சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடு-அசாமில் தலைமை தேர்தல் ஆணைய குழு ஆய்வு
அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் முழு குழுவினர் கவுகாத்தி வந்தனர். அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பதவிக்காலம் வரும் மே 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு அங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, அந்த மாநிலத்தில் மொத்தம் 2,49,58,139 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்காக பதற்றமான […]
கார் மீது விழுந்த ராட்சத கம்பம் – சமாஜ்வாதி கட்சி தலைவர் பலி
உ.பி பிரதாப்கர் மாவட்டம் அந்து பகுதியில், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய நிர்வாகி லால் பகதூர் யாதவ் (47) சென்ற கார் மீது, சுமார் 1,000 கிலோ எடையுள்ள ராட்சத மின் கம்பம் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாபுகஞ்ச் சந்தை அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தொழிலாளர்கள் உயர் அழுத்த மின் கம்பத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தக் கம்பம் சமநிலையை இழந்து அவ்வழியாகச் சென்ற கார் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. […]
சபரிமலை தங்கம் திருட்டு… எஸ்ஐடி விசாரணை- கேரளா ஐகோர்ட்
சபரிமலை தங்கத் திருட்டு குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் எஸ்.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது என கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை தேவசம் போர்டு கண்காணித்து வருகிறது எனவும் கேரளா ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் பதில் மனு தாக்கலுக்கு பின் விசாரிப்பதாக கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தில்’லான பாட்டியை தேடி சென்று கெளரவித்த போலீஸ்
டிராபிக் போலீசுக்கே சவால் விடும் வகையில், கேரளாவின் பிரபாவதி என்ற பாட்டி துணிச்சலுடன் செய்த சம்பவம் SM-ல் வைரலாகி வருகிறது. கோழிக்கோட்டில் ஸ்கூட்டரை நடைபாதையில் ஓட்டி வந்தவரை தடுத்து, அவரை சாலையில் பயணிக்க வைத்த பாட்டியை பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் கேரள போலீசார் பிரபாவதியின் வீட்டிற்கே நேரில் சென்று அவருக்கு சால்வை அணிவித்து கெளரவித்துள்ளனர். அதன் வீடியோவையும் பகிர்ந்துள்ளனர்.
ஜோதிடர் பேச்சை கேட்டு தாயை தலையணையால் அமுக்கி கொன்ற கொடூர மகள்..
கர்நாடகா மாநிலம் அனூபனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுசித்ரா (33) என்பவரின் தந்தை சுமார் 18 மாதங்கள் முன்பு உயிரிழந்தார். தந்தையின் திடீர் மரணத்தால் வேதனையில் இருந்த சுசித்ரா, இது குறித்து ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது சுசித்ராவின் தந்தை உயிரிழப்புக்கு அவரது தாயார் புஷ்பாவதி செய்த பில்லி சூனியம் தான் காரணம் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார். இதனை அப்படியே நம்பிய சுசித்ரா, தனது 55 வயது தாயின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். […]
பாத்திரம் கழுவும் ரசாயனத்தை குடித்த 4 பேர் பலி…ராஜஸ்தானில் சோகம்
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஆலோலி கிராமத்தில், மது என நினைத்து பாத்திரம் கழுவும் ரசாயன திரவத்தை அருந்திய மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆலோலி கிராமத்தில் நடைபெற்ற ஒரு இல்ல திருமண விழாவில், பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் ஒப்பந்த வேலையை ரத்தன், சுஷிலா தேவி, ஜம்னி தேவி மற்றும் பதாமி தேவி ஆகிய 4 பேரும் செய்துள்ளனர். வேலை முடிந்ததும், அங்கிருந்த பாத்திரம் கழுவும் திரவத்தை மது என்று தவறாகக் […]
மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார்.. புதுச்சேரி முதல்வர் அதிரடி
புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார் என்று சட்டசபையில் ரங்கசாமி அறிவித்தார். Puducherry Assembly unanimously passes resolution seeking statehood – India Today புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில், அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நடந்தது. அப்போது எதிர்கட்சித்தலைவர் குறுக்கிட்டு, புதுவை எங்கும் போராட்டம் நடக்கிறது. ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தை அரசு […]
சர்ச்சை வீடியோவால் உயிரிழந்த தீபக்-ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்
கேரளாவில் பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் கைதான யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமின் வழங்கியது. 21 நாட்கள் சிறையில் இருந்ததை கணக்கில் கொண்டு நிபந்தனைகளுடன் கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் அளித்தது
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு!
