இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து மேகாலயாவின் ஷில்லாங்கிற்கு இண்டிகோ விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரானது. விமான பணியாளர் ஒருவர் கழிவறையில் கடிதம் இருந்ததை கண்டெடுத்தார். அதில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. உடனடியாக, விமானத்தில் இருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையில் சந்தேகப்படும் வகையில் எந்த பொருட்களும் சிக்கவில்லை. இதனால் மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. பயணிகள் […]
திருச்சி – சென்னை இடையே இண்டிகோ விமான சேவைகள் அதிகரிப்பு
திருச்சி மற்றும் சென்னை இடையே கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி முதல் தினமும் 2 சேவைகளாகக் குறைக்கப்பட்டிருந்த இண்டிகோ விமான சேவைகள், தற்போது 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னையிலிருந்து திருச்சிக்கு காலை 7.10, 10.10 மற்றும் மதியம் 2.35, மாலை 5.25 ஆகிய நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கமாக திருச்சியிலிருந்து சென்னைக்கு காலை 7.35, 10.35 மற்றும் மதியம் 2.55, மாலை 5.55 ஆகிய நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் விமான பயணிகள் பெரும் […]
பெங்களூரு சென்ற விமானம் வாரணாசியில் அவசர தரையிறக்கம்
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று நள்ளிரவு இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் மொத்தம் 216 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பறவை ஒன்று விமானத்தின் மீது பலமாக மோதியது. இதில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பறவை மோதியதால் விமானத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, பயணிகளின் பாதுகாப்பைக் கருதி உடனடியாக விமானத்தைத் தரையிறக்க முடிவு செய்தார். அருகே […]
இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து
விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. இதனால் அந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 5 நாட்களாக இது தொடர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு விமானங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் […]
விமான சேவை 4வது நாளாக பாதிப்பு…சென்னையில் இண்டிகோ விமானங்கள் மாலை 6 மணி வரை ரத்து
மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ரத்து செய்தது. இதில் டெல்லி விமான நிலையத்தில் 172 விமானங்களும் அடங்கும். மும்பை விமான நிலையத்தில் குறைந்தது 118 விமானங்களும், பெங்களூருவில் 100 விமானங்களும், ஐதராபாத்தில் 75 விமானங்களும், கொல்கத்தாவில் 35 விமானங்களும், சென்னையில் 26 விமானங்களும், கோவாவில் 11 விமானங்களும் […]