சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பஸ்… மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து
கர்நாடகாவில் மைசூருவில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஸ் ஒன்றில் சபரிமலைக்கு வந்தனர். கோவிலில் தரிசனத்தை முடித்த அவர்கள், அதே பஸ்சில் கர்நாடகாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். பஸ் மலைப்பாதையில் சென்று கொண்டு இருந்தபோது காசர்கோடு அருகே சிட்டாரிக்கல் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. விபத்தில் பஸ்சில் இருந்து 45 பேர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். தகவலறிந்த போலீசார், சம்பவ பகுதிக்குச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, […]
ஜனவரி மாதம் வரை சபரிமலைக்கு 30 சிறப்பு ரயில்கள்
கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜனவரி 14ம் தேதி மகரஜோதி விழா நடக்கவுள்ளது. ஆண்டுதோறும் ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள், நடப்பாண்டும் இந்த கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, விரதம் இருந்தும் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். இப்பக்தர்களின் பயணத்திற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம், கோட்டயம், எர்ணாகுளத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்குகின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 4 […]
அரியலூர்- மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
ஐயப்ப சுவாமிக்கு கார்த்திகை மாதத்தில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். இதனையொட்டி கார்த்திகை மாதத்தின் முதல் தேதியான இன்று அரியலூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலபிரசன்ன சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் மற்றும் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தங்க கவச அலங்காரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து குருசாமி தலைமையில் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களுடன் சிறியவர்கள், பெரியவர்கள், கன்னிசாமிகள் என திரளான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். […]