தை முதல் நாளான இன்று (ஜனவரி 15) தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,320க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.13,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று விற்பனையாவது புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,090க்கும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.310க்கும், கிலோவுக்கு மட்டுமே ரூ.3,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.