திருச்சி மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் -கவுன்சிலர் அலுவலகம் திறப்பு
திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 – க்கு உட்பட்ட வார்டு – 33 ல் 2024-25 பொது நிதியிலிருந்துரூ.25 லட்சத்தில் கவுன்சிலர் அலுவலகம், மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.மண்டல குழு தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார்.துணை மேயர் திவ்யா தனக்கோடி வரவேற்றார். மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா முன்னிலை வகித்தார்.விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஸ் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் கவுன்சிலர் […]
விஜய் திருக்குறள் அவரது தோழர்களை உற்சாகப்படுத்த- அமைச்சர் மகேஸ்
விஜய் திருக்குறள் கூறியது அவர்கள் தோழர்களை உற்சாகப்படுத்த என திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை முன்னிட்டு திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் காமராஜர் சிலையில் இருந்து மௌன ஊர்வலமாக சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அண்ணாசிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் […]
இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப்பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கப்படும்- அமைச்சர் மகேஸ்
இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப்பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனை தொடர்பாக விரைவில் மூவர் குழு அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
திருச்சியில் குடிநீர் வழங்கும் திட்டம்-அமைச்சர் மகேஸ் பார்வை
திருச்சி கம்பரசம்பேட்டை நீர்உந்து நிலையத்தில் ஆய்வு – பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. புதிதாக இணைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்துதல் திருச்சி மாநகராட்சியுடன் 2011ல் சேர்க்கப்பட்ட திருவெறும்பூர் பேரூராட்சி, பாப்பாகுறிச்சி ஊராட்சி, எல்லக்குடி ஊராட்சி, கீழகல்கண்டார் கோட்டை ஊராட்சி மற்றும் ஆலத்தூர் ஊராட்சி, ஆகிய பகுதிகள் அடங்கிய 5 பழைய வார்டு (61, 62, 63, 64 மற்றும் 65) பகுதிவாழ் பொதுமக்களுக்கு CPHEEOன் […]
இது தேர்தல் நாடகம்-இபிஎஸுக்கு அமைச்சர் மகேஸ் பதிலடி
ஓய்வூதியத் திட்டம் குறித்தான இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இன்று (ஜன.19) கூறுகையில், “ஆட்சியில் இருந்தபோது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார். ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாகப் பறித்து, அரசு ஊழியர் எதிர்காலத்தையே 2003-ம் ஆண்டில் சிதைத்த அதிமுக, தற்பொழுது அரசு ஊழியர்கள் மீது திடீர் கரிசனம் காட்டுவதே வெறும் தேர்தல் நாடகம்தான்” என்றார்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15,000– மகேஸ் அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களுடன் இன்று காலை 11 மணியளவில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த மாதம் முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், பகுதிநேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளான ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் ஆகியவை குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக […]
இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் மகேஸ் பேச்சுவார்த்தை
சென்னையில் இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.15,000ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதியம் உயர்வு வழங்கி ரூ.15,000ஆக ஊதியம் தரப்படும். பொங்கல் பண்டிகையை இடைநிலை ஆசிரியர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக இடைக்கால நிவாரணமாக ஊதியம் உயர்ந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிச்சியம் நிறைவேற்றப்படும் […]
திருச்சி மாவட்டத்தில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு- அமைச்சர் மகேஸ்
திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட 2 கோடியே 22 லட்சத்து 91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் […]
மணப்பாறையில் என் வாக்குசாவடி- அமைச்சர் மகேஸ் துவங்கி வைத்தார்
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நகர, ஒன்றிய, பேரூர், பகுதியில் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி “என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பரப்புரையை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பூத் வாரியாக பரப்புரை கூட்டத்தை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் தொடர்சியாக மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னம்பட்டி பேரூராட்சி, வையம்பட்டி ஒன்றியம் சடையம்பட்டி, […]
பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் பஸ்… அமைச்சர் மகேஸ் ஏற்பாடு
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட் )திருச்சி மண்டலம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் மாணாக்கர்கள் மட்டும் எளிதாக பயணம் செய்யும் வகையில் கட்டணமில்லா நகர பேருந்துகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ஆகியோர் இன்று அண்ணா நகர், திருவெறும்பூர் பேருந்து நிலையம், காட்டூர் பேருந்து நிலையம், பால்பண்ணை […]