திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இந்நிகழ்வில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழம் மற்றும் பொன்னான ஆயிரம் நாட்கள் குறித்த மடிப்பேடு அடங்கிய மங்களப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வே.சரவணன். மேயர் மு.அன்பழகன்,

மாவட்ட நகர் ஊரமைப்பு குழு உறுப்பினரும்,மத்திய மாவட்ட திமுக செயலாளருமான வைரமணி,
மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் மா.நித்யா, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.