அடகு கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் மகாதேவ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடையின் பின் புறத்தில் அவரது வீடு உள்ளது.நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த அவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார். நேற்றிரவு சுமார் 11 மணியளவில் கடையின் பின்புறமுள்ள ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 70 சவரன் தங்க நகை மற்றும் 20 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.கொள்ளை சம்பவம் […]

கோவை-மயான கொள்ளை பூஜையில் ஆக்ரோசமாக எலும்பை கடித்த பூசாரி

மகா சிவராத்திரி நிகழ்வையொட்டிம் மாசி மாத அமாவாசை நிகழ்வையொட்டியும் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மயான கொள்ளை நிகழ்வு நடைபெறும். அதே போல் கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள சுடுக்காட்டிலும் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் மயான கொள்ளை நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி சுடுக்காட்டில் மண்ணில் மாசாணியம்மன் சிலை செய்து அலங்கரிக்கப்பட்டிருந்து.பின்னர் பம்பை, உடுக்கை, இசைக்க அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து மயானத்திற்கு வந்த கோவில் பூசாரி […]

கோவையில் 1,206 மருத்துவ முகாம்கள்…17.83 லட்சம் பேர் பயன்

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ரெட்டியாரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தி.மு.க. ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லூர் யுவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பயனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டை மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட […]

கோவை- காதல் திருமணம் செய்த தம்பதி..கேக் வெட்டி கொண்டாட்டம்

பிப்ரவரி 14ம் தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் காதலர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்படிப்பகத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சாதி மத வேறுபாடுகளை கடந்து வாழ வேண்டும், சாதி மத பேதமற்ற சமுதாயத்தை அமைத்திட வேண்டும், […]

கோவை குண்டுவெடிப்பு 28-ம் ஆண்டு நினைவு தினம்- திதி கொடுத்து அஞ்சலி

கோவை குண்டுவெடிப்பு 28-ம் ஆண்டு நினைவு தினம் : நொய்யல் கரையில் திதி கொடுத்த அஞ்சலி செலுத்திய விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் – நினைவுத் தூன் அமைக்க வலியுறுத்தல். கோவை மாநகரையே உலுக்கிய 1998-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் 28-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.உயிரிழந்த 58 அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, பேரூர் நொய்யல் படித்துறையில் விஸ்வ இந்து பரிஷத்தின் தர்ம யாத்திரா அமைப்பு சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.விஸ்வ […]

கோவை-சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவி பலி- மறியல்-பரபரப்பு

கோவை மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோமேடு சரக்கு வாகன மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது சரக்கு ஆட்டோ ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் தனியார் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தால் மேலும் சில பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் […]

கோவையில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனை

கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் அரங்கேறிய குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்தனர் பலர் படுகாயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து வருடம் தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெறும். அதில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு […]

கோவை- வனப் பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்

கோவை, தடாகம் சுற்றுக்கு உட்பட்ட வன எல்லைப் பகுதியில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை தடாகம் அருகே வீரபாண்டி கிராமம், கொண்டனூர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 68). இவர் நேற்று (12.02.2026) மாலை தனது ஆடுகளை மேய்ப்பதற்காக வழக்கம் போல வன எல்லையை ஒட்டிய பகுதிக்குச் சென்று உள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் […]

தொழிலாளர் சிலையை கோவை கலெக்டர் திறந்து வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டான பகுதியில் அனிகா தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட உளியால் சிலை செதுக்குவது போன்ற அமைப்பினை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அவர்கள் திறந்து வைத்தார். கோவை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரத்தை அழகுப்படுத்தும் விதமாக ரவுண்டானா இடங்களில் சிலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதேபோல பல்வேறு இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக உப்பிலிபாளையம் அருகே உள்ள ரவுண்டானாவில் தொழில் நகரத்தை மையப்படுத்தி கையில் உளியால் […]

2025ம் ஆண்டில் 15.65 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் மலேசியா பயணம்

மலேசியாவை சிறந்த சுற்றுலா இலக்காக மேம்படுத்தும் நோக்கில், டூரிசம் மலேசியா, மலேசியா சுற்றுலா பயண முகவர்கள் சங்கத்துடன் இணைந்து “விசிட் மலேசியா இயர் 2026“-ஐ பிரபலப்படுத்த, “சேல்ஸ் மிசன் 2026“ எனும் பயண ஊக்குவிப்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மலேசியாவைச் சேர்ந்த 49 சுற்றுலா நிறுவனங்கள், கோவை மற்றும் கொங்குப் பகுதியில் உள்ள பல முக்கிய சுற்றுலா மற்றும் பயண வர்த்தக நிறுவனங்களும் கலந்து கொண்டன. இந்நிகழ்ச்சி, கொங்கு மண்டலத்துடன் […]

கோவை–கேரளா பேருந்து சேவை முடக்கம்

கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் அரசு பேருந்துகள் இன்று முழுமையாக இயக்கப்படவில்லை. நான்கு தொழிலாளர் சட்டங்களை நீக்கக் கோரி நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்திற்கு கேரள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு அளித்துள்ளதால் இந்த சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தின் காரணமாக, தமிழ்நாடு–கேரளா எல்லைப்பகுதிகளில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் டெப்போவிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு, திருவனந்தபுரம், எர்ணாகுளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு […]

குடியிருப்பு பகுதியில் சுற்றும் கஞ்சா ஆசாமி-கோவையில் அச்சம்

கோவையில் கத்தியுடன் சுற்றித்திரிய கஞ்சா போதை ஆசாமி தெரு நாய்கள் குரைத்ததால் கத்தி எடுத்து குத்த முயன்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்ட பகுதி பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். கோவை ஒண்டிப்புதூர் அன்னை இந்திரா நகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் நபர் கத்தியுடன் சில நாட்களாக அப்பகுதியில் தெருக்களில் சுற்றி திரிந்து உள்ளார். அப்பொழுது அங்கு இருந்த தெரு நாய்கள் இவரை கண்டு குரைத்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த முகத்தை ஆசாமி […]

“தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை” – நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தி.மு.க ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு அடைந்து உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு விட்டதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி உள்ளதாகவும் தெரிவித்தார். பெண்களுக்கு கிடைக்காத பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் கண்டித்து தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக கோவையில் […]

சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு

சென்னை, கோவையில் தனியார் பங்களிப்புடன் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முன்அனுபவம் உள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம், வழிகாட்டு நெறிமுறைகளை tnawb.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் விலாசத்திற்கு பிப்.26க்குள் அனுப்ப வேண்டும்.

வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உற்சவரம்பு 5% என்று குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25% என்றவாறு நிர்ணயம் செய்திட […]

கோவையில் 40 சவரன் நகையுடன் சிக்கிய பலே திருடர்கள்

கோவையின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வந்த வீடு புகுந்து திருடும் சம்பவங்களுக்கு, நடந்து வந்தது. இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் மணியக்காரர்பாளையம் – புதுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே தீவிர வாகனத் தணிக்கை மற்றும் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாகச் சுற்றித் திரிந்த இரண்டு நபர்களைத் தடுத்து நிறுத்தி, போலீஸார் தங்களது விசாரணை செய்தனர். போலீஸாரைக் கண்டதும் முன்னுக்குப் , பின் முரணாகப் பேசிய […]

கோவை- 30 ஆண்டு பழமையான 3 மரங்கள் மறு நடவு..

கோவை ஜி.ஆர்.டி கல்லூரியில்30 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான 3 மரங்கள் மறு நடவு கோயமுத்தூர் கட்டுநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் (சிபாகா) சார்பில் “மரம் காப்போம் – மண் காப்போம்” என்ற நோக்கில், சுமார் 30 ஆண்டுகள் பழமையான 3 பெரிய மரங்கள் இடமாற்றம் செய்து மறு நடவு செய்யும் நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள டாக்டர் ஜி.ஆர்.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்நடைபெற்றது.இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள […]

கோவை- ஆட்டோ ஓட்டுநர்கள் அராஜகம்..முதிய தம்பதி மீது தாக்குதல்

கோவை, உக்கடம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் அராஜகம் : முதிய தம்பதி மீது தாக்குதல் – அதிர்ச்சி வீடியோ !!! தமிழகத்தின் தென்னிந்திய மான்செஸ்டர் எனப் போற்றப்படும் கோவையில், ஆட்டோ ஓட்டுநர்களின் அராஜகம் இப்போது எல்லை மீறிச் சென்று கொண்டு இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரின் மிக முக்கியமான மற்றும் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த உக்கடம் பேருந்து நிலையத்தில், இன்று காலை முதிய தம்பதி ஒருவரை ஆட்டோ ஓட்டுநர்கள் […]

தவெக-வில் நிலவும் சுணக்கம்: ‘ஜனநாயகன்’ படம் தள்ளிப்போனதால் தொண்டர்கள் அதிருப்தி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் எந்தவித தேர்தல் பணிகளும் செய்யாமல் ஒதுங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என்றும், அதன் மூலம் கட்சிக்கு ஒரு பெரிய எழுச்சி கிடைக்கும் என்றும் தொண்டர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், படம் ரிலீஸ் ஆகாததால் கட்சி பணிகளில் ஒருவித தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை படம் […]

டூவீலரில் கடத்தி வரப்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல்-2 பேர் கைது

