இந்தியாவில் யுபிஐ (UPI), கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. அதே வேளையில், இணைய மோசடிகளும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. ஹேக்கர்களால் பணத்தை இழப்பவர்கள் அதனைத் திரும்பப் பெறுவதில் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

இதற்குத் தீர்வாக, டிஜிட்டல் மோசடிகளில் சிக்கிப் பணத்தை இழப்பவர்களுக்கு வங்கி மூலம் அதிகபட்சமாக ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

இந்தத் திட்டத்திற்கான விரிவான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. வரைவு அறிக்கை வெளியான பிறகு, பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு விதிமுறைகள் இறுதி செய்யப்படும். இந்த நடவடிக்கை இணைய மோசடிகளால் பாதிக்கப்படும் சாதாரண மக்களுக்குப் பெரும் ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.