அதிமுகவில் இருந்து நீக்கப்பட் செங்கோட்டையன் இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வௌியான நிலையில் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவிடம் செங்கோட்டையன் வழங்கினார். தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கவுள்ளதாக தகவல் வௌியானது. இந்தநிலையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் செங்கோட்டையன் சந்தித்துள்ளனர். மேலும் செங்கோட்டையன் திமுகவில் இணைவாறா? அல்லது திமுகவில் இணைவாறா என கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.