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாத்தூர் பிரிவு அருகே போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை தணிக்கை செய்ததில் அதில் உரிமம் மற்றும் அனுமதி இன்றி பாறையை உடைக்கும் வெடிபொருளான டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை அடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த சேலம் பகுதியைச் சேர்ந்த சிவா (40).செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (39) ஆகிய இருவரை கைது செய்த போலீசார் […]

வால்பாறையில் கடும் வெயில்- காபி தோட்டங்களில் நீர் தெளிப்பு

கோவை, வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்துள்ளதால் காலநிலையில் வறட்சி நிலை காணப்படுகிறது. இதனால் தோட்டப்பகுதிகளில் ஈரப்பதம் குறைந்து வருகிறது. காலநிலை தகவல்படி, தற்போது வால்பாறை பகுதியில் ஈரப்பதம் பொதுவாக 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை பதிவாகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பிப்ரவரி மாதத்தில் வழக்கமாக ஈரப்பதம் குறைவாக காணப்படும் காலமாக இருப்பதால், நிலம் விரைவாக உலரும் நிலை ஏற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு […]

கோவை அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியானை.. போராடி மீட்பு

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கும் உட்பட்ட வில்லோனி மேல் டிவிஷன் பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் காலை 6 மணி அளவில் அவ் வழியே சென்ற குட்டி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவிய நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பதற்காக பிளம்பர் சென்றபோது யானை குட்டி கிணற்றில் விழுந்து கிடப்பதை கண்டுள்ளார் அருகில் இருந்த யானை அவரை துரத்தியதால் மயிரிழையில் உயிர் தப்பினார் தகவல் […]

கோவை-மாரியம்மன் திருக்குட நன்னீராட்டு விழா… அன்னதானம் வழங்கல்

கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் ஆறு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுரம், மற்றும் இராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் நடைபெற்றது. கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் விநாயகப் பெருமான், […]

கோவை- கள்ளச்சாவி கில்லாடியின் கைவரிசை- பீதியில் வாகன ஓட்டிகள்

தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில், கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனத் திருடர்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறப்பது வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வடவள்ளி பகுதியில் அதிகாலையில் அரங்கேறிய ஒரு திருட்டுச் சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை, வடவள்ளி, சிறுவாணி சாலை சித்தி விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை, […]

கோவை-பொது இடத்தில் கொட்டப்படும் குப்பைகள்-நோய் பரவும் அபாயம்

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் தினசரி பொது இடங்களில் கொட்டப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாசுதேவன் கோவில் பின்புறம் பகுதியில் கிராம நிர்வாகம் சார்பில் குப்பைகள் குவிக்கப்பட்டு வருவதாகவும்,அவற்றை அகற்றாமல் அதே இடத்தில் தீயிட்டு எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக காற்று மாசு அதிகரித்து, காற்றின் மூலம் நோய் பரவும் அபாயம் […]

கோவையில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை

கோவை சூலூர் பெரிய குளத்தில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை.. பேரிடர் காலங்களில் ஏற்படக் கூடிய தீ விபத்துகளை திறம்படக் கட்டுப்படுத்தும் நோக்கில், கோவை சூலூரில் அமைந்து உள்ள இந்திய விமானப்படைத் தளம் சார்பில் சிறப்பு தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, தீ விபத்து நேரங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று தீயை அணைக்கும் முறைகள் செய்முறைப்படுத்தப்பட்டன. இதற்காக, சூலூர் பெரிய குளத்திற்கு வந்த விமானப்படை […]

மர இழைப்பகத்தில் தீ – ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

கோவை, கண்ணப்பன் நகர் பகுதியில் உள்ள ஒரு மர இழைப்பகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகின.​கோவை, கண்ணப்பன் நகரைச் சேர்ந்த நசீம் (என்கிற சலீம்), அதே பகுதியில் வீட்டு உபயோக மரப் பொருட்கள் தயாரிக்கும் மர இழைப்பகம் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு மெத்தை, நாற்காலிகள், மேஜைகள் மற்றும் கதவுகள் போன்ற பொருட்கள் விலை உயர்ந்த மரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு […]

பொள்ளாச்சி அருகே வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அண்ணா நகரை சேர்ந்தவர் தொழிலாளி ராஜா வயது 27 இவர் அதே பதிவு சேர்த்த சந்தானகிருஷ்ணன் வயது 29 என்பவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் பழகி வந்தார் ராஜா மற்றும் கிருஷ்ணவேணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சென்றனர் இந்த நிலையில் நேற்று ஆனைமலை மாசாணி அம்மன் குண்டம் திருவிழாவுக்கு ராஜா வந்திருப்பதாக சந்தான கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது இதனை அடுத்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே ராஜாவை […]

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை- கோவையில் சோகம்

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாந்திமேடு தம்பு நகர் பகுதியில் மனைவின் நோய் குணமாகாததால் மன வருத்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் குழந்தை உள்ளிட்ட 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை சேற்படுத்தியுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கமலேஷ் மின்சார வாரியத்தில் ஜூனியர் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார். தற்கொலைக்கு முன் வீடியோ பதிவு செய்துள்ளது தற்போது […]

குடிமகனின் விபரீத பைக் சாகசம்- கோவையில் அலப்பறை

கோவையின் அடையாளமாகத் திகழும் அவிநாசி சாலை ஜி.டி. நாயுடு (GD Naidu) மேம்பாலத்தில், மது போதையில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.1 கி.மீ நீளத்திற்குத் தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலமாக இது கட்டப்பட்டு உள்ளது. இந்தப் பாலத்தில் விபத்துக்களைத் தவிர்க்கக் காவல் துறையினர் அதிநவீன வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் […]

கோவையிலிருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல்

கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30 பண்டல்கள் வேட்டி மற்றும் 25 பண்டல்கள் சேலை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன ஓட்டுனர் கிரி, வேட்டி, சேலையை விற்பனைக்காக கொண்டு வந்த சந்தோஷ், அதனை வாங்கிய சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளனர். விலையில்லா வேட்டி, சேலைகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

10 தொகுதியிலும் திமுக அலுவலகம்- கோவையில் VSB தகவல்

பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில்பொள்ளாச்சி தொகுதி திமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- இன்று மூன்றாவது அலுவலகமாக பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எங்களது கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை சிறப்பாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த […]

கோவை-தெர்மாகோல் நிறுவனத்தில் தீ விபத்து… புகைமூட்டம்

கோவை பீளமேட்டில் பகுதியில் தெர்மாகோல் நிறுவனத்தில் ஏற்பட்டதீ விபத்து காரணமாக கடும் புகைமூட்டம் நிலவியது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கோவை பீளமேடு கிரியம்மன் கோவில் வீதியில் தியாகு என்பவருக்கு சொந்தமான தெர்மாகோல் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தில் இருந்த தெர்மாகோலில் வேகமாக பரவிய தீ மளமளவெனப் பரவியது. இதனால் கரும் புகை வெளியேறியதால் வீடுகளில் இருந்தவர்கள் […]

கோவை- 2 மணி நேரமாக வீணாகும் அத்திக்கடவு குடிநீர்

கோவையில் 2 மணி நேரமாக வீணாகும் அத்திக்கடவு குடிநீர் – நடுரோட்டில் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர் – இலவசமாக ‘வாட்டர் சர்வீஸ்’ செய்த வாகன ஓட்டிகள் !!! கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட விளாங்குறிச்சி விநாயகர் கோவில் பகுதியில், அத்திக்கடவு குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்துத் தகவல் கொடுத்தும் பல மணி நேரமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு. கோவை, விளாங்குறிச்சி பிரதான […]

கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி […]

கோவையில் பிரமிப்பு: 11 மணி நேரத்தில் உருவான நவீன கட்டிடம் – கட்டுமான நிறுவனம் உலக சாதனை

கோவை கொடிசியா வளாகத்தில் வி4 வால் இன்டீரியர் என்ற கட்டுமான நிறுவனம், 24 மணி நேரத்தில் ஒரு கட்டிடத்தை அமைக்கும் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டது. ஆனால், அந்நிறுவன ஊழியர்கள் திட்டமிட்ட நேரத்தை விட மிக விரைவாக, அதாவது 11 மணி நேரத்திற்குள்ளாகவே சுமார் 1,000 சதுரடி பரப்பளவில் அழகான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடத்தை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். முற்றிலும் உலோகங்கள் மற்றும் மரப்பலகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உடனடி கட்டிடத்தை ஒரு […]

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் கோரத் தீ விபத்து: 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ அணைப்பு

கோவை ஈச்சனாரி வடவநகர் பகுதியைச் சேர்ந்த சபருல்லா என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் கழிவு குடோன், போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு டன் கணக்கில் பழைய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திடீரெனத் தீப்பிடித்தது. பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மளமளவெனக் குடோன் முழுவதும் பரவியது. இதன் காரணமாக ஏற்பட்ட நச்சுத்தன்மை கொண்ட அடர் கரும்புகை அப்பகுதி முழுவதையும் சூழ்ந்தது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வானமே இருண்டது போல் காட்சியளித்ததால், வாகன […]

கோவை கொடிசியாவில் இன்று ஜவுளி மாநாடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் இன்று முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு நடைபெறுகிறது. இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கோவை விமான நிலையத்தில் திமுகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கழக மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், மாவட்ட […]

