ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து….பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
சேலம் எருமாபாளையம் அருகே ஊதுபத்தி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. சேலம் அடுத்த எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நஷீர் (36). இவர் அப்பகுதியில் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு கப் சாம்பிராணி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, ஊதுபத்தி உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து, சேலம் மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் […]