கன்னியாகுமரியில் கடையடைப்பு; போலீசார் குவிப்பு

கன்னியாகுமரி கன்னியம்பலம் பகுதியில் உள்ள கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கன்னியாகுமரியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமான கடைகள் உள்ளன. குறிப்பாக கன்னியம்பலம் பகுதியில் 12 கடைகள் உள்ளன. இந்தநிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த நாகராஜன், கன்னியம்பலத்தின் பாரம்பரியத்தை கெடுக்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், கடைகளை அகற்றி பாரம்பரியத்தை காக்க வேண்டும் எனக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த […]