கோவை: சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேசத்தினர் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே மணிக்கம்பாளையத்தில் உள்ள ‘அகஸ்டியன் நிட்வேர்’ என்ற தனியார் நிறுவனத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாகப் பணிபுரிவதாகக் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், நேற்று நள்ளிரவு போலீசார் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இந்தியாவில் தங்குவதற்கு எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி அங்கிருந்த 11 வங்கதேசத்தினரை போலீசார் பிடித்துள்ளனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், வங்கதேசத்தில் தலா 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து புரோக்கர்கள் மூலம் கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் ஊடுருவியதாகத் […]

ரூ.1,100 கோடியில் நலத்திட்டங்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

கோவை கொடிசியா (CODISSIA) வளாகத்தில் இன்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360 (International Textile Summit 360) நிகழ்வில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஜவுளித் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தமிழகத்தில் இருந்து ஜவுளி ஏற்றுமதியில் முத்திரை பதித்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ‘சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகள்’ வழங்கப்பட்டன. இதில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் என 5 பிரிவுகளில் […]

லாரிக்கு ரூ.1000 கட்டாய வசூல்…. கோவையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வரும் டிப்பர் லாரிகளை ஒரு கும்பல் வழி மறித்து, யூனிட்டுக்கு ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை சட்ட விரோத வசூலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் கட்டிடப் பணிகளுக்காகச் செங்கல், மணல் மற்றும் ஜல்லி போன்ற பொருட்களைக் கொண்டு செல்ல அரசு முறையாக அனுமதிச் சீட்டு (Pass) வழங்கி வருகிறது. இந்நிலையில், மலுமிச்சம்பட்டி சாலையில் லாரிகளை வழிமறித்த ஒரு கும்பல், “அரசு […]

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வாலிபர் பஸ்களை நிறுத்தி ரகளை..

கோவை கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. ரயில் நிலையம் மற்றும் பத்திர பதிவு அலுவலகம், வங்கி மற்றும் ஏராளமான முக்கிய அலுவலகங்கள் உள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் இன்று காலை அந்த சாலையில் வாலிபர் ஒருவர் திடீரென ரகளையில் ஈடுபட்டார்.  ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள வங்கி வளாகம் பகுதியில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால், வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு […]

ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் 5 செல்போன்களை மர்ம நபர்கள் கைவரிசை

கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமானோர் உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் 10க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையில் உள்ளது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வரை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது இதில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மகாலிங்கம் மற்றும் ஓட்டுநர் ஜெயக்குமார் இருவரும் ஓய்வறையில் தங்கி இருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் உள்ளே புகுந்த நிலையில் அவர்களுடைய இரண்டு மொபைல் போன்கள் மற்றும் […]

பொள்ளாச்சியில் பானை மீது பரதம் ஆடி மாணவிகள் உலக சாதனை

பானை மீது நின்ற படி 30 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடிய கோவை நாட்டிய கலாசேத்ராவை சேர்ந்த 51 மாணவ, மாணவிகள் குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். பாரம்பரிய கலைகளில் முக்கிய பங்கு வகிக்கும் பரத கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொள்ளாச்சியில் பரதநாட்டிய உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள ஸ்ரீ சத்யேந்திர சித்தர் பீடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 30 நிமிடங்கள் ஒலித்த இறைவணக்க பாடல்கள், […]

எந்த கொள்கையை விஜய் முன்னிறுத்தி இருக்கிறார்-சுப வீரபாண்டியன் கேள்வி

கோவை, பொள்ளாச்சியில் இன்று கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் பல்லடம் ரோடு பகுதியில் நடைபெற்றது.இதில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையைச் தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மேலும் நடிகர் வாசு விக்ரம் உள்ளிட்ட கழக பேச்சாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .மேடையில் பேசிய சுப வீரபாண்டியன் பராசக்தி படத்தில் மொழிப்போர் தியாகிகள் குறித்து திரைப்படத்தில் சித்தரித்தது குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்.மேலும் மொழிப்போர் தியாகிகளின் உறவினர்களையும் மொழிப்போருக்காக […]

கல்லூரி பேராசிரியை தற்கொலை

கோயம்புத்தூர் வெள்ளலூர் கே.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (36). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணிகண்டன் ஒரு தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனலட்சுமிக்கும் அவரது கணவர் மணிகண்டனுக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குழந்தைகளைப் பராமரிப்பது தொடர்பாகத் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலையும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]

கோவையில் பிசியோதெரபிஸ்ட்-ஐ காரில் கடத்திய கும்பல்-G-Pay மூலம் சிக்கிய 3 பேர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகன் நவீன் சக்கரவர்த்தி (23). இவர் பிசியோதெரபிஸ்ட் படித்து உள்ளார். தற்போது நவீன் சக்கரவர்த்தி கோவை சாய்பாபா காலனியில் பாலசுப்ரமணியம் தெருவில் தற்போது வசித்து வருகிறார். அங்கு இருந்து தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபிஸ்தாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 21ம் தேதி நவீன் சக்கரவர்த்தி அவரது நண்பர் பிரதீப் ஆகியோர் சாய்பாபா காலனி, பகுதியில் உள்ள ஹோட்டல் முன்பு என்று […]

கடல்வாழ் உயிரின கண்காட்சி – எம்பி ஈஸ்வரசாமி துவக்கி வைப்பு

கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஏஜேகே கல்லூரியில் கடல்வாழ் உயிரினங்களை மையமாகக் கொண்ட புகைப்படக் கண்காட்சி துவங்கியது. “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில், கடலுயிர் ஆய்வாளர் மறைந்த விஞ்ஞானி டாக்டர் ஆர். எஸ். லால் மோகன் நினைவாக இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், கடற்பசு, டால்பின் மற்றும் திமிங்கலம் உள்ளிட்ட அரியவகை புகைப்படங்கள்,கடல்வாழ் உயிரினங்கள் […]

கோவை-பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய கிளர்க் கைது

கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கையும், களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக (Clerk) பணியாற்றி வரும் ஹரிஹரன் என்பவர், பட்டா பெயர் மாற்றம் செய்ய வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில், பட்டா பெயர் மாற்றத்திற்காக அணுகிய ஒரு நபரிடம், ஹரிஹரன் 7,000 ரூபாய் லஞ்சம் […]

உதிரிபாக கடை டயர்கள், ஆயில் வெடித்து சிதறல்- கோவையில் தீ விபத்து

கோவை, காட்டூர், பட்டேல் ரோடு, பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்து உள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் (Spare Parts) விற்பனை கடையி ல், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கடைக்குள் இருந்த ஆயில் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீ மள மளவென வெறிய துவங்கியது. உதிரிபாகக் கடைக்கு மிக அருகிலேயே நெருக்கமான குடியிருப்புகள் அமைந்து உள்ளதால், தீயானது அடுத்தடுத்த வீடுகளுக்கும் வேகமாகப் பற்றிப் பரவத் துவங்கியதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. ​தகவல் அறிந்து […]

கோவை காட்டூர் தீ விபத்து: உதிரிபாகக் கடை எரிந்து சாம்பல் – வீடுகளுக்கும் தீ பரவல்

கோவை மாநகரின் மையப்பகுதியான காட்டூர், பட்டேல் ரோடு பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் விற்பனைக் கடையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த ஆயில் கேன்கள், டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீ மளமளவெனக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. விபத்து நடந்த உதிரிபாகக் கடைக்கு மிக அருகிலேயே குடியிருப்புகள் நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால், கடையிலிருந்து […]

கோவை காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை- பரபரப்பு

கோவை புலியகுளம் காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை… நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை – கண்காணிப்பு கேமராக்கள் சேதம்கொள்ளையர்களை தேடும் போலீசார்.. கோவை மாநகரின் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள பழமையான காமாட்சியம்மன் கோவிலில், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் புகுந்து அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உலகப் பிரசித்திபெற்ற முந்தி விநாயகர் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள இந்த காமாட்சியம்மன் கோவில், பக்தர்களின் முக்கிய […]

கோவை- 300 கோடி மதிப்பில் பெரியார் அறிவலக பணி மும்முரம்-அமைச்சர் எ.வ.வேலு பார்வை

கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் எட்டு தளங்களுடன் கூடிய பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் இதனை திறந்து வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன அந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் எந்த அளவு நிறைவடைந்துள்ளது எத்தனை நாட்களில் பணிகள் நிறைவடையும் என்பது குறித்து ஒப்பந்ததாரரிடமும் பொறியாளரிடமும் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு, முதல்வர் […]

கோவையில் பிப்ரவரி இறுதியில் ‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு: அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு தளங்களுடன் கூடிய பிரம்மாண்டமான ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம் கட்டப்பட்டு வருகிறது. வரும் தேர்தலுக்குள் இதனைத் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான கட்டுமானப் பணிகளைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் தற்போதைய நிலை மற்றும் எப்போது முழுமையடையும் என்பது குறித்து ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர்களிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “முதலமைச்சர் […]

பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பள்ளி மாணவர்கள் -நெகிழ்ச்சி

கோவை, பொள்ளாச்சி பல்லடம் சா லையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் தங்களது பொதுத்தேர்வை சந்திக்க உள்ளனர். மாணவர்கள் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பள்ளி நிர்வாகம் ஆண்டு தோறும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களை கௌரவிக்கும் வகையிலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்காக படும் சிரமங்கள் குறித்து மாணவர்கள் புரிந்து கொண்டு நன்கு படித்து தேர்வில் வெற்றி பெற […]

