“இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!” பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்
டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளரை இந்தி கற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தி பாஜக கவுன்சிலர் மிரட்டும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் உள்ள லவ்லி பார்க்கில் கடந்த 12 ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிறுவர்களுக்குக் கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார். இவர் வசதியான மற்றும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் பாகுபாடின்றி பயிற்சி வழங்கி வந்த நிலையில், நேற்று முன்தினம் அந்தப் பூங்காவிற்கு வந்த பாட்பர்கஞ்ச் […]