கேரளா: மண்டல, மகர விளக்கு பூஜைக் காலத்திற்கு பிறகு மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று (பிப்.12) மாலை திறக்கப்படுகிறது. பிப்.17 வரை சபரிமலை நடை திறக்கப்பட்டிருக்கும்; sabarimalaonline.org.in மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் ஒடிசா பயிற்சியாளர் மாயம்..ஹெலிகாப்டரில் தேடுதல்
ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த சார்த்தக் மகாபத்ரா (23) என்பவர், வணிகக் கப்பல் ஒன்றில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். அந்தக் கப்பல் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, கடந்த 2ம் தேதி இரவு 9 மணியளவில் அவர் தனது தாயுடன் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் பேசியுள்ளார். அப்போது அவர் மிகவும் இயல்பாக இருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் 3ம் தேதி அதிகாலை 6.15 மணியளவில் தனது அறைக்குள் சென்ற சார்த்தக், அதன் […]
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்-ரிக்டர் 4.5 ஆக பதிவு
மியான்மர் நாட்டில் இன்று (பிப்.5) அதிகாலை ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 115 கி.மீ. ஆழத்தில், 24.91 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 95.08 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 28ஆம் தேதி ஏற்பட்ட ரிக்டர் 7.7 மற்றும் 6.4 அளவிலான நிலநடுக்கங்களில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
நடுரோட்டில் நமாஸ் செய்த பெண்- போக்குவரத்து பாதிப்பு
கேரளா மாநிலம் பாலக்காடு ஐஎம்ஏ ஜங்ஷனில் போக்குவரத்து இடையூறாக வயதான பெண் ஒருவர் நமாஸ் செய்தார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையின்போது குடும்ப பிரச்சனையை தீர்க்க கோரி இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். சாலையில் கார், டூவீலர், லாரி என்று ஏராளமான வாகனங்கள் சென்று வந்தனர். ஆனால் அதனை கண்டுக்கொள்ளாத அந்த பெண் சாலையில் ‛நமாஸ்’ செய்தார். நடுரோட்டில் அவர் ‛நமாஸ்’ செய்ததால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதுபற்றி […]
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் மரணம்
மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த 8 இருக்கைகள் கொண்ட தனி சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 6 பேரும் உயிரிழந்துள்ளனர். முற்றிலும் எரிந்து விமானம் விபத்து ஏற்பட்டுள்ளது. அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த எஜமானருக்காக சுடுகாட்டிலேயே காத்துகிடக்கும் ஜீவன்
மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள படோரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் பிரஜாபதி. இவர் தனது வளர்ப்பு நாயின் முன்னிலையிலேயே வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜகதீஷின் உடலை பிரிய மனமில்லாமல் அவரது வளர்ப்பு நாயும் உடன் சென்றுள்ளது. பின்னர் ஜகதீஷின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், தனது எஜமானர் எழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் அங்கேயே அவரது வளர்ப்பு நாயும் காத்துக் கிடந்தது.ஜகதீஷ் இறந்தது முதல் அவரது வளர்ப்பு […]
திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்- துவக்கம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் என மொத்தம் நான்கு புதிய ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம் – தாம்பரம், நாகர்கோவில் – மங்களூரு சந்திப்பு, மற்றும் திருவனந்தபுரம் – சார்லப்பள்ளி ஆகிய வழித்தடங்களில் இந்த நவீன அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இவற்றுடன் குருவாயூர் – திருச்சூர் இடையிலான பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த […]
பஸ்சின் டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து..3 பேர் பலி
ஆந்திராவின் நந்தியாலில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன. நெல்லூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி 36 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியதில் மூவர் உயிரிழந்தனர். பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள், கிளீனர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீப்பிடித்ததில் இருந்து தப்பிக்க முயன்ற 12-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். கர்னூல் மாவட்டத்தில் பெங்களூரு–ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல் இன்று அதிகாலையில் ஒரு பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. காளேஷ்வரம் […]
கேரளாவில் வைரலான வீடியோ – பெண் கைது
தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, தீபக் என்பவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதா என்ற பெண் கைது செய்யப்பட்டார். கேரளாவில், பேருந்தில் தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக பெண் ஒருவர் தீபக் என்பவர் மீது குற்றம் சாட்டி, அது தொடர்பான காணொளியை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். ஆனால், தீபக் அப்படி தவறாக நடந்து கொள்ளவில்லை என மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின், அந்த […]
ஆபாச வீடியோ விவகாரம்- கர்நாடக டிஜிபி சஸ்பெண்ட்
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை ரன்யா ராவ்.. இவருக்கு 33 வயதாகிறது.. கடந்த 2014ம் ஆண்டு, நடிகர் கிச்சா சுதீப்பின் மாணிக்யா என்ற படத்தில், ஹீரோயினாக அறிமுகமானவர்.. முதல் படத்திலேயே கன்னட ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்த ரன்யா ராவ், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2016ல் வெளியான “வாகா” என்ற படத்தில் ஹீரோயினாக ரன்யா ராவ் நடித்திருந்தார். பிரபல நடிகைகடந்த வருடம் துபாயிலிருந்து பெங்களூரு வந்த நடிகை ரன்யா ராவ், உடலெங்கும் தங்க நகைகளை அணிந்து வந்ததால் […]
போட்டி போட்டு பீர் குடித்த 2 இன்ஜினியர்கள் பலி-ஆந்திராவில் சோகம்
ஆந்திராவில் பந்தயம் போட்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்தனர். அன்னமய்யா மாவட்டம், பண்டவாரி கிராமத்தைச் சேர்ந்த மணிகுமார் (35), புஷ்பராஜ்(27) உயிரிழந்தனர். சங்கராந்தி விடுமுறையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் வந்த நண்பர்களின் விபரீத விளையாட்டால் உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்- சொகுசு கார் மோதி ஒருவர் பலி- 16 பேர் காயம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதி ஒருவர் பலியான நிலையில், 16 பேர் காயம் அடைந்தனர். ஜெய்ப்பூரில் சாலையோர உணவகங்களில் கூடியிருந்த மக்கள் மீது சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது. சொகுசு கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர் தொழிலதிபர் தினேஷ் ரின்வா என போலீசார் தகவல் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள அ.போ.கழகத்தின் விளம்பர தூதுவராக மோகன்லால் நியமனம்
கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விளம்பரத் தூதுவராக நடிகர் மோகன்லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேஎஸ்ஆர்டிசியை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு வருவதில் இடதுசாரி அரசாங்கத்தின் அர்ப்பணிப்புமிக்க முயற்சிகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன என்று அமைச்சர் கணேஷ் குமார் எடுத்துரைத்தார். இந்தச் சாதனைக்குப் பின்னால் புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தியதும், அத்தியாவசிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியதும் முக்கியக் காரணங்கள் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். எதிர்காலத் திட்டங்களைப் பற்றிப் பேசிய அமைச்சர், விரைவில் வணிக வகுப்புப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார். இந்த […]
லிவ்இன் காதலனை குத்திக்கொன்ற காதலி.. போதையில் சம்பவம்
நொய்டாவில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தென்கொரிய காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த மணிப்பூர் இளம்பெண் கைது செய்யப்பட்டார். தென்கொரிய நாட்டைச் சேர்ந்த டக் ஹீ யூ (47) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி தனியார் நிறுவனத்தில் மேனேஜராகபணியாற்றி வந்தார். இவரும் மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான லுஞ்சியானா பமை என்ற பெண்ணும், கடந்த 2 ஆண்டுகளாக கிரேட்டர் நொய்டா செக்டர் 150 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திருமணம் […]
வெனிசுலா மீது தாக்குதல்களை தொடுத்த அமெரிக்கா! காரணம் என்ன?
வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட பல்வேறு பகுதிகளில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெனிசுலா அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஜனவரி 3 அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதல்களில் ராணுவ வசதிகள் மற்றும் சிவிலியன் இடங்கள் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெடிப்புகள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள் காணப்பட்டதாக சாட்சிகள் தெரிவித்தனர். இதனால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வெனிசுலா அரசு வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவின் இந்த ராணுவ ஆக்கிரமிப்பு நாட்டின் இறையாண்மையை மீறியது. இயற்கை வளங்கள், குறிப்பாக […]
உபியை வாட்டி வதைக்கும் கடும் குளிர்
உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிரும், அடர் மூடுபனியும் பொதுமக்களை நிலைகுலையச் செய்துள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புத்தாண்டு தினத்தில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் சூரியனைக் காண முடியாத அளவுக்கு மேகமூட்டத்துடனும், அடர் மூடுபனியுடனும் காணப்பட்டது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலையில் சற்று உயர்வு இருக்கும் என்பதால் மக்கள் சற்று […]
17 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு விவாகரத்து..
தெலங்கானா மாநிலத்தில் 17 ஆண்டுகள் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு ஒரு தம்பதி விவாகரத்து பெற்றுள்ளனர். தெலங்கானாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் – விஜயலட்சுமி தம்பதிக்கு 2002-ல் திருமணம் நடந்தது. 2003-ல் பெண் குழந்தை பிறந்த நிலையில், அந்த ஆண்டு முதலே கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து வாழ தொடங்கினர். 2008-ம் ஆண்டு மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் ஸ்ரீகாந்த் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் மகளின் நலனுக்காக கணவருடன் சேர்ந்து […]
போலி மருந்து விவகாரம்… கைதான நிர்வாகி காங்., கட்சியில் இருந்து நீக்கம்
புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் கைதான நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் கோடி போலி மருந்து வழக்கில் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் உடந்தையாக இருந்துள்ளார். இவ்வழக்கில் போலி மருந்து தொழிற்சாலை நடத்திய முக்கிய குற்றவாளி ராஜா, போலி மருந்து தொழிற்சாலை ஒப்பந்ததாரரான என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன் உட்பட […]
ஓடும் காரில் ஐடி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓடும் காரில் ஐடி நிறுவன பெண் மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உடைந்தையாக இருந்த பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள தனியார் ஐடி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜிதேஷ் சிசோடியா தமது பிறந்தநாளையொட்டி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் அந்நிறுவனத்தின் பெண் மேலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விருந்து முடிந்து நள்ளிரவு […]
பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி- ஆந்திராவில் பரிதாபம்
ஆந்திர பிரதேசம், மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 26, 2025) காலை பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த குவாலிஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை கடந்து எதிர்த்திசையில் வந்த தனியார் பேருந்து மீது வேகமாக மோதியது. இதில் கார் முற்றிலும் நொறுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் காரில் பயணித்தவர்கள் என்று தெரிகிறது.விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக […]
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து- அவசர உதவி எண்கள் அறிவிப்பு
அசாம் மாநிலத்தின் சாய்ராங் நகரில் இருந்து புது தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 20507) அசாமின் நாகான் மாவட்டம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, யானைக் கூட்டம் ஒன்று ரயில் பாதையைக் கடக்க முயற்சித்துள்ளது. ரயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தியபோதும், ரயிலை முழுமையாக நிறுத்த முடியவில்லை. இதனால் விபத்து ஏற்பட்டிருக்கிறது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் கூட்டத்தின் மீது மோதியதில், 8 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. யானைகள் மீது மோதியதன் […]
மனைவி-மகள்களை கொன்று புதைத்த கொடூரம்- உபியில் பரிதாபம்
உத்தரப்பிரதேச மாநிலம் சாமெலியை சேர்ந்தவர் பாரூக், இவரது மனைவி தாஹீரா. இவர்களுக்கு 14 வயதில் ஷாரீன் என்ற மகளும், 6 வயதில் அஃப்ரீன் என்ற மகளும் இருந்தனர். தாஹீரா ஒரு இடத்திற்கு வேலை சென்று வருவது வழக்கம். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தாஹீராவோ, அவர்களது மகள்களோ வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவர்களது நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஊர் தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கிராமத்து தலைவர், தங்கள் கிராமத்தில் வசித்துவந்த பெண் […]
சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 27 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் 16 அன்று மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பம்பை ஆற்றில் புனித நீராடி, 18 படிகளை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜை டிசம்பர் 26 அன்று நடைபெற உள்ள […]
மாரடைப்பால் உயிருக்கு போராடிய கணவன்..லிப்ட் கேட்டு தவித்த மனைவி!
