வீடியோ கேமிற்குத் தடை விதித்ததால் 3 சிறுமிகள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு விஷிகா (16), பிராச்சி (14), பக்தி (12) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த மூன்று சிறுமிகளும் நீண்ட நாட்களாக ‘கொரியன் வீடியோ கேம்’ ஒன்றிற்குத் தீவிரமாக அடிமையாகியிருந்ததாக கூறப்படுகிறது. எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த சிறுமிகளை கண்டு கவலையடைந்த பெற்றோர், அவர்களை கண்டித்ததோடு வீடியோ கேம் விளையாட தடையும் விதித்துள்ளனர். இதனால் கடும் விரக்தி அடைந்த மூன்று சகோதரிகளும், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் […]

சொத்துக்காகக் கொடூரம்: 12 வயது மகனைக் கொன்று பெட்டிக்குள் மறைத்து வைத்த தந்தை கைது

உத்தரப் பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டம் ஜிஜோலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஊர்மிளா ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு மயங்க் (12) என்ற மகன் இருந்தான். ராஜேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களைத் தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கூறி அடிக்கடி ஊர்மிளாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று மீண்டும் மது போதையில் வந்த ராஜேஷ், இது தொடர்பாக மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கணவரைக் கண்டித்த ஊர்மிளா, வழக்கம் […]

கணவர் கிண்டல் செய்ததால் விபரீதம்: லக்னோவில் காதல் மனைவி தற்கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கணவர் விளையாட்டாகக் கேலி செய்ததைக் கேட்டு மனமுடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த ராகுல் சீனிவஸ்தா மற்றும் தனு சிங் தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். கடந்த புதன்கிழமை அன்று உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய இவர்கள், வீட்டில் தனு சிங்கின் தங்கை அஞ்சலியுடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ராகுல் தனது மனைவி தனு […]

இளைஞரை லாக்-அப்பில் வைத்து சித்ரவதை செய்து சிறுநீர் குடிக்க வைத்த காவலர்கள் – 7 பேர் மீது வழக்குப்பதிவு!

உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிப்ரஹரி கிராமத்தில் இரண்டு வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தன.இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 25 வயது இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கடந்த செப்டம்பர் 1ம் தேதி அந்த இளைஞரை லாக்-அப்பில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கியதில் அவரது இரண்டு விரல்கள் உடைந்தன. மேலும், ‘குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் என்கவுன்டர் செய்து விடுவோம்’ என்று மிரட்டியதோடு, அந்த இளைஞரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து […]

வடமாநிலங்களை வாட்டும் பனிப்பொழிவு: உத்தரப் பிரதேசத்தில் பள்ளி விடுமுறை நீட்டிப்பு

இந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களிலும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் நொய்டா, காசியாபாத், மதுரா உள்ளிட்ட நகரங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகிறது. குளிர் அலை காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்னதாக உத்தர பிரதேசத்தில் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 1-ந்தேதி […]