற கதையை […]

மார்ஃபிங் போட்டோவால் மிரட்டல்…பாடகி சின்மயி பதிலடி

பிரபல பாடகி சின்மயி ஸ்ரீபாதா, சமூக வலைதளங்களில் தன்னை இழிவுபடுத்தும் வகையில் மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்களை வெளியிட்டவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு நடிகையின் மார்பிங் போட்டோவைப் பார்த்து அதை வன்மையாகக் கண்டித்து, போலீசில் புகார் அளித்திருந்தார் சின்மயி. அதற்குப் பதிலடியாக, அவரது போட்டோக்களையே மார்பிங் செய்து மிக மோசமான கேப்ஷன்களுடன் பதிவிட்டுள்ளனர் சிலர். இதனால் ஆத்திரமடைந்த சின்மயி, அந்த போட்டோக்களையும் கமெண்ட் செய்தவர்களின் ஸ்கிரீன் ஷாட்களையும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, வீடியோ ஒன்றையும் […]

ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்..

பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஜெய்வர்தா தயாரிக்கும் படம், ‘ஹேப்பி ராஜ்’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்க, மரியா இளஞ்செழியன் எழுதி இயக்குகிறார். முக்கிய வேடங்களில் ஸ்ரீகவுரி பிரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியன், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் நடிக்கின்றனர். ஜெய்காந்த் சுரேஷ் இணைந்து தயாரிக்க, மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். ஆர்.கே.செல்வா எடிட்டிங் செய்ய, குமார் கங்கப்பா அரங்கம் அமைக்கிறார். படம் குறித்து மரியா இளஞ்செழியன் […]

கீர்த்தி சுரேஷ் இயக்குநராக அவதாரம்? பரபரப்பு தகவல்

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், நடிகையாக மட்டுமின்றி, விரைவில் ஒரு இயக்குநராகவும் களமிறங்க உள்ளார் என்ற பரபரப்பான தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அவர் அளித்த சமீபத்திய பேட்டிகளும், வெளிவந்த சில செய்திக் குறிப்புகளும் இந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துகின்றன. 5ஆண்டுகளாக எழுதும் கதை: கீர்த்தி சுரேஷ் விளக்கம்சமீபத்தில், தனது நடிப்பில் வெளியான ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளின் போது அளித்த பேட்டியில், கீர்த்தி சுரேஷ் […]

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகம் – படத்தலைப்பு வெளியீடு!

விக்ரம்’, ‘லியோ’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், முதன்முறையாக நடிகராக அவதாரம் எடுக்கிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்திற்கு ‘DC’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் லோகேஷுக்கு ஜோடியாக வாமிகா கபி நடிக்கிறார். ‘தேவதாஸ்’ என்ற பாத்திரத்தில் ரத்தக் கறைகளுடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ் இருக்கும் டைட்டில் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தனுஷின் ‘D55’ படத்தில் சாய் பல்லவி – பூஜா ஹெக்டே நீக்கம்!

தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இணையும் ‘D55’ திரைப்படத்தில், நடிகை பூஜா ஹெக்டே-க்கு பதிலாக இப்போது சாய் பல்லவி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘மாரி 2’ திரைப்படத்தின் ‘ரவுடி பேபி’ கூட்டணி மீண்டும் திரையில் இணைவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியை படக்குழு அணுகியுள்ளதாகவும், தயாரிப்பு நிறுவனம் (Sun Pictures) மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மலேசியாவில் நடிகர் அஜித்-ஐ சூழ்ந்த ரசிகர்கள்..

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமார் அவர்கள் நடிப்பைத் தாண்டி தனது தனிப்பட்ட ஆர்வங்களான மோட்டார் பந்தயம் மற்றும் சாகசப் பயணங்களில் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். அந்த வகையில், தனது தீவிரமான பந்தய ஆர்வத்தின் வெளிப்பாடாக, அவர் சமீபத்தில் மலேசியா சென்றுள்ளார். அங்கு நடைபெறும் உயர்மட்ட கார் ரேஸ் போட்டிகளில் ஒன்றில் அவர் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஃபார்முலா 2 அல்லது அதுபோன்ற ஒரு சர்வதேசப் போட்டியில் அவர் பங்கேற்கலாம் என்று […]

