ஜோதிடருடன் கள்ளக்காதல் – தட்டிக் கேட்ட கணவர் குடும்பத்தினர் மீது தாக்குதல்

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் சமாதானம் பேசச் சென்ற கணவர் மற்றும் உறவினர்கள் மீது மனைவி மற்றும் ஜோதிடர் உள்ளிட்ட கும்பல் நடத்திய கத்தியால் குத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் சித்தாப்பூர் தாலுகா அவரேகுப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் நாயக். இவரது மனைவி சுசித்ரா. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த கமலாகர் பட் என்ற ஜோதிடருடன் சுசித்ராவுக்கு […]

கோவையில் கொள்ளை சம்பவம்…சுட்டுப்பிடித்த 3 பேரில் ஒருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள், பணம் உள்ளிட்டவை திருட்டு போனது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடினர். பின்னர் குளத்துபாளையம் பகுதியில், கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். தற்போது அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து திருடிய 56 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் […]