முன்னாள் காங்., எம்எல்ஏ சுந்தரம் காலமானார்…

1996-2001, 2006-2011 ஆண்டுகளில் காரைக்குடி தொகுதி காங்., MLA-வாக இருந்த இருந்தவர் சுந்தரம். இவர் தனியார் ஹாஸ்பிடலுக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக காரில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிகிச்சை அளித்தும், அது பலனளிக்காததால் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர்.

கரூர்- காங்., கட்சியின் புதிய தலைவர் காமராஜர் சிலைக்கு மரியாதை

கரூரில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ரமேஷ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில், 71 புதிய மாவட்டத் தலைவர்களை நியமித்து அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உத்தரவிட்டார். இதில் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராகப் பொறுப்பேற்ற ரமேஷ், இன்று மாவட்ட நிர்வாகிகளுடன் கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானாவில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை […]

தமிழக காங்.,நிர்வாகிகளுடன் சோனியா, ராகுல் ஆலோசனை

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்க எடுக்க உள்ளதாக கூறப்படுவதால் காங்கிரசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரது பேச்சு கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், அவை தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்ச்சனங்கள் எழுந்து வருகிறது. இதுபோன்ற பேச்சுக்களை காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காங்கிரசார் […]

காந்தி பெயர் நீக்கியதை கண்டித்து-காங்., கட்சியினர் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரிலிருந்து காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பொன்னமராவதி காந்தி சிலை முன்பாக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம. சுப்புராமன் தலைமை வகித்தார் .திரளான காங்கிரஸார் இதில் பங்கேற்றனர்.

திருச்சி காங்., நிர்வாகி மீது கம்பியால் தாக்குதல்

திருச்சி காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் நிர்வாகியை தாக்கிய மற்றொரு நிர்வாகி மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி பொன்மலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ஜுன் (35).திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் தில்லைநகர் வடக்கு விஸ்தரிப்பு ராமச்சந்திர நகரை சேர்ந்த ஸ்ரீ ராகவேந்திரா (43 ) .திருச்சி மாநகரில் காங்கிரஸ் கோட்ட தலைவராக உள்ளார். இவரிடம் அர்ஜுன் ரூபாய் […]

காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி. 1998 – 2017 மற்றும் 2019- 2022 வரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராகச் சோனியா இருந்துள்ளார். குறிப்பாக 1998 – 2017 காலகட்டத்தில் காங்கிரஸ் சிக்கலான நிலையில் இருந்த நிலையில், வெற்றிகரமாகக் காங்கிரஸை வழிநடத்தி 2004 தேர்தலில் வெற்றி பெற வைத்தவர் சோனியா காந்தி.79 வயதான சோனியா காந்தி, கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பு காரணமாகத் தீவிர அரசியலில் இருந்து சற்று விலகியே இருந்தார். இந்நிலையில் இவர் […]

காங்., முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்..

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுரேஷ் கல்மாடி(81) புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் . வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில நாட்களாக புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது உடல் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வைகுந்த் ஸ்மஷன்பூமியில் தகனம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு காங்கிரஸ் […]

மன்மோகன் சிங் நினைவு நாள்- காங்., சார்பில் மரியாதை

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் மறைந்த இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவு நாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முருகேசன் (வடக்கு) ராம. சுப்புராம். Ex MLA ( தெற்கு) ஆகியோர் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன் மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் இப்றாஹீம் பாபு வட்டார காங்கிரஸ் தலைவர் சூர்யா பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் […]

வரும் 27ம் தேதி டில்லியில் காங்., கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்

வரும் 27ம் தேதி காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக ஜி ராம்ஜி மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுப்பது என்பது குறித்தும் அன்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் மசோதா இன்று மக்களவையில் நிறைவேறிவிடும். நாளை மாநிலங்களவையிலும் நிறைவேறிவிடும். அது உடனடியாக சட்டமாகவும் மாறிவிட வாய்ப்பு உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த […]

சி.சுப்பிரமணியத்தின் 25ம் ஆண்டு நினைவு தினம்.. காங்., கட்சியினர் மரியாதை

கொங்கு மண்டலத்தின் வாழ்வாதாரமான விவசாயம் செழிக்க பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் கொண்டு வந்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சருமான சி.சுப்பிரமணியம் 25-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி-உடுமலை சாலை சின்னாம்பாளையத்தில், பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட அலுவலக வளாகத்தில் உள்ள சி.சுப்பிரமணியத்தின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பொள்ளாச்சி தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட […]