ஹோட்டல் ஊழியரைத் தாக்கிய போலீஸ்: சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்
ஈரோடு ஊரக உட்கோட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிக்கோயில் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் மோகன்குமார். இவர் கடந்த 08.02.2026 அன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, காஞ்சிக்கோயில் 4 ரோடு பகுதியில் உள்ள ‘சஷ்டி பாஸ்ட் புட்’ உணவகம் இரவு 10 மணிக்கு மேலாகியும் இயங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலைமைக் காவலர் மோகன்குமார், கடையை ஏன் இன்னும் மூடவில்லை எனக் கேட்டு அங்கிருந்த ஊழியர் ராம்துலால் மோண்டல் என்பவரைத் தகாத வார்த்தைகளால் […]
கோவையிலிருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல்
கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30 பண்டல்கள் வேட்டி மற்றும் 25 பண்டல்கள் சேலை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன ஓட்டுனர் கிரி, வேட்டி, சேலையை விற்பனைக்காக கொண்டு வந்த சந்தோஷ், அதனை வாங்கிய சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளனர். விலையில்லா வேட்டி, சேலைகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
இளம்பெண்ணிடம் அத்துமீறிய விசிக மாவட்ட செயலாளர் மகன் உட்பட 3 பேர் கைது: போலீ்ஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சின்னக்குளம் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொங்கல் விழாவில் 20 வயது இளம்பெண்ணிடம், ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மகன் நிஷாந்த் மற்றும் அவருடைய நண்பர்களான தீனதயாளன், சுரேஷ் ஆகியோர் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதனை தட்டிக்கேட்ட பெண்ணின் உறவினர்களையும் அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அந்தியூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
நடுரோட்டில் பெண் குத்திக்கொலை…கணவன் வெறிச்செயல்…
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன் (60 ).இவருக்கும், கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்த விஜயா (52) என்பவருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின்னர் விஜயா பெருந்துறை கொங்கு நகரில் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே செங்கோட்டையன் வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் செங்கோட்டையன் […]