பெங்களூரு : நகரின் பிஸ்யான சாலையில் நடந்த பரிதாப சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரூபா என்ற பெண், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடித்த கணவர் வெங்கட்ரமணாவை காப்பாற்றும் படி சாலையோரம் நின்று கண்ணீர் மல்க கதறினார். வாகனங்களை நிறுத்தி உதவி கேட்டு கெஞ்சியபோதும், பல வாகன ஓட்டிகள் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர். இதனால் உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் போனதால் வெங்கட்ரமணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் நடந்தது பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு பிஸ்யான […]
பீகார் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பாட்னாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் கடந்த 15-ந்தேதி அரசு விழா ஒன்று நடந்தது. இதில் 1,283 ஆயுஷ் டாக்டர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் நிதிஷ் குமார் வழங்கினார். விழாவில் பீகார் துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்ட மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் பணி நியமன ஆணையை பெறுவதற்காக, இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்தவாறு மேடையேறி வந்தார். அவரை பார்த்த நிதிஷ் குமார், முதலில் ஹிஜாப்பை விலக்குமாறு சைகை […]
மெஸ்ஸி பங்கேற்ற விழாவில் வன்முறை-அமைச்சர் பதவி ராஜினாமா
மேற்கு வங்க மாநில அரசியலில் இன்று ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் பிஸ்வாஸ் அவர்கள், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த சர்வதேச கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவமே இந்த ராஜினாமாவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். நிகழ்ச்சியின் நோக்கம்: மாநிலத்தில் கால்பந்து […]
புதுச்சேரி-SIR பணிக்கு பின் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில்1 லட்சத்து 3 ஆயிரத்து 477 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் பத்து சதவீதம் என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு […]
புதுவையில் 85,500 வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
புதுச்சேரி, தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வாக்காளர் சிறப்பு தீவி திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அண்மையில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். முன்னதாக புதுவையில் 8,51,775 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. […]
ஆம்னி பஸ் கவிழ்ந்து15 பேர் பலி- ஆந்திராவில் சோகம்
ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் மாரெடுமில்லி கேட் ரோடில் தனியார் பேருந்து கழுகில் கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் உயிரிழந்துள்ளனர். விசாகப்பட்டினத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பத்ராச்சலத்திற்கு சென்ற பேருந்து, ராஜுகரி மெட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்து ஆழமான கழுகில் விழுந்தது. விபத்தில் 37 பயணிகள் (சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட) பாதிக்கப்பட்டனர், அவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.விபத்து கடந்த இரவு (டிசம்பர் 11) நிகழ்ந்தது. பேருந்து சித்தூர் மாவட்டத்தைச் […]
கேரள உள்ளாட்சித் தேர்தல்- வாக்களித்த முதல்வர் பினராயி விஜயன்!
கேரளாவில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில், முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று காலை தனது வாக்கைச் செலுத்தினார். கண்ணூர் மாவட்டம், பய்யனூர் தொகுதியில் உள்ள இடக்கடவு சேரிக்கல் ஆரம்பப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அவர் ஆர்வத்துடன் வாக்களித்தார். மனைவி கமலா விஜயன் உடன் சென்று வாக்களித்த பினராயி விஜயன், வாக்காளர்களிடம் உரையாடியும், குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டும் நேரம் செலவிட்டார். இரண்டாம் கட்டத் தேர்தல் 7 மாவட்டங்களில் (கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், […]
புதுச்சேரியில் ரூ.750 மதிப்பிலான பொங்கல் பரிசு
பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதில் அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு, சர்க்கரை, நெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்த பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விதிமுறைகளை மீறிய புஸ்சி – எச்சரித்த பெண் காவல் உயரதிகாரி