விக்ரம் பிரபு நடிக்கும் புது படம்… டிச.25ம் தேதி ரிலீஸ்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ள படம், ‘சிறை’. இதில் விக்ரம் பிரபு, எல்.கே.அக்‌ஷய் குமார், அனந்தா நடித்துள்ளனர். சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் ‘மன்னிச்சிரு’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் ரிலீசானது. வேலூரில் படமான இப்பாடல் காட்சியில் விக்ரம் பிரபு, அனந்தா இணைந்து நடித்தனர். ஜஸ்டின் பிரபாகரன் எழுதி இசை அமைத்த இப்பாடலை சத்ய […]

நடிகர் கார்த்தியின் “வா வாத்தியார்” ரிலீஸுக்கு இடைக்கால தடை

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை நாளை  (டிசம்பர் 5-ம் தேதி) திரையரங்குகளில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் திவாலானவர் என கடந்த […]

மாஸ் கூட்டணி-விஜய் சேதுபதி- சு. அருண்குமார் இணையும் புதிய படம்

கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட திரைப்படம் உருவாகிறது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனித்துவமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இப்போது கோடம்பாக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பண்ணையாரும் பத்மினியும் மற்றும் ‘சேதுபதி’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீண்டும் இணைகிறார். நடிகர் விஜய் சேதுபதிக்கு மிக முக்கியமான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் […]

நடிகை ராஷ்மிகா ஆவேசம்.. AI மார்பிங்-க்கு கடும் கண்டனம்

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா , சமீப காலமாகப் பெண்களைக் குறிவைத்து இணையத்தில் பரப்பப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்களுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிக்கை, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பெண்களின் கண்ணியம் குறித்த முக்கிய விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் உலகில் தற்போது பேசுபொருளாக உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஒருபுறம் ஆக்கப்பூர்வமான பலன்களைக் கொடுத்தாலும், மறுபுறம் சில சமூக […]

மூளை கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான் – சிவகார்த்திகேயன் பேச்சு

ரசிகர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையே நேரடியாக இணையும் புதிய சமூக வலைதள ஆப் ‘Fanly’யின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு, தனக்கே உரிய நகைச்சுவையும், உண்மையான உரையாடலும் கலந்த பேச்சால் அரங்கத்தையே சிரிப்பலைகளால் நிரப்பினார். மேடையில் இருந்த தொழில்நுட்ப நிபுணர்களையும், ஆப் உருவாக்கியவர்களையும் பார்த்த சிவகார்த்திகேயன், “இந்த மேடையில் இருக்கும் அத்தனை பேரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எனக்குத்தான் மூளை கொஞ்சம் கம்மிதான் போலிருக்கே! அதனாலதான் […]

2வது திருமணம் செய்த நடிகை சமந்தா

நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு ஆகியோரின் திருமணம், கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி தேவி சன்னிதியில் இன்று (01/12/2025) காலை பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்றது. இந்தத் தனிப்பட்ட திருமண வைபவத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். லிங்க பைரவி சன்னிதிகளிலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலோ வழங்கப்படும் ‘பூத சுத்தி விவாஹா’ திருமண செயல்முறை, தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக […]

நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கோவாவில் 56வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ம் தேதி துவங்கியது. இந்த விழா நேற்று நிறைவு பெறுகிறது. இவ்விழாவில் சிறந்த நடிகர், நடிகைகள், படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. நேற்று முன்னணி திரை நட்சத்திரங்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில், நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 50 ஆண்டுகள் சினிமாவில் நடத்திய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. எனக்கு விருது வழங்கி கவுரவித்த மத்திய அரசு மற்றும் கோவா அரசுக்கு நன்றி. 50 ஆண்டு […]

சினிமாவில் பலருக்கு உதாரணமாக மாறிய படம் ‘அஞ்சான்’ தான்-லிங்குசாமி

சூர்யாவின் சினிமா கேரியரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாத திரைப்படங்களில் அஞ்சான் திரைப்படமும் ஒன்று. இந்த படம் அந்த சமயம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம் ஓவர் பில்டப் செய்த காரணமாக படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனவும் பலர் கூறுவது உண்டு. இதனையடுத்து, பல ஆண்டுகள் கழித்து படத்தை ரீ எடிட் செய்து மீண்டும் படக்குழு ரீ-ரிலீஸ் செய்துள்ளது. ரீ-எடிட் செய்யப்பட்ட அஞ்சான் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் […]

