கரூர் அதிமுக நிர்வாகி VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்
மாநிலம் முன்னேற, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் மாவட்ட அதிமுக மருத்துவ அணிச் செயலாளர், மருத்துவர் தர்மேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகி, தன்னை இன்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார்.
துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது
நெல்லிக்குப்பம் அருகே செம்மண் குவாரி விவகாரத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்தனர். துப்பாக்கியுடன் தகராறில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில், அதிமுக நிர்வாகி கைது செய்யபட்டார். துப்பாக்கி காட்டி தகராறில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கோபால் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அதிமுக நிர்வாகியின் பழைய வழக்கு.. திருச்சி போலீசின் அலட்சியம்
திருச்சி கருமண்டபம் பகுதியில் 2014 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையத்திலிருந்து ஒரு பெண் அடிக்கடி சத்துமாவு போன்ற பொருட்களை திருடி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதி பொது மக்கள் அவரை கையும் களவுமாக பிடித்து, அப்போதைய அதிமுக கோட்டத் தலைவர் ஞானசேகருக்கு தகவல் அளித்தனர். பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேசனில் எஸ்எஸ்ஐ பணியாற்றிய ராக்கெட் ராஜேந்திரன் என்ற போலீசாரின் மனைவிதான் அந்த தொடர் திருட்டில் ஈடுபட்டது என தெரிய வந்தது. […]
பாஜகவுக்கு 33 சீட் தான்”-உடைத்து பேசிய அதிமுக நிர்வாகி!
பாஜக 30 – 33 தொகுதிகளைத்தான் கேட்டுப் பெறும். தொகுதி கண்டறிவது பற்றி இன்னும் பேசப்படவே இல்லை. அதிமுக 160 -165 தொகுதிகளில் அதிமுக போட்டியிறுவது உறுதி. மற்ற தொகுதிகளைத்தான் மற்ற கட்சிகளுக்கு பிரித்துக் கொடுப்பார்கள்.” என அதிமுகவை சேர்ந்த சேலம் மணிகண்டன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் […]