காவல்துறை விதிமுறைகளை மீறிய புஸ்சி ஆனந்த் – புஸ்சி ஆனந்தை கடுமையாக எச்சரித்த பெண் காவல் உயரதிகாரி புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போதிய அளவில் கூட்டம் சேராததால், QR-CODE அனுமதி சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்ககோரி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் காவல் அதிகாரி, உங்களால் ஏற்கனவே நிறைய பேர் உயிரிழந்திருக்கின்றனர். யாரேனும் உயிர் இழந்தால் […]
புதுச்சேரி விஜய் மக்கள் சந்திப்புக்கு 5,000 பேருக்கு மட்டும் தான் அனுமதி
புதுச்சேரியில் நாளை நடைபெறும் தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு பணியில் 1000ம் போலீசார் ஈடுபட இருப்பதாக சீனியர் எஸ்பி கலைவாணன் பேட்டி அளித்தார். எல்லையில் 17 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியில் உள்ள போலீசார் பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்புவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தவெக பொதுக்கூட்டம் தொடர்பாக சீனியர் எஸ்பி கலைவாணன் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், “புதுவை ரோடுகள் குறுகியதாக உள்ளதால் ரோடு ஷோவுக்கு அனுமதி தராமல், தவெக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி […]
ரசகுல்லாவால் நின்ற திருமணம்.. ஓட்டலில் மணமகன் – மணமகள் வீட்டார் அடிதடி
பீகார் மாநிலம் புத்தகயாவில் தனியார் ஹோட்டலில் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மணமகள் குடும்பத்தினர் ஹோட்டலில் தங்கியிருந்தனர். மணமகன் குடும்பத்தினர் மேள, தாளங்கள் மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருந்து ஹோட்டலுக்கு வந்தனர். அங்கு மணமகன் வீட்டாருக்கு மணமகள் வீட்டார் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு மணமகள் – மணமகன் ஆகியோருக்கு திருமணத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் செய்யப்பட்டது. அதன்பிறகு மணமகள் வீட்டார் சார்பில் ஹோட்டலில் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. விருந்தில் ரசகுல்லா […]
இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
டிட்வா புயலால், இலங்கையிலும் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. திருகோணமலை, பதுல்லா, மாத்தறை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இலங்கையில் வெள்ளம், நிலச்சரிவால் இதுவரை, 56 பேர் பலியாகி உள்ளனர். டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். மேலும், அங்கு நிலைமை மேம்படுத்த தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் சொல்லியிருந்தார். அதன்படி, […]
இலங்கை விமான நிலையத்தில் உணவு கிடைக்காமல் 150 தமிழர்கள் தவிப்பு
துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த சுமார் 300 பேர், கடந்த 27 ம் தேதி இலங்கையின் மத்தளை விமான நிலையம் வந்துள்ளனர். புயல் காரணமாக அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 1 நாள் முழுக்க அங்கு தவித்துள்ளனர். அங்கிருந்து பிறகு கொழும்பு விமான நிலையத்துக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட இருந்த நிலையில், டிட்வா புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பேர் […]
திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் கால்வாயில் குதித்து தற்கொலை
சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தாலுகா திண்டதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லதா (23). இவருக்கு, பத்ராவதி தாலுகா ஒலேஒன்னூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹன்சின சித்தாபுராவை சேர்ந்த குருராஜ் என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணமான சில நாட்கள் தம்பதியினர் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பின்னர், லதாவை குருராஜ் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொடுமைப்படுத்தியும், மனரீதியிலான தொல்லைகளும் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் லதாவிடம் இருந்து செல்போன் அழைப்பு ஏதும் வராததால், […]
முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு
பீகாரில் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவியின் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ரப்ரி தேவி ஆகியோர் கடந்த 20 ஆண்டுகளாக பாட்னாவில் உள்ள 10, சர்க்குலர் சாலை இல்லத்தில் வசித்து வந்தனர். முன்னாள் முதல்வர்களுக்கு ஆயுட்காலம் முழுவதும் அரசு பங்களா ஒதுக்கீடு செய்யும் முறையை கடந்த 2019ம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து […]
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து-4 பேர் பலி!