கோவையில் சீட்பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி

கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட்பெல்ட் அணிவது குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோவையில் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறை, போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் […]

பூங்கா நிலத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக மீட்பு

கோவை, சரவணம்பட்டி பகுதியில் தி.மு.க ஆதரவாளர் ஒருவரால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பூங்கா நிலத்தை, நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சி அதிகாரிகள் இன்று அதிரடியாக மீட்டனர். கோவை, சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மீனாட்சி நகர் மனைப் பிரிவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 50 சென்ட் நிலம் அப்போதே பேரூராட்சிக்குத் தானமாக வழங்கப்பட்டது. ஆனால், பொதுமக்களுக்குச் சொந்தமான அந்தப் பூங்கா நிலத்தில் சுமார் 13 சென்ட் நிலத்தைச் சிவஞானம் […]

பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையை சூழ்ந்த பணி மூட்டம்

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மேற்கு தொடர்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தமிழக சுற்றுலா தளங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த 120அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையை காண தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது மேற்கு தொடர்சி மலை பகுதியில் பனிமூட்டம் அதிகளவில் காணப்படுவதால் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் அணையின் மேல் பரப்பில் உள்ள தண்ணீரை தழுவிய படி […]

21 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்-கோவை புதிய கமிஷனர் நடவடிக்கை

கோவை மாநகரில் 21 காவல் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டார். கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று உள்ள கண்ணன் 21 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் சிங்காநல்லூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் சரவணம்பட்டி விசாரணை பிரிவுக்கும், வெரைட்டி ஹால் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி பெரிய கடைவீதி விசாரணை பிரிவுக்கும், வடவள்ளி இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் […]

பொள்ளாச்சி அருகே நிரந்தரமாக ரயில்வே வழித்தடம் மூட முடிவு

பொள்ளாச்சி அடுத்த குஞ்சிபாளையம் பகுதியில் 100ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே வழித்தடம் அமைந்துள்ளது. இந்த வழியாக வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், குஞ்சிபாளையம், கருப்பம்பாளையம், கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர்., உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். திடீரென இந்த வழித்தடத்தை நாளை முதல் மூட மத்திய ரயில்வே துறை முடிவெடுத்த நிலையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி அதற்கான ஒப்புதலை அளித்துள்ளார். சுமார் 10,000 மக்கள் பயன்படுத்தும் இந்த வழித்தடம் மூடப்பட்டால் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படும். சுமார் […]

கோவை-130 கிராம் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்.. 5 பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில், உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில், கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய ஒரு நான்கு சக்கர வாகனம் இடைமறித்து சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனையில், அந்த காரில் பயணம் செய்த 5 நபர்களிடமிருந்து 130 கிராம் மெத்தாம்பெட்டமைன் / MDMA வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. விசாரணையில்,அந்த நபர்கள் வெளிமாநிலத்திலிருந்து போதைப்பொருளை […]

கோவையில் பரபரப்பு: பிரபல ஜவுளிக்கடை பார்க்கிங்கில் வளர்ந்து நின்ற கஞ்சா செடி

கோவை மாநகரின் மையப்பகுதியான 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை வாகன நிறுத்துமிடத்தில், மூன்று அடி உயரம் கொண்ட கஞ்சா செடி செழித்து வளர்ந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகரில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஸ்ரீதேவி ஜவுளிக்கடையின் புதிய வாகன நிறுத்துமிடத்தில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கார் பார்க்கிங் பகுதியின் கடைசி முனையில், சுமார் 3 அடி உயரம் கொண்ட […]

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய கோவை கமிஷனர்

தலைக்கவசம்  அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு கோவை காவல் மாநகர் ஆணையர் டாகடர் கண்ணன் ஹெல்மெட் வழங்கி அறிவுரை வழங்கினார். கோவை மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் குறிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பில் கோவை மாநகர் காவல்துறை கிழக்கு போக்குவரத்து பிரிவு சார்பாக 37-வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை மாநகர் காவல் ஆணையர் டாக்டர் கண்ணன் விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர்  தலைக்கவசம் அணியாமல் வந்த 100-க்கும் […]

பொள்ளாச்சி நகராட்சியில் பொங்கல் வைத்து வழிபாடு

பொள்ளாச்சி நகராட்சியில் தைத்திருநாள் முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்த நகராட்சி தலைவர். பொள்ளாச்சி-ஜன-14 உலகம் முழுவதும் தைத்திருநாள் பொங்கல் முன்னிட்டு கோலப்போட்டி கயிறு இழுக்கும் போட்டி கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சி வளாகத்தில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இதில் நகராட்சி ஆணையாளர் குமரன் துணைத் தலைவர் கௌதமன் வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி அதிகாரிகள் […]

கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தினர் 3 பேர் கைது

கோவை பீளமேடு அருகே திப்ருகர் ரயிலில் 55 கிலோ கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயிலில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது கஞ்சா சிக்கியது. ரயிலில் கஞ்சா கடத்தியதாக மேற்குவங்கத்தைச் சேர்ந்த மிதுன் சர்கார், பாலசு மண்டல், ரோஹித் தாஸ் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அருகே ஆம்புலன்ஸ்-கார் மோதி விபத்து… 4 பேர் காயம்

கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆம்புலன்ஸில் நோயாளியின் உடலை கொண்டு ஒப்படைத்து விட்டு அங்கு இருந்து ஆம்புலன்ஸ் கோவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தது. அதில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் இருந்தனர். இன்று காலை மதுக்கரை அருகே போடிநாயக்கன்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் வந்து கொண்டு இருந்த போது எதிரே கோவையில் இருந்து கேரளாவிற்கு ஒரு கார் சென்றது. காரில் 2  பேர் பயணம் செய்தனர். பெட்ரோல் பங்க் அருகில் 2 வாகனங்களும் திடீரென்று மோதிக் […]

ஜவுளி வியாபாரியை மிரட்டி மாமுல் பறித்த வாலிபர் கைது

கோவை, சிவானந்தா காலனி, டாட்டாபாத் முதல் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 28) . இவர் தொட்டி ஆட்டோவில் சென்று ஜவுளிகள் விற்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லோகேஸ்வரன் 100 அடி ரோட்டில், ராஜு நாயுடு தெருவில் தொட்டி ஆட்டோவை, நிறுத்தி விட்டு, வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.அப்போது அங்கே மோட்டார் சைக்கிளில வாலிபர் வந்தார். வியாபாரம் செய்த லோகேஸ்வரனிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.அதற்கு அவர் பணம் தர மறுத்ததால் நான் இந்த ஏரியா […]

பூட்டிய ரூமில் சிக்கிய 2வயது குழந்தை- பத்திரமாக மீட்பு

கரூர் மாவட்டம், வெங்கமேடு செங்குந்த நகர் மூன்றாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த உமாபதி – மல்லிகா தம்பதியினரின் இரண்டு வயது மகன் கிருத்திக். இன்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அரை கதவு தானாகவே தாளிட்டு பூட்டிக் கொண்டது. இதனால் பூட்டிய அறைக்குள் குழந்தை சிக்கிக்கொண்ட நிலையில், பெற்றோர்கள் கதவை திறக்க முடியாமல் தவித்தனர். உடனடியாக கரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான தீயணைப்பு […]

ஜூனியர் குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025- கோவை வீரர்கள் சாதனை

சமீபத்தில் நடைபெற்ற ஜூனியர் தேசிய குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், கோவை ஸ்டேபிள்ஸ் குதிரை சவாரி பள்ளியைச் சேர்ந்த எட்டு திறமையான இளம் வீரர்கள் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி நகரத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்தப் போட்டியில் நான்கு பிரிவுகளில், 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். கபிலேஷ், ஆதவ் கந்தசாமி, பிரிதிவ் கிருஷ்ணா, ஆதர்ஷ், பிரதிக் ராஜ், சோனிகா சுனில், திவ்யேஷ் ராம் மற்றும் ஹர்ஷியத் ஆகிய வீரர்கள், தங்களின் அபார திறமை, ஒழுக்கம் மற்றும் விளையாட்டு […]

கோவை-சாலை விதியை பின்பற்ற- பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்விபத்து இல்லா வாகன பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை, பொள்ளாச்சி துரைஸ் தியேட்டர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்மது போதையில் வாகனங்களை இயக்கக் கூடாது. […]

கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

கோவை: கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி சேலை, சர்க்கரை, மற்றும் 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கூட்டுறவு துறை சார்பில் அனைத்து நியாய விலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்புகள் அனுப்பி […]

நாளை கோவை பிஎஸ்ஜி.டெக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரி தனது 75 ஆண்டுகால சிறப்பைக் கொண்டாடும் வகையில், பி.எஸ்.ஜி.டெக் கல்லூரியில் பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜனவரி 9 ந் தேதி துவங்கி 11 ந்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது… இந்நிலையில் நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. இதில் நிகழ்ச்சிக்கான சேர்மன் டி.நந்தகுமார், கல்லூரி முதல்வர் பிரகாசன், முன்னாள் மாணவர்கள் அமைப்பு தலைவர் வி.கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் கே.சுரேஷ்குமார், […]

கோவை மருதமலை சுப்பிரமணிய கோவில் உண்டியலில் ரூ.94.84 லட்சம் காணிக்கை

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டுள்ளது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர் குறிப்பாக விசேஷ காலங்களிலும் விடுமுறை தினங்களிலும் அதிகப்படியான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அஅவ்வாறு வருகை புரியும் பக்தர்கள் பலரும் உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட மாத இடைவெளியில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுகிறது. அதன்படி இன்று கோவில் உண்டியல் […]

எல்ஐசி முகவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்-தீர்மானம் நிறைவேற்றம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.200க்கும் மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்,முகவர்க்கு வழங்கப்பட்ட புதிய கமிஷனில் இருந்து விலக்கு அளித்து – பழைய கமிஷனை வழங்க வேண்டும், முகவர்களுக்கான குழு காப்பீட்டுத் தொகையை 15 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு, தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.மேலும் கடந்த கூட்டத்தொடரில் அந்நிய […]

கோவை- சாலையை கடக்க முயன்ற கார்- பள்ளி பஸ் மோதிய சிசிடிவி..

