புதிய மேம்பாலத்தினை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 12.02.2026 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் இரயில்வே 2பி சந்திக்கடவில் ரூபாய் 96.04 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை திறந்து வைக்கப்படவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடுப் பணிகள் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று (09.02.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் […]

புதிய ”ட” வடிவ மேம்பாலம்… அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய ‘ட’ வடிவ மேம்பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். வரும் 16ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைக்க உள்ளார் என தெரிவித்தார்.

செல்லப்பிராணிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா ? ஆய்வு.. மேயர் பிரியா தகவல்

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட கிழக்கு தெரு மைதானம் சந்திப்பு மற்றும் ஜெயராம் நகர் பகுதிகளில் நடைபெற்ற அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி தொடங்கப்பட்ட அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடர்ந்து 300 ஆவது நாளை எட்டியதால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டார். மேலும் […]

திருச்சி ஆழ்வார்தோப்பில் எம்பி துரை வைகோ டூவீலரில் ஆய்வு

திருச்சி மாநகர் மேற்கு சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் சுமார் 40 வருடத்திற்கு முன்பு அப்பகுதியில் குடியிருப்பு இல்லாத நேரத்தில் சமையல் எரிவாயு கிடங்கு செயல்பட ஆரம்பித்தது. இந்நிலையில் சமையல் எரிவாயு கிடங்கு அமைந்துள்ள பகுதி தற்போது சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருப்பு பகுதியாக உள்ளது. எனவே, சமையல் எரிவாயு கிடங்கு மாற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் ஆய்வு […]

ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் திருச்சி ஐஜி ஆய்வு

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகம், மற்றும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு… திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் அரியலூர் மாவட்டகாவல் அலுவலகத்திற்கு வருகை புரிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரியுடன் மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். இதனையடுத்து காவல் அலுவலகத்தில் இயங்கும் காவல்துறை புகைப்பட பிரிவினை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள், பராமரிக்கப்படும் பதிவேடுகள் […]