ஹாங்காங் : வடக்கு பகுதியில் உள்ள தை போ (Tai Po) பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) என்ற 35 அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமில் நவம்பர் 26 அன்று பிற்பகல் 2:51 மணிக்கு (உள்ளூர் நேரம்) திடீரென பெருந்தீ ஏற்பட்டது. இந்த குடியிருப்பு 8 பிளாக்கள் கொண்டது, 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தீ விபத்து ஒரு பிளாக்கில் தொடங்கி, வெளியில் அமைக்கப்பட்ட பாம்பூ (bamboo) ஸ்கேஃபோல்டிங் மூலம் விரைவாக அனைத்து பிளாக்களுக்கும் […]
சபரிமலையில் ஒரே நாளில் 1.18 லட்சம் பேர் தரிசனம்
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அதில் முக்கியமாக மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள். அப்போது இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று 18 படிகளை ஏறி நெய் அபிஷேகம் செய்து ஐயப்பனை […]
பெங்களூருவில் ஏடிஎம் வாகனத்தை கடத்திச் சென்று ரூ.7.11 கோடி கொள்ளை
பெங்களூரில் பட்டப் பகலில் நடந்த துணிகரக் கொள்ளை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிஎம்எஸ் நிறுவனத்தின் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கொண்ட வேனை, ஜேபி நகர் அசோக் பில்லர் அருகே மூன்று முதல் நான்கு பேர் ஆயுதம் காட்டி தடுத்து நிறுத்தியுள்ளனர் தங்களை RBI அதிகாரிகள் என கூறி வாகன ஊழியர்களை மிரட்டிய கொள்ளையர்கள், பின்னர் டெய்ரி சர்கிள் பறக்கும் பாலம் வரை வேனை கடத்திச் சென்று பணத்தை இன்னோவா காரில் […]
ஆந்திராவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
ஆந்திராவில் டைகர்ஜோன் வனப்பகுதியில் இன்று காலை நடந்த துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் ஆந்திராவின் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். மாவோயிஸ்கள் பதுங்கியிருநு்த பகுதியில் ஆந்திர சிறப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியலுக்கு வந்த ஒரே மாதத்தில் எம்எல்ஏ ஆன பாடகி மைதிலி தாக்கூர்
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-இல், பிரபல மைதிலி பாடகர் மைதிலி தாக்கூர், பாஜகவின் சார்பில் அலிநகர் தொகுதியில் அழுத்தமான வெற்றி பெற்றுள்ளார். 25 வயதே ஆன இளம் பாடகர், கட்சியில் இணைந்து ஒரே மாதத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்ஜேடி வேட்பாளர் பினோட் மிஷ்ராவைத் தோற்கடித்துள்ளார். அவர் 84,915 வாக்குகளைப் பெற்று, தொகுதியில் 49.05% வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்த வெற்றி, பாஜகவின் NDA கூட்டணியின் பெரும் வெற்றியில் ஒரு சிறப்பு அத்தியாயமாக அமைந்துள்ளது, மேலும் […]
இன்ஸ்டா ரில்ஸ்- பயணிகள் நடுவில் ஓடும் ரயிலில் குளித்த வாலிபர் கைது
உத்தர பிரதேசத்தில், இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக ஓடும் ரயிலில் பயணிகளுக்கு நடுவே குளித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். உபியின் வீரன்கானா லட்சுமிபாய் ஜான்சி ரயில்வே ஸ்டேசன் அருகே சென்று கொண்டிருந்த ரயிலில், பிரமோத் என்ற வாலிபர் ஒருவர் இன்ஸ்டா ரீல்ஸ் போடுவதற்காக செய்த சம்பவம் பயணிகளை முகம் சுழிக்க வைத்தது. ரயில் பெட்டியின் கழிவறைக்கு வெளியே பயணிகள் நடந்து செல்லும் பாதையில், திடீரென வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து குளித்த வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த […]
துருக்கி ராணுவ விமானம் விபத்து… 20 வீரர்களும் பலி
துருக்கி ராணுவ சரக்கு விமானம் ஜியார்ஜியா எல்லை அருகே நேற்று விபத்துகுள்ளாது. 20 வீரர்களுடன் சென்ற துருக்கி ராணுவ விமானம் C-130 ஜார்ஜியா எல்லையில் விழுந்து நொறுங்கியது.
பீகார் சட்டமன்றத் தேர்தல்…குடும்பத்துடன் வாக்களித்த தேஜஸ்வி யாதவ்!
பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (06.11.2025) காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாநிலத்தின் 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தனது குடும்பத்தினருடன் பாட்னாவில் வாக்களித்தார். அவருடன் முன்னாள் முதல்வர்களான தந்தை லாலு பிரசாத் யாதவ் மற்றும் தாயார் ராப்ரி தேவி ஆகியோரும் வாக்களித்தனர். வாக்களித்த பின்னர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதிய பீகாரை உருவாக்க, […]
இமயமலையில் பனிச்சரிவு… 7 பேர் பலி.. பரிதாபம்
நேபாளத்தின் டொலஹா மாவட்டத்தில் இருந்து நேற்று உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமய மலையில் ஏறியுள்ளனர். மலையில் 5 ஆயிரத்து 630 மீட்டர் உயரத்தில் உள்ள யலொங் ரி சிகரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் மலையேற்ற வீரர்கள் தங்கி இருந்தனர். அப்போது அந்த முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேற்ற வீரர்கள் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பனிச்சரிவில் சிக்கி மாயமாகினர். அதேவேளை, 4 வீரர்கள் […]