தமிழக – கேரளா தேசிய நெடுஞ்சாலை கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அப்பகுதியில் பள்ளி மாணவர்களுடன் வாகனம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது வேறு பகுதியில் இருந்து நெடுஞ்சாலை கடப்பதற்கு சர்வீஸ் சாலை வழியாக கார் வந்து கொண்டு இருந்தது. சர்வீஸ் சாலையை கடந்த போது வலது புறம் வரும் வாகனங்கள் கார் ஓட்டுனருக்கு தெரியவில்லை, இதனால் வேகமாக கடந்து விடலாம் […]

மலபார் அணிலுக்கு தினமும் இளநீர் தரும் தம்பதி- நெகிழ்ச்சி

கோவை, பொள்ளாச்சி அடுத்தஆழியார் அறிவு திருக்கோயில் அருகே அம்பிகா ஜெகநாதன் தம்பதியினர் இளநீர் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.தினமும் இளநீர் வெட்டி வியாபாரம் செய்வதை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் இவர்களது கடைக்கு சில மாதங்களாகவே மலபார் அணில் ஒன்று வன ப்பகுதியில் இருந்து வெளியேறி கடைக்கு வந்துள்ளது. அப்போது, தம்பதியினர் மலபார் அணிலுக்கு இளநீர் வெட்டி கொடுத்துள்ளார்.அதனையும் அந்த அணில் ருசித்து சாப்பிட்டுள்ளது. அன்று முதல் இவர்கள் தினந்தோறும் இளநீர் ஒன்றை தனியாக வெட்டி […]

கோவை- வீட்டருகே ஒற்றைக் காட்டு யானை..குரைத்து சத்தம் எழுப்பிய ”பைரவா”

கோவை, தாளியூர் பகுதியில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வளர்ப்பு நாய் குரைத்து விரட்ட முயன்றதும் அதன் உரிமையாளர் யானையை சாமி என அழைத்து வழி அனுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது. கோவை, தடாகம் மற்றும் மருதமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9:30 மணி அளவில் நாளியூர் சேவா ஆலயம் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் தனது இருசக்கர […]

காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததால் பலத்த சேதம்-குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு

கோவை, கோனியம்மன் கோவிலில் புதிதாக கட்டப்படவுள்ள சமையல் கூடத்திற்காகஜே.சி.பி. இயந்திரம் மூலம் அஸ்திவாரம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது அருகில் உள்ள அபார்ட்மெண்ட் மற்றும் கோவிலுக்கு இடையே இருந்த கருங்கல் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவர் விழுந்ததால் அபார்ட்மெண்ட்டின் 2-ம் பிளாக்கில் 4 மாடிகளில் 30 குடியிருப்புகள் உள்ள நிலையில், இடிந்து விழுந்த காம்பவுண்டு சுவர் தரைதள குடியிருப்புகளின் மீது விழுந்ததால்பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டை […]

விபத்தை ஏற்படுத்தி- காரில் நின்று தம் அடித்த போதை ஆசாமிக்கு தர்ம அடி

கோவை அவிநாசி சாலையில் நள்ளிரவில் கட்டுப்பாடின்றி காரை ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதோடு, காரின் மேல் ஏறி நின்று சிகரெட் பிடித்து ரகளை செய்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கோவை, அவிநாசி சாலையில் நேற்று இரவு கார் ஒன்று அதிவேகமாக கட்டுப்பாடின்றி தாறுமாறாக ஓடியது. அந்த கார் பி.எஸ்.ஜி கல்லூரி அருகே சென்ற போது அங்கு இருந்து இரு சக்கர வாகனங்கள் […]

கோவை – சென்னை இடையே சிறப்பு ரயில்

தென்னக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-கோவையில் இருந்து வருகிற 11, 18-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் கோவை – சென்னை சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06034) மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை செல்லும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஜனவரி 12, 19-ந் தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்படும் சென்னை-கோவை விரைவு ரெயில் (எண்:06033) மறுநாள் காலை 9 மணிக்கு கோவை வந்தடையும்.இந்த ரெயில் […]

கோவை மாநகருக்குள் புகுந்த மான்கள்… ஆச்சரியத்தில் மக்கள்

கோவை சரவணம்பட்டி பகுதியில் யானைகள் தொடர்ந்து அத்திப்பாளையத்தில் மான்கள் 40 கிலோமீட்டர் கடந்து ஊருக்குள் வரும் வனவிலங்குகள். கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்குள் வனவிலங்குகள் தொடர்ந்து ஊடுருவி வருவது பொதுமக்கள் மற்றும் மன உயிரின ஆர்வலர்கள் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. உணவு தட்டுப்பாடா அல்லது வேட்டைக்காரர்களின் அச்சுறுத்தலா என்ற கேள்வி தற்பொழுது எழுந்து உள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியால் உணவு மற்றும் தண்ணீர் தேடி […]

கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகாப்பு நிகழ்ச்சிக்காக உறவினர்கள் ஒரு டிராவல்ஸ் வேனில் சென்று கொண்டிருந்தனர். கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியை முந்த வேன் முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் மீது லேசாக உரசவே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த […]

கோவை ஸ்ரீ நாக சாயி கோவிலில் சாய்பாபா பக்தர்களுக்கு காட்சி

புத்தாண்டு பண்டிகையொட்டி ஸ்ரீ நாக சாயி திருக்கோவிலில் சாய்பாபா பக்தர்களுக்கு காட்சியளித்தார் . கோவை சாய்பாபா காலனி பகுதியில் இருக்கும் ஸ்ரீ நாக சாயி திருக்கோவிலில் சாய்பாபாவிற்கு ருத்ராட்ச மாலை அணிவித்தும்,தங்க கிரீடத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இன்று அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். சுவாமி தரிசனம் மேற்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சாய்பாபாவின் காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட பத்து ரூபாய் நோட்டு மற்றும் புகைப்படத்தை கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக […]

ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தது. குனியமுத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியர் ஜெபா மார்ட்டின் வீட்டில் டிசம்பர் 25ல் 103 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்பவரை கைது செய்துள்ளனர்.

கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையம்.. உதயநிதி திறந்து வைத்தார்

கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார், மேலும் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். வட கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் தமிழ்நாடு வனப்படை நவீன மையமாகக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவை மாவட்டத்தில் சிறுமுகை பெத்தி குட்டையில் ரூபாய் 19.5 கோடியில் கட்டப்பட்டு உள்ள […]

கோவை- ரூ.9.67 கோடியில் சர்வதேச ஹாக்கி மைதானம்.. துணை முதல்வர் திறந்து வைத்தார்

கோவையில் ரூபாய் 9.5 கோடியில் ஹாக்கி மைதானம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் கோவையில் ரூ9.5 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள ஹாக்கி மைதானம் மற்றும் வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, பத்தாயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். வட கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் தமிழ்நாடு வனப்படை நவீன மையமாகக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த […]

கோவை- ரோட்ராக்ட் கிளப் – GCT சார்பில் கண் சிகிச்சை முகாம்

கோயம்புத்தூர் ரோட்ராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி சார்பில் ஒரைக்கல்பாளையத்தில் கண் சிகிச்சை முகாம்கோயம்புத்தூர் ரோட்ராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி சார்பில், 28 டிசம்பர் 2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு, யூனைடெட் ஹேன்ட்ஸ் யூத் வெல்ஃபேர் அசோசியேஷன் வளாகம், தபால் நிலையம் அருகில், ஒரைக்கல்பாளையம் பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கண் பராமரிப்பு மற்றும் கண் சிகிச்சை முகாம் சிறப்பாக நடைபெற்றது.இந்த முகாம் சிகரம் அறக்கட்டளை, கோவை சங்கரா கண் மருத்துவமனை, கோவை மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் […]

கோவையில் முதல்வரை வரவேற்ற VSB

திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது. 2 லட்சம் மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர். இந்த மகளிர் அணி மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்தநிலையில் கோவை விமான நிலையம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி உற்சாக வரவேற்பு அளித்தார்.