டியூட்’ படத்தில் இளையராஜா பாடலை நீக்க கோர்ட் உத்தரவு

தீபாவளிக்கு வெளியான டியூட் (Dude) திரைப்படத்தில் தன்னுடைய இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘கருத்த மச்சான்’ மற்றும் பணக்காரன் படத்தில் இடம்பெற்றிருந்த ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு’ பாடல்கள் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், படத்தில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு பாடல்களையும் நீக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கானது நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. […]

“அரசன்” படத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிம்பு (சிலம்பரசன் டி.ஆர்) நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “அரசன்”. இப்படத்தை கலைப்புலி எஸ். தானு தயாரிக்க, இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது மற்றொரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால்,  “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்று, அதிகாரப்பூர்வ போஸ்டருடன் வெளியான அறிவிப்பில் “மனிதம் இணைகிறது… […]

”நெல்லை பாய்ஸ்” படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஹேமா ராஜ்குமார்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சமீபத்தில் தாவிஇருக்கும் நடிகை ஹேமா ராஜ்குமார். பல சீரியல்களில் நடித்து வரும் ஹேமா,தற்போது கமல் இயக்கத்தில் ‘நெல்லை பாய்ஸ்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். அறிவழகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.சென்னையில் நடந்த பட விழாவில் ஹேமா பேசும்போது, ‘‘எந்த ஒரு டைரக்டரும், நினைத்த கதையைச் சமரசம் இல்லாமல் படமாக்குவது தான் உண்மையான வெற்றி.அதேவேளை நிறைய புதுமுகங்களுக்கும் டைரக்டர்கள் வாய்ப்பு தரவேண்டும். தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். பொதுவாக ஆடிஷனில் கலந்துகொள்ளும்போது, சீரியல் நடிகை […]

 நடிகர் தர்மேந்திரா காலமானார்..!

தர்மேந்திரா என்று அழைக்கப்படும் தரம் சிங் தியோல் இந்திய சினிமாவில் ஒரு புகழ்பெற்ற நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். ‘பாலிவுட்டின் ஹீ-மேன்’ (He-Man) என்று அவர் செல்லமாக அழைக்கப்படுவார். 1997 ஆம் ஆண்டில், இந்தி சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். இவர் இந்தியத் திரைப்படத்துறை வரலாற்றில் மிக வெற்றிகரமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் ஒன்று 1975 ஆம் ஆண்டு வெளியான ஷோலே திரைப்படப் […]

கமல் – குஷ்பூ திடீர் சந்திப்பு.. 173 படத்தின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்த தலைவர் 173 திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்தார். திடீரென சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகியது மிகப்பெரிய அளவில் பேசும்பொருளானது.தான் இப்படத்திலிருந்து விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் சுந்தர் சி. இப்படி ஒரு சூழலில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ, சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் சுஹாசினி ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அது குறித்த […]

இனி இளையராஜா படங்களை பயன்படுத்தக் கூடாது… கோர்ட் அதிரடி

இசையமைப்பாளர் இளையராஜா, சமூக வலைதளங்களில் தனது புகைப்படம், பெயர், “இசைஞானி” என்ற பட்டம், குரல் போன்றவற்றை தன்னை அடையாளப்படுத்தும் வகையில் பயன்படுத்துவதைத் தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நவம்பர் 21, 2025 அன்று நீதிபதி ச.ம.சுப்ரமணியன் அவரது மனுவை விசாரித்து, யூடியூப் சேனல்கள், சோனி மியூசிக், சபாஸ், ஸ்பாடிஃபை, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) போன்ற சமூக வலைதளங்களுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இளையராஜாவின் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டே, […]

விஜயகாந்த் மறைவுக்கு ஏன் போகல.. மனம் திறந்த வடிவேலு

கேப்டன் விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார். இவருக்கு தமிழ்நாடு அரசு அரசு மரியாதை அளித்து நல்லடக்கம் செய்தது. பிரதமர், முதலமைச்சர் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கேப்டன் மறைந்து மறுதினம் அவரது உடல் சென்னை தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழ் நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர். இது அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கேப்டன் […]

தன் பெயரில் போலி மெசேஜ் அனுப்பிய முட்டாள் யார்?… நடிகை ஸ்ரேயா காட்டம்

நடிகை ஸ்ரேயா சரண்போல் சமூக வலைத்தளங்களில் மெசேஜ் அனுப்பிய நபர்.தன்னைப்போல் போலி மெசேஜ் அனுப்பிய நபர் குறித்து ஸ்ரேயா காட்டம். மற்றொருவரை போல நடிக்க வேண்டாம், உங்கள் வாழ்க்கையை பாருங்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார். போலி மெசேஜ் அனுப்பிய முட்டாள் யார் என தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ரேயா , சிவாஜி, அழகிய தமிழ்மகன், த்ரிஷம் என தமிழ் படங்களில் நடித்தவர் ஆவார்.

