வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உற்சவரம்பு 5% என்று குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25% என்றவாறு நிர்ணயம் செய்திட […]
கரூரில் தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கரூரில், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தினர் இணைந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் முருகவேல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அளவில் பொறியாளர்கள் கூட்டமைப்பினர் மற்றும் வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து […]
நாமக்கல்லில் 4-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து நாமக்கல்லில் 4-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஒன்றியம், பிலிக்கல்பாளையம் முதல் கொடுமுடி வரை, காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைப்பதற்கான திட்டத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டு வைத்திருக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி உயர்மட்டப் பாலம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்ட […]
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தித்திற்கான பெயர் மாற்றத்தை அதரிக்கும் அனைவரும் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள்…துரைவைகோ.எம்.பி.,
100 நாள் வேலை உறுதித் திட்டத்தை முடக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சி குண்டூர் பகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை திருச்சி தொகுதி உறுப்பினர் துரைவைகோ பங்கேற்று பேசுகையில்,கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கொண்டுவந்தது. […]
ஒன்றிய-பாஜ அரசை கண்டித்து… திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துமகாத்மாகாந்திபெயரைநீக்கி உழைக்கும் மக்களை வஞ்சிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்தலைமையில் புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் ,சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகர செயலாளர்கள் எம்.லியாகத்தலி,ராஜேஷ், மு.க.ராமகிருஷ்ணன், சண்முகம் , மணிமாறன் , (திமுக) , பெனட்அந்தோனிராஜ் (காங்கிரஸ்) […]
ராமேஸ்வர மீனவர்கள் 12 பேர் கைது- டிச.26ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வர மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளதைக் கண்டித்து, நாளை மறுநாள் (டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை) ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களை, நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது இலங்கையின் மயிலிட்டி […]
டிச.,22ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம்… திருமா அறிவிப்பு
திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-கார்த்திகை மாதத்தின் போது திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள வழக்கமாகும். அதற்குப் பதிலாக அந்த மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சமூகப் பிரிவினைவாத சனாதன சக்திகள் பிரச்சினைகளை எழுப்பி வருகின்றன. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் 1996 இல் தள்ளுபடி செய்துவிட்டது. “எங்கே தீபம் ஏற்ற வேண்டும் என்பதை இந்து […]
மத்திய அரசை கண்டித்து.. த.மா.வி.தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றவுள்ள மத்திய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றி, அதற்குப் பதிலாக ‘புஸ்யா பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா’ என்று பெயர் சூட்ட முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து,கரூரில் தமிழ் […]
கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்ட போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் […]
கரூர் வெண்ணைமலை நிலப்பிரச்னை.. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இனாம் நிலப் பிரச்சனை – பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளது.இந்நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருக்கக்கூடிய நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானது என சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், […]
கொட்டும் மழையில் கையில் தட்டுடன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் பனகல் பில்டிங் அருகில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைகளில் தட்டு ஏந்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை கிளப்பியது. மாற்றுத் திறனாளிக்கான இட ஒதுக்கீட்டை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசாணை எண் 24ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைகளில் தட்டு ஏந்தி கொட்டும் மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து, தஞ்சை பனகல் […]
மெட்ரோவுக்கு அனுமதி கொடுக்காத பாஜகவை கண்டித்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள செஞ்சிலுவை சங்கம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.. இந்த ஆர்ப்பாட்டம் மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கான கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது, தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவது என தொடர்ந்து தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் புறக்கணிக்கும் ஒன்றிய பாஜக அரசு, […]
SIR பணியை கைவிட கோரி-24ம் தேதி ஆர்ப்பாட்டம்…திருமா தகவல்
எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தில் சென்னையில் நவ.24ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன்; தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி. ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் பேசினேன். இலங்கை தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து பேசப்பட்டது. 20 […]
கரூர் – ஜாக்டோ -ஜியோஅமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்..
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க […]
SIR பணிக்கு எதிர்ப்பு…தமிழகம் முழுவதும் தவெக சார்பில் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்
தமிழகம், மேற்குவங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி நவம்பர் 4 முதல் ஒரு மாதம் நடத்தப்படும் என அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அதற்கான பணியும் முடுக்கி விடப்பட்டது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தவெக இந்த தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்து போராடி வருகின்றன. அந்த வகையில், வாக்காளர் பட்டியல் […]
சாதிசான்றிதழ் விவகாரம்.. நரிக்குறவர் மக்கள் ஆர்ப்பாட்டம்
கோவை: நரிக்குறவர் இன மாண்பை காத்திடும் வண்ணம் சாதி சான்றிதழில் பெயரை மாற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழங்குடியின சமூகத்தில் சேர்க்கப்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு தற்பொழுது சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நம் மக்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதன் மூலம் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சாதிச் சான்றிதழ்களில் நரிக்குறவன் என்ற “ன்” என்ற எழுத்தை குறிப்பிட்டு வழங்குவதாகவும் எனவே அவர்களின் மாண்பை […]