தேமுதிக தலைவர் கேப்டனின் 2ம் ஆண்டு குருபூஜை.. அன்னதானம்

தேமுதிக நிறுவன தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை… கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி 26 ஆவது வட்டக் கழகத்தில் வட்டக் கழக செயலாளர் சிட்டி கே ராமச்சந்திரன் அழகுராணி ஏற்பாட்டில் கேப்டன் திருவுருவப்படம் வைத்து பூஜைகள் செய்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது […]

கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் தயார்.. 30ம் தேதி உதயநிதி திறக்கிறார்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் ஹாக்கி மைதானம் கட்டப்பட்டுள்ளது. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் இந்த ஹா க்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஹாக்கி மைதானத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. இரவிலும் ஹாக்கி போட்டிகள் நடத்த வசதியாக 6 மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஒவ்வொரு மின்கோபுர விளக்கிலும் 500 வாட்ஸ் திறன் கொண்ட 20 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதுதவிர மைதான வளாகத்தில் வீரர்கள், வீராங்கனைகளுக்கான உடை மாற்றும் அறை, ஓய்வறை, […]

சட்டமன்ற தேர்தலில் கோவையில் 10 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- VSB பேச்சு

சிங்காநல்லூர் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிக்காக கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் காமராஜர் ரோடு ராமானுஜர் நகரில் நேற்று திறக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல கழக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்;- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நடைபெற உள்ள மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் பங்கேற்க மாண்புமிகு […]

ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் அபகரிப்பு.. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு பூங்கா நிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மீனாட்சி நகர் மனைப்பிரிவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50 சென்ட் நிலம் பூங்காவாக ஒதுக்கப்பட்டது.அந்த நிலம் 1993ஆம் ஆண்டு தானப்பத்திரம் மூலம் சரவணம்பட்டி பேரூராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த பூங்கா நிலத்தில் சுமார் 13 சென்ட் நிலத்தை […]

கூட்டு குடிநீர் குழாய் 2வது முறையாக உடைப்பு-சரிசெய்யும் மாநகராட்சி

கோவை – பில்லூர் 2 கூட்டு குடிநீர் திட்ட குழாய் இரண்டாவது முறையாக உடைப்பு : சாலையில் வெள்ளம் போல் சென்ற குடிநீர் – சரி செய்யும் பணியில் மாநகராட்சி தீவிரம்… கோவை நகருக்கு பில்லூர், சிறுவாணி, ஆழியார் ஆகியவற்றின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை, திட்டம் குடிநீர் குழாய் மற்றும் சாலை அமைப்பதற்கு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நகரில் பெரும்பாலான பகுதிகளுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் […]

ஆண்கள் விடுதியில் புகுந்து லேப்டாப் திருடும் மர்ம நபர்

கோவையில் ஆண்கள் தங்கம் தனியார் விடுதியில் சர்வ சாதாரணமாக புகுந்து லேப்டாப் திருடும் நபர் : அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் – மாணவர்கள் மத்தியில் அச்சம் !!! கோவை, காந்திபுரம் இரண்டாவது வீதியில் உள்ள ராஜேஸ்வரி மேன்சன் என்ற ஆண்கள் தங்கும் விடுதியில் அதே பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர் ரமணன் என்பவர் அங்கு தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் ரமணன் அறை […]

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் 4000 மாடுகள் விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கிவரும் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை வாரம்தோறும் செவ்வாய், வியாழன் என இரண்டு தினங்களில் நடைபெற்று வருகிறது. இங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாரம் தோறும் மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் இந்த வாரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு வர உள்ளது முன்னிட்டு செவ்வாய் கிழமையான இன்று பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் […]

பொள்ளாச்சி சுற்றுலா சென்ற வடமாநில தொழிலாளர் 2 பேர் விபத்தில் பலி

மேற்கு வங்காளத்தை சேர்ந்த சனுமாஜி (வயது26)உஜ்ஜல்பெளவுமிக் (25)அமித்ராய் ஆகிய 3பேரும் கோவை காந்தி பார்க் ,சலீவன் வீதியில் தங்கநகை பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்க நகை பட்டறை விடுமுறை காரணமாக என்பதால் பொள்ளாச்சி சுற்றுலா செல்வதற்காக கடைக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தி ல் சனுமாஜிஉஜ்ஜல்பெளவுமிக், அமித்ராய்ஆகிய 3பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி மற்றும் பிந பகுதிகள் சுற்றி பார்க்க கிளம்பினார்கள். இருசக்கர வாகனம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் கோவை& […]

கோவையில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

கோவையில் எஸ்ஐஆருக்கு வபின் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் இருந்து 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் SIR பணிக்கு முன்பு வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 32,25,198 பேர் இருந்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் கோவை மாவட்டத்தில் 25,74,608 பேர் உள்ளதாக மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். இறந்த வாக்காளர்கள் 1,19,489 , முகவரியில் இல்லாதவர்கள் : 1,08,, 360 பேர் குடி பெயர்ந்தோர் : 3, 99, 159 பேர் என மொத்த […]

வால்பாறை- சாலையில் காட்டு யானைகள்-பொதுமக்கள்-பயணிகள் அச்சம்

ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுகுன்றா பகுதியில் சாலையைக் கடந்த யானைகளால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தை வழிமறித்ததால் ஓட்டுநர் மற்றும் பயணிகள் அச்சத்தில் பயணித்தனர். இந்நிலையில் வால்பாறை பகுதியில் யானைகளின் வரவு அதிகரிப்பால் பகல் நேரங்களில் பிரதான சாலைகளில் உலா வருகிறது. மேலும் வால்பாறை பகுதியில் சிறுத்தை கரடி யானைகளால் உயிர் சேதங்கள் அதிக அளவில் ஏற்படுவதால் தற்போது வன உயிரின கூடுதல் வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் கடந்த […]

பெண்ணுக்கு ‘கேஷ் ஆன் டெலிவரி’ மூலம் டார்ச்சர்- கோவையில் வாலிபர் கைது

கோவையில் தனது நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கும் நோக்கில், நூதனமான முறையில் ஆன்லைன் ஆர்டர்களை அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்திய டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாநகரில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருபவர் சதீஷ்குமார் (39). இவரது நிறுவனத்தில் ஒரு இளம்பெண் பணியாற்றி வந்துள்ளார். ஏதோ ஒரு காரணத்திற்காக அந்தப் பெண் வேலையை விட்டு நின்ற பிறகு, அவருக்குத் தொல்லை கொடுக்க சதீஷ்குமார் ஒரு மோசமான திட்டத்தைத் தீட்டியுள்ளார். […]

கோவை- டிச.21ம் தேதி மாரத்தான்- 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோயம்புத்தூர் மாரத்தானின் 13வது பதிப்பில் 25,000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள் கோயமுத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை (CCF) சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் ‘வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான்’ 13-வது பதிப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாரத்தானில் பங்கேற்க முன் எப்போதும் இல்லாத அளவாக 25,000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் மிகச் சுறுசுறுப்பான ஓட்டப்பந்தய நகரங்களில் ஒன்றாக கோவை உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு தடகள சங்கத்தின் அங்கீகாரத்துடன் […]

பெண்ணுக்கு விநோதமான டார்ச்சர்…தனியார் நிறுவன உரிமையாளர் கைது

கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார் (39) ஒரு தனியார் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது நிறுவனத்தில் முன்னர் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கு 100க்கும் மேற்பட்ட பார்சல்களை ‘Cash on Delivery’ மூலம் தினமும் ஆன்லைனில் ஆர்டர் செய்து அனுப்பியுள்ளார்.மேலும் அவர் டெலிவரி விலாசத்தில் அந்த பெண்ணின் பெயருடன் ஆபாசமான வார்த்தைகளை புனைப்பெயராக சேர்த்தும் ஆர்டர் செய்து அந்த பெண்ணுக்கு விநோதமான முறையில் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து இதுதொடர்பான புகாரின்பேரில் கோவை […]

கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர். தமிழ் ஆட்சி மொழி சட்டவிர விழா இன்று முதல் துவங்கி ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி கல்லூரிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி துறை […]

பொள்ளாச்சி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி- உயிருக்கு அச்சம்-

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது அமைதி நகர். இந்த அமைதி நகர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் குழந்தைகளின் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது, இதில் அமைதி நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் என இரண்டு பகுதியிலிருந்தும் சுமார் 25,க்கும் மேற்பட்ட குழந்தைகளை பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி கட்டிடம் பராமரிப்பின்றி காணப்படும் நிலையில் கட்டிடத்தில் உள்ள மேற்கூரை ஆங்காங்கே […]

பொள்ளாச்சி கவி அருவியில் வெள்ள பெருக்கு- குளிக்க தடை

கோவை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல் காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல் அதிக அளவில் மழை பெய்து வருகிறது இந்த நிலையில் மிகவும் பிரபலமான சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாக திகழும் இயற்கை எழில் சூழ்ந்த ஆழியார் கவியருவில் திடீரென இன்று அதிகாலை முதல் காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் நீர் செந்நிறமாக […]

இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு- வழக்கறிஞர்கள் போராட்டம்

கோவை: இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் அனுப்பும் போராட்டத்தை வழக்கறிஞர்கள் மேற்கொண்டனர். நீதிமன்றங்களில் அமல்படுத்தபட்டுள்ள இ ஃபைலிங் முறைக்கு பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த இஃபைலிங் முறையை டைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் பார் அசோசியேசன் சார்பில் அந்த நடைமுறைக்கு எதிர்ப்புகள் வழுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று இ ஃபைலிங் முறையை கண்டித்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் […]

வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்.. ஒருவர் கொலை- 5 பேர் கைது