‘நான் ‘மிடில் கிளாஸ்’-ஐ விட தரைமட்டமாக இருந்தவன்”- சந்தோஷ் நாராயணன்

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒரு பட விழாவில் தன்னுடைய கடந்த கால வேதனைகளை நினைவு கூர்ந்தார் ,அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்   தேவ், கே.வி.துரை தயாரித்து கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது.சென்னையில் நடந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, ‘‘நான் ‘மிடில் கிளாஸ்’-ஐ விட தரைமட்டமாக இருந்தவன்.ஒருமுறை பெங்களூருவுக்கு ஒரு வேலை விஷயமாக செல்லவேண்டியிருந்தது. ரூ.5 ஆயிரம் தருவதாக […]

என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்… மகேஷ்பாபு பெருமிதம்

மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் பான் வேர்ல்ட் படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் படத்தின் பெயர் ‘வாரணாசி’ என்று அறிவிக்கப்பட்டது. மேலும், படத்தின் டைட்டில் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. காளையின் மேல் அமர்ந்து மகேஷ் பாபு வருவதுபோல் போஸ்டர் வெளியிட்டு அவரது கதாபத்திரத்தின் பெயர் […]

ரஜினியின் 173வது படத்தை இயக்கும் தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 173-வது படமான தலைவர் 173 குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரஜினி ஜெயிலர் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார், அது 2026 ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தலைவர் 173 இயக்குநர் யார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கமல் ஹாசன் தயாரிப்பாளராகவும், சுந்தர் சி இயக்குநராகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் நவம்பர் 13 அன்று சுந்தர் சி “எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்” […]

புதிய கதை கேட்கும் நடிகை அமலாபால்..

நடிகை அமலாபால் தமிழில் தெய்வ திருமகன் ,வேலையில்லா பட்டதாரி போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் .இப்போது நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்க வர இருக்கிறார் .இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்  தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்த அமலாபாலுக்கும், டைரக்டர் விஜய்க்கும் 2014-ம் ஆண்டில் திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது.அதன்பிறகு தொழில் அதிபர் ஜெகத் தேசாய் என்பவரை, அமலாபால் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இளய் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. திருமணம், […]

கும்கி 2 படம் வெளியிட சென்னை ஐகோர்ட் அனுமதி

 இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியுள்ள கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரைப்படத் தயாரிப்பாளரின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த திரைப்பட இயக்குனர் பிரபு சாலமனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஷ்மிகாவுக்கு முத்தம்… விஜய்தேவர்கொண்டா நெகிழ்ச்சி

ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா நடித்த தி கேர்ள்பிரண்ட் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டாவும், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இந்தவிழாவில் அவர் பேசியதாவது… பல பெண்களுக்கு தேவையான தைரியம் அளிக்கும் படத்தில் நடித்து, நீ இங்கு நிற்பதைப் பார்க்க எனக்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது ராஷி. இந்தப்படத்தின் போதே நீ, பல ஏற்றத் தாழ்வுகளை பார்த்தாய். இது வெறுமனே சினிமா மட்டுமே கிடையாது, இது நோக்கத்திற்காக நடந்துள்ளது. நான் […]

நானே படம் தயாரித்து நடிக்கிறேன்… நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் .இவரை பற்றி சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியது வைரலாகியுள்ளது .இது பற்றி நாம் காணலாம்  இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நிகழ்வில் பேசியதாவது :திடீரென்று ஆண்ட்ரியா ஒரு ஸ்கிரிப்ட்டை மெயிலில் அனுப்பினார். ‘இதை படித்துவிட்டு, எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். ஏனென்றால், இப்படத்தின் தயாரிப்பாளராக மாற முடிவு செய்துள்ளேன்’ என்றார். உடனே படித்தேன். அற்புதமாக இருந்தது. சொக்கலிங்கம், ஆண்ட்ரியா இணைந்து தயாரித்தனர். இந்த படத்துக்கு நெல்சன் திலீப்குமார் ‘வாய்ஸ் ஓவர்’ […]

