திருப்பத்தூரில் 79 கோடி மதிப்பீட்டில் 8கி.மி அளவில் புறவழி சாலை அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு பகுதியில் திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் நகருக்கு புறவழிச் சாலை 79

கோடி மதிப்பீட்டில் சுமார் 8.150 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணியை துவக்க விழா நடைபெற்றது.

இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் பொதுப்பணி மற்றும்

நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எவ.வேலு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.

மேலும் இந்த இந்த புறவழி சாலை அமைக்கப்பட்டால் கசிநாயக்கன்பட்டி,


கதிரிமங்கலம், அச்சமங்கலம், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி, மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.