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள லவன் டெக்னோ பிரைவேட் லிமிடெட்டில் என்ற நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் மற்றும் அவரது சகோதரர் ராஜகுமார் இவர்களுடன் இவர்களது நண்பர்களான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜகுமார் மண்டல் அவரது தந்தை நகுல் மண்டல், பிகாஷ் குமார், அவதேஷ் குமார் மண்டல், ரவிக்குமார் ஆகியோர் உடன் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் தங்கி இருக்கும் […]

திடீரென வீட்டுக்குள் நுழைந்த முள்ளம்பன்றி- பரபரப்பு

கோவையில் திடீரென வீட்டுக்குள் நுழைந்து அரிய வகை விலங்கான முள்ளம்பன்றி : லாபகமாக பிடித்த வன உயிரின ஆர்வலர்கள் – வனத்துறையினரிடம் ஒப்படைப்பு !!! கோவை, சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நேற்று மாலை திடீரென நுழைந்த முள்ளம் பன்றியால் வீட்டில் இருந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த அச்சத்தில் உறைந்தனர். பின்னர் இதுகுறித்து ஃபிரண்ட்ஸ் ஆப் வைல்ட் லைஃப் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற வன உயிரின […]

கந்துவட்டி விவகாரம்… கோவை அதிமுக பிரமுகர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் ஏ காலனியில் வசித்து வருவார் தீபா இவர் கடந்த 4மாதத்திற்கு முன்பாக முத்துகவுண்டன் லேஅவுட் சேர்ந்த அதிமுக நகர இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார் இதற்காக மாதம் பத்தாயிரம் கந்துவட்டி தரவேண்டுமென தெரிவித்ததாக கூறப்படுகிறது 3மாதங்களாக சரியாக வட்டி கட்டி உள்ளார் இந்த மாதம்வட்டி பணம் தர முடியாததால் செந்தில்குமார் தீபாவை தொடர்பு கொண்டு தொலைபேசியில் தகாத வார்த்தைகள் திட்டியதாகவும் பணத்தை திருப்பி […]

கோவையில் குட்டையில் யானைகள் உற்சாக குளியல்

கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல் போடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள் வழி தவறி நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை கீரணத்தம் ஐ.டி பார்க் பகுதியில் மூன்று யானைகள் சுற்றித் திரிந்ததை அப்பகுதி மக்கள் கவனித்தனர். தொடர்ந்து அங்கு இருந்த […]

கோவை கலெக்டர் ஆபீசுக்கு14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்ப நாயுடன் வந்து சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது 14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர் ரமேஷ் என்ற பெயரில் டார்க் நெட் பயன்படுத்தி இ-மெயில் அனுப்பி […]

கோவையில் நடுரோட்டில் திடீர் பள்ளம்- சிக்கிய லாரி- வாகன ஓட்டிகள் அச்சம்

கோவையில் மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால், பல்வேறு இடங்களில் கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு சிக்கிக் கொண்டு விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி ப்ரூக்ஃபீல்டுஸ் வணிக வளாகம் அருகே உள்ள சாலையில் சிக்கிக் கொண்டது. அதேபோன்று உடையாம்பாளையம் பகுதிகளும் பாரம் தாங்காமல் சாலை உள்வாங்கியது அதில் ஒரு லாரி சிக்கிக் கொண்டது. […]

பொள்ளாச்சி சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 85 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ராமலிங்கம் செளடேஸ்வரி கோயிலில் கடந்த 15 ஆண்டுகளாக, 1008 சங்காபிஷேக விழா நடைபெற்று வருகிறது.இந்தாண்டிற்கான சங்காபிஷேக விழா இன்று நடந்தது.இதையொட்டி கோயில் வளாகத்தில் லிங்க வடிவில் 1008 சங்குகள் அமைக்கப்பட்டு அதில் வில்வ இலைகள், புஷ்பங்களால் அலங்கரிங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. பின்னர் மூலவர் ராமலிங்கேஷ்வரர் மற்றும்செளடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம் […]

சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கைது

CITU உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், OHT கார்ப்பரேட்டர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த மறியல் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். அரசாணை 152, 139, 10 ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும், அனைத்து ஒப்பந்த சுய உதவிக் குழு தினக்கூலி ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி ஊதியம் வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் ஒப்பந்த முறையை வாபஸ் பெற வேண்டும், […]

கோவை- மாணவி வன்கொடுமை- 3 பேர் மீது குண்டாஸ்

கோவை விமான நிலையம் அருகில் கடந்த நவம்பர் 2 ம் தேதி கல்லூரி மாணவி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன்- தம்பிகளா கருப்பசாமி என்ற சதீஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரன் மற்றும் தவசி என்ற குணா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.தேடுதல் பணியின்போது, காவல்துறையினர், அவர்களை காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். தற்போது கோவை மத்திய சிறையில் அவர்கள் 3 பேரும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் […]

சென்னை- கோவைக்கு விமான டிக்கெட் 10 மடங்கு உயர்வு- பயணிகள் ஷாக்

இண்டிகோ விமான நிறுவனம் விமான சேவையை ரத்து செய்துள்ள சூழ்நிலையை பிற விமான நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி விமான டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளன. சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கான டிக்கெட் விலையை விமான நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்தியுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து 400 ஆக இருக்கும் நிலையில் தற்போது ரூ. 57 ஆயிரத்து 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு […]

பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் தன் குட்டிகளுடன் பெண் புலி

ஆனைமலை புலிகள் காப்பகம் வனச்சரகப்பகுதி 956 சதுர கிலோமீட்டர் ஆகும் இங்கு யானை கரடி சிறுத்தை, புலி,கருச்சிறுத்தை, புள்ளிமான், கடமான், காட்டுமாடு உள்ளிட்டவைகள் மற்றும் அபூர்வ வகை தாவரங்கள் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளதால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது சுற்றுலா பயணிகளுக்கு வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்ல தமிழ்நாடு டிராக் என்ற நடைமுறை இருந்து வருகிறது இந்நிலையில் உலாந்தி வனசரகம் டாப்ஸ்லிப் அருகே உள்ள பண்டார வரை மலைப்பகுதியில் பெண் புள்ளி ஒன்று தனது […]

ஆஸியில் வேலை.. கோவை வாலிபரிடம் 3.5லட்சம் மோசடி..ஒருவர் கைது

கோவை சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் ஆபிரகாம் மகன் ஜேம்ஸ். இவரிடம் whatsapp மூலம் ஈரோடு மாவட்டம் மோலப்பாளையம் அருகே உள்ள சின்ன செட்டிபாளையத்தைச் சேர்ந்த அருண் (42) என்பவர் அறிமுகமானார். அப்போது அருண் ஜேம்ஸ் -யிடம் ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பாக வேலை காலியாக இருப்பதாகவும் அதற்கு வேலையை பெற்று தருவதாகவும் கூறி உள்ளார். அப்போது அதற்கு விசா உள்ளிட்ட பணி 3.5 லட்சம் பணம் வேண்டும் என்று கூறி உள்ளார். அதை ஜேம்ஸ் கொடுத்து உள்ளார். ஆனால் […]

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி.. அரசு ஊழியர்கள் மறியல்

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டமானது அறிவிக்கபட்டு நடைபெற்று வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சிறப்பு காலம் வரை தொகுப்பு ஊதியம் மதிப்பூரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் சட்டபூர்வமான ஓய்வூதியம் வழங்க வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகையை […]

தொடர் மழை.. வீட்டின் சுவர் இடிந்தது…2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிர்தப்பினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜூபிலி கிணறு வீதி சுப்பிரமணியம் சந்து பகுதியில் பூர்வீக வீட்டில் சித்ரா மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோர் வசித்து வருகின்றனர் சித்ரா பொள்ளாச்சியில் உள்ள தனியார் துணிக்கடைக்கு பணிக்கு சென்று வருகிறார் சித்ராவின் மகள் சண்முகப்பிரியா மருமகன் சிவக்குமார் பேரக்குழந்தைகள் கிருத்திகராஜ்,தீக்சன் ஆகியோர் குடும்பத்துடன் நோற்று வீட்டில் தங்கி இருந்தனர் பொள்ளாச்சி பகுதியில் நோற்று முதல் காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் சித்ராவின் பூர்வீக வீடு பக்கவாட்டு சுவர் […]

பொள்ளாச்சி-தாடகை நாச்சியம்மன் கோவிலில் மகா தீபம்… பக்தர்களுக்கு அனுமதி

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடிக்கு மேல் மலை மீது அமைந்துள்ள பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி தாடகை நாச்சியம்மன் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகாதீபம் ஏற்றப்படும். இந்நிலையில் பிரசித்தி பெற்ற தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் மலைகளின் மீது மகா தீபம் ஏற்ற பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக இந்த […]

கோவை-கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு… குற்றவாளிகளின் போட்டோ வௌியீடு

கோவையில் கடந்த நவம்பர் இரண்டாம் தேதி விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி மூன்று பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரும் சுட்டுபிடிக்கப்பட்டனர். மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் இவர்கள் கோவில் பாளையம் பகுதியில் தேவராஜ் என்பவரை தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்ததை தொடர்ந்து இவர்கள் மூன்று பேர் மீதும் கொலை வழக்கு […]

பேய் விரட்ட சென்று விபரீதம்.. 3 நாட்களாக காட்டுக்குள் சிக்கிய குடும்பம்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த பிரியா (40) என்பவருக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பேய் ஓட்டுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பேய் விரட்ட தனது மகள், மகனை அழைத்து கொண்டு பிரியா 3 பேரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டில் யாருக்கும் சொல்லாமல் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது அங்கு பேய் விரட்ட சென்ற இடத்தில் அங்கேயே தங்கி பேய் விரட்டி கொள்ள கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தியதாக […]

மத்திய அரசின் தொகுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் தமிழகம் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு சார்ப்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பொதுச் செயலாளர் கவிஞர் குரு ராமலிங்கம்:- மத்திய அரசு தொழிலாளர்களுக்கு […]

கோவை கொள்ளை சம்பவம்… 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்.. ஒருவர் பலி..

கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள 13 வீடுகளில் பூட்டை உடைத்து 42 சவரன் தங்க நகைகளும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது.இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப், இர்ஃபான், கல்லு ஆகிய மூன்று பேரை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை தாக்கி விட்டு அங்கிருந்து […]

கோவை கணபதி வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கோவை, நவ.30 கோவை கணபதிமாநகர் வெற்றி விநாயகர் நகரில் உள்ள அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் அருள்மிகு கால பைரவர் சந்நிதி பிரதிஷ்டை விழா கடந்த 28ம் தேதி கணபதி வழிபாட்டுடன் தொடங்கி நடந்து வந்தது. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிர ஹோமம், வாஸ்து சாந்தி, த்வார பூஜைகள், திருமுறை பாராயாணம், அஷ்ட லட்சுமி பூஜை மற்றும் நான்குகால பூஜையை தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மகாகும்பா பிஷேக விழா நடைபெற்றது. […]

மகளிர் விடுதியில் பெண் வெட்டிக்கொலை… கணவர் வெறிச்செயல்…

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன்-ஸ்ரீபிரியா தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பாலமுருகனிடம் இருந்து பிரிந்து வந்து ஸ்ரீபிரியா கோவை மாவட்டத்தில் வந்து தனியார் விடுதியில் தங்கி அங்குள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், ஸ்ரீபிரியாவுக்கும் அவரது உறவினரான இசக்கிராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பாலமுருகனுக்கு இசக்கிராஜா அனுப்பி வைத்துள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பாலமுருகன், நேற்று இரவு […]

துணை முதல்வர் பிறந்தநாள்.. பொள்ளாச்சி ஜிஎச்-ல் 11 குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கல்

துணை முதல்வர் , மாநில திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி தெற்கு நகர திமுக சார்பில் பொறுப்பாளர் அமுதபாரதி ஏற்பாட்டில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பொள்ளாச்சிஅரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் 11குழந்தைகளுக்கு தங்க நாணயங்களை வழங்கினார். இதில் மாநில தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன்நகர மன்ற தலைவர் சியாமளா […]

கோவை கவுண்டம்பாளையம் கொள்ளை சம்பவம்- 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள், பணம் உள்ளிட்டவை திருட்டு போனது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடினர். பின்னர் குளத்துபாளையம் பகுதியில், கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். தற்போது அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து திருடிய 56 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை போலீசார் […]

துணை முதல்வர் பிறந்தநாள்… மாசாணியம்மன் கோவிலில் திமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

திமுக மாநில இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 49ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டுதமிழகம் முழுவதும் திமுகவினர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் . இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை திமுக சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்ககுமார் பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி ஏற்பாட்டில் பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டியும்,மேலும் […]

கோவை அருகே போதைபொருள் பறிமுதல்.. 3 பேர் கைது

கோவை, செட்டிபாளையம் பகுதியில் மெத்தம்பேட்டமை என்ற உயர்ரக போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கோத்ரேஜ் நிறுவனம் பின்புறம் நேரு நகர், வறட்டு குப்பை மற்றும் ஈச்சனாரி பிரிவு ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த மூன்று வாலிபர்களைப் பிடித்து நடத்திய சோதனையில் அவர்களிடம் உயர் ரக போதை பொருளான மெத்தம்பேட்டமைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் […]

கோவையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.. 4 பேர் கைது

கோவை மாநகரப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்வது தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக காவல் துறையினர் பள்ளிக் கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் காளப்பட்டி சாலையில் சென்ற போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த பிஜய் […]

கோவை, வேலந்தாவளம் சோதனை சாவடியில் 40 லட்சம் பறிமுதல்… ஒருவர் கைது

தமிழக – கேரளா எல்லைகளான கோவை வாளையார் மற்றும் வேலந்தாவளம் வழியாக கேரளாவிற்க்கு பணம் மற்றும் தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது.இதனைத் தொடர்ந்து தமிழக கேரளா எல்லை பகுதியான சோதனை சாவடிகளில் காவல் துறையின் அவ்வபோது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து வேலந்தாவளம் வழியாக கேரளா நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை வேலந்தாவளம் சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த இருசக்கர வாகனத்தில் மறைத்து […]

கோவை கல்லூரி மாணவி கூட்டுபலாத்காரம்… மகிளா கோர்ட்டுக்கு வந்த கைதான 3 பேர்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான மூன்று பேரை காவல் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மூவரையும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காவல்துறையினர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர்….. கோவை விமான நிலையம் அருகே கடந்த 2 ம் தேதி இரவு கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் தனிமையில் இருந்தார். அப்பொழுது அங்கு […]

தரையில் வழுக்கி விழுந்து ”ரோலக்ஸ்” பலி….

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மலையடிவார கிராமங்களில் ரோலக்ஸ் என்ற ஆண் காட்டு யானை ஊருக்குள் அடிக்கடி வந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இதனால் விலை நிலங்கள், வீடுகள் சேதப்படுத்துவதுடன் அவ்வப் போது மனிதர்களையும் தாக்கி கொள்வதாக புகார் எழுந்தது. விவசாயிகள் கோரிக்கையால், கும்கி யானை உதவியுடன் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சி, டாப்ஸ்லிப்பில் உள்ள யானைகள் முகாமில் பாதுகாத்தனர். பின்னர் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மந்திரி மட்டத்தில் […]

மேதகு பிரபாகரன் பிறந்தநாள்.. கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மேதகு பிரபாகரன் 71-வது பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாட்டம். கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு தமிழீழ விடுதலை தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் 71-வது பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கு.ராமகிருட்ணன்:-மேதகு பிரபாகரன் தமிழர்களை உலகம் முழுவதும் அறிய செய்தவர் என்றும் இலட்சியத்திற்காக 15 வயதில் போர் தொடங்கி […]

“SIR” வீடு, வீடாக விண்ணப்ப படிவங்கள் பெற வரும் அதிகாரிகள்- கலெக்டர் தகவல்

“SIR” வீடு, வீடாக விண்ணப்ப படிவங்கள் பெற வரும் அதிகாரிகள் : பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, விளக்கம் அளித்த வீடியோ வெளியீடு – கோவை மாவட்ட ஆட்சியர்..! கோவை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின் ஒரு பகுதியாக, மூன்று முக்கியமான பிரிவுகளில் உள்ள வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு மாவட்ட ஆட்சியர், தாசில்தார்களுக்கு அதிகாரம் அளித்து உள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து […]

சிக்காத சிறுத்தை- 8வது முறையாக கூண்டு மாற்றி வைத்த வனத்துறை

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் மீண்டும் சிறுத்தை பிடிக்க எட்டாவது முறையாக கூண்டு மாற்றி வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர். பொள்ளாச்சி-நவ-25கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பாறைப்பதி பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் சிறுத்தை ஒன்று தனியார் தோட்டத்து சாலையில் இருக்கும் மூன்று கன்று குட்டிகள் மற்றும் வளர்ப்பு ஆடுகளை அடித்துக் கொன்றது. இதை அடுத்து விவசாயிகள் ஆனைமலை புலிகள் காப்பகம் துணைக்கள இயக்குனர் தேவேந்திர குமார் மீனா இடம் […]

ஆராய்ச்சி தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது-அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்

கோவையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிறக்கு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ? அதே போல் தமிழகத்தில் எங்களுக்கு ஏன் தருவதில்லை என சில சலசலப்பு ஆங்காங்கே இருந்து வந்தது. நான் கடந்த 2024ம் ஆண்டு கோவைக்கு தேர்தல் பொறுப்பாளராக வந்த பிறகு மக்கள் தெரிவித்த கருத்தை முதல்வரிடம் கொண்டு சென்றோம். அப்போது அரசுக்கும் தொழில் தொடங்குவோருக்கும் […]

கோவையில் முதலீட்டாளார்கள் மாநாடு முதல்வர் தலைமையில் தொடக்கம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் 208 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோவை செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார். பின்னர், செம்மொழி பூங்காவில் உள்ள கலையரங்கில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கோவையை சேர்ந்த தொழில் அதிபர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்பட 150 பேருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். இந்நிலையில், தமிழ்நாடு தொழில்துறை சார்பில் டி.என்.ரைசிங் என்ற நிகழ்ச்சி கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி […]

கோவையில் செம்மொழி பூங்கா- முதல்வர் திறந்து வைத்தார்

கோவை மக்களின் பொழுதுபோக்கு தலமாக விளங்க உள்ள செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் . இதற்காக அவர் இன்று காலை 10.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு 11.15 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு வந்தார் . கோவை விமான நிலையத்துக் கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர் . வரவேற்பு முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் […]

”ரஜினி கேங்” திரைப்படம் 27ம் தேதி ரிலீஸ்…

மிஸ்ரி என்டர்பிரைசஸ் தயாரிப