இணையம் மூலம் பண மோசடி… அரியலூா் அருகே 2 பேர் கைது

அரியலூா் அருகே இணையதளம் மூலம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். இலந்தைக்கூடம் கிராமத்தைச் சோ்ந்த சரவணவேல் மகன் சங்கா்கணேஷ் (41). பிசியோதெரபி மருத்துவரான இவா், தனியாக மருத்துவமனை நடத்தி வரும் நிலையில், கடந்த 2025 நவம்பா் மாதம் முகநூல் கணக்கில் வந்த விளம்பரத்தை நம்பி அதில் உள்ள கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டாா். அப்போது எதிா்முனையில் பேசிய நபா் பங்குச் சந்தை குறித்து இலவச வகுப்பு எடுப்பதாகவும், முதலீடு செய்தால் 5 […]

அரியலூர்- தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன் கைது

ஆண்டிமடம் அருகே இருசக்கர வாகனம் தராத தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகிறார்அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை.  இவரது மகன் மணிகண்டன். இவர் எப்போதும் தனது தந்தையிடம் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம். நேற்று இரவு இருசக்கர வாகனத்தை தருமாறு கேட்டு தந்தையிடம் வாக்குவாதத்தில் […]

அரியலூர்-காட்டுப்பன்றியை வேட்டையாடுவதாக தகவல்… வனக்காவலர் மீது தாக்குதல்

அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் ஊராட்சிக்குட்பட்ட மருதையாற்றின் அருகே, பழைய கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றியை, ஒரு கும்பல் வேட்டையாட முயல்வதாக கிடைத்த தகவலையடுத்து, வனத்துறை காவலர் விசுவநாதன் என்பவர் உடனடியாக இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்றுள்ளார். மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வந்த சூழலில், அதில் வேலை செய்த பணியாளர்கள் பொதுப்பணி துறையினர் மூலமாக, வனத்துறைக்கு காட்டுப்பன்றி பழைய கிணற்றில் விழுந்து கிடப்பதாக, தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரிலேயே விசுவநாதன் சம்பவ இடத்திற்கு […]

அரியலூரில் பரபரப்பை கிளப்பிய முட்டை போஸ்டர்

கடந்த ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை என திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று அரியலூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முட்டை என தலைப்பில் குறிப்பிட்டு அதன் கீழே முட்டை படத்தை அச்சிட்டு ‘பாஜக-அதிமுக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி’ எனும் வாசகங்களுடன் அரியலூரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அரியலூர்- திருச்சி சாலை, அரியலூர் – […]

விருத்தாசலம்- தென் அமெரிக்க மாப்பிள்ளையை கரம் பிடித்த தமிழ் பெண்

அரியலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவை சேர்ந்த மருத்துவர் வந்தனாவிற்கும் தென் அமெரிக்கா ஈகுவடாரை சேர்த்த மருத்துவர் ஆண்ட்ரஸ் ஆகியோருக்கு விருத்தாசலத்தில் இன்று தமிழ் மரபு படி திருமணம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகரில் வசிப்பவர் பாரதி சத்தியபாமா தம்பதியினர். இவர்களின் இளைய மகள் வந்தனா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக(MBBS) பயிற்சி முடித்து அமெரிக்காவில் உள்ள ரெட்கெர்ஸ் யுனிவர்சிட்டியில் பொது மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்பு (MD) முடித்துள்ளார். தற்பொழுது அமெரிக்காவில் […]

பழைய சென்டரல் பஸ் ஸ்டாண்டை, பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டாக்க கோரிக்கை

சத்திரம் பேருந்து நிலையத்தில் இருக்கும் அரியலூர் பெரம்பலூர் பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றுங்கள்? பிளீஸ்… திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் பெரம்பலூர் ஜெயங்கொண்டம் ஆகிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அங்கிருந்து புறப்படுகின்றன பேருந்துகள் அனைத்தும் அவர்களது நேரத்திற்கு முன்பாகவே அங்கு வந்து நிறுத்துவதன் காரணமாக சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் லால்குடி மண்ணச்சநல்லூர் சமயபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அஸ்வின் ஸ்வீட்ஸ் கடை அருகே திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக […]

அரியலூர்- அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து விளையாட்டு போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 15ம் தேதி கொண்டாடப்படும் நிலைகள் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பொங்கல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்திக் கொண்டாடி மகிழ்கின்றனர். அரியலூர் அரசு கலைக் கல்லூரி சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் வேஷ்டி மட்டும் புடவைகள் […]

அரியலூர்- விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை சரமாரி தாக்கிய பொதுமக்கள்

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகர் பகுதியில் சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்பு கற்கள் ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக செல்லும் கனரக டிப்பர் லாரிகளால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடையும் நிலை தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் இன்று அரியலூர்-பெரம்பலூர் புறவழிச்சாலையில் இருந்து, அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலை நோக்கி சுண்ணாம்பு சுரங்கத்திற்கு சென்ற கனரக டிப்பர் லாரி, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ராயம்புரம் ஊரைச் சேர்ந்த ரங்கராஜ் மீது மோதியது. இதில் காயம் அடைந்து ரத்தம் […]

அரியலூர்-பொங்கல் பரிசு-கரும்பு தோட்டத்தினை கலெக்டர்நேரில் ஆய்வு

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், உல்லியக்குடி கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (03.01.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுடன் முழுக்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்படி அரியலூர் மாவட்டத்தில் 2,51,161 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு […]

அரியலூர்- புத்தாண்டு கொண்டாட்டங்கள்… கட்டுப்பாடுகள் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள். பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் சாலையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது, வேகமாக பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகன சோதனைகள் செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், […]