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி. விலகல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.  அதில் நடிகர் ரஜினிகாந்தின் 173வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்குகிறார். சுந்தர் சி 1997ம் ஆண்டு ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் என்ற ப்ளாக்பஸ்டர் படத்தை இயக்கியவர். தனது 29 வயதிலே அருணாச்சலம் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை தந்தவர்.  இப்படத்தின் ஷுட்டிங் அடுத்த வருடம் துவங்கவுள்ளது. […]

கங்கை அமரனுடன் நடிக்கும் சிவாஜி பேரன

சிவாஜியின் முதல் பேரன் ஏற்கனவே நடிகராக இருக்கும் பட்சத்தில் அவரின் இரண்டாவது பேரனும் சினிமாவில் நடிக்க இருக்கிறார் .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்  நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராகவும், தொழில் அதிபராகவும் இருக்கிறார். இவரது முதல் மகன் துஷ்யந்த், ‘ஜூனியர் சிவாஜி’ என்ற பெயரில் சில படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்தநிலையில் ராம்குமாரின் 2-வது மகன் தர்ஷன் கணேசனும் சினிமாவுக்கு வருகிறார்.சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் […]

”காந்தா” படத்திற்கு தடைக் கோரி வழக்கு

 காந்தா திரைப்படத்துக்குத் தடை கோரிய வழக்கில் தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர் துல்கர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள காந்தா படத்தை, எடுப்பதற்கு முன் அவரின் சட்டப்பூர்வ வாரிசுகளின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என பாகவதரின் மகள் வழி பேரன் மனு தாக்கல் செய்துள்ளார்.

துள்ளவதோ இளமை பட நடிகர் அபிநய் காலமானார்

துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய் மரணம் அடைந்துள்ளார். கல்லுரல் நோய் பாதித்து உடல் மெலிந்த நிலையில் போராடிய நடிகர் அபிநய் இன்று மரணம் அடைந்துள்ளார். ஜங்சன் , சிங்கார சென்னை, பொன்மேகலை, படங்களில் நடித்தவர் அபிநய். இச்சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கௌரி கிஷன் விவகாரம்- மன்னிப்பு கேட்ட யூடியூபர்

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் ’96’ படத்தில் நடித்து பிரபலமான கௌரி கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதர்ஸ்’ திரைப்படம் நாளை (நவம்பர் 9) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கடந்த 30-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ஒரு யூடியூபர் நடிகரிடம் “நடிகையைத் தூக்கியுள்ளீர்கள், அவரது எடை எவ்வளவு?” என்று கேட்டது பெரும் சர்ச்சையை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தியது. இதை விமர்சித்து கௌரி கிஷன் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசியிருந்தார். […]

தன் பெயரில் போலி அழைப்புகள்” ..எச்சரித்த நடிகை ருக்மிணி வசந்த்

தன்னைப்போலவே ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு நடப்பதாக நடிகை ருக்மணி வசந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் “முக்கியமான எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு செய்தி… 9445893273 என்ற எண்ணைப் பயன்படுத்தும் ஒருவர் என்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து பல்வேறு நபர்களைத் தொடர்புகொள்வது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இந்த எண் என்னுடையது அல்ல என்பதையும், அதிலிருந்து வரும் எந்த செய்திகளும் அல்லது அழைப்புகளும் முற்றிலும் போலியானவை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தயவுசெய்து இதுபோன்ற செய்திகளுக்கு பதிலளிக்கவோ அல்லது ஈடுபடவோ […]

என்றுமே விஜய்க்கு நல்லது மட்டுமே நினைக்கிறேன்…. நடிகர் அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார், கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததை கடந்த சில நாட்களுக்கு முன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கடுமையாக விமர்சித்திருந்தார். “இது துரதிஷ்டவசமான சம்பவம். ஒரு நபரின் தவறு மட்டுமல்ல, இது சமூகத்தின் மொத்தப் பொறுப்பு. நீண்ட நாட்களாக நடக்கக் காத்திருந்த விபத்து இது” என்று கூறிய அஜித், ஆந்திரா தியேட்டர், பெங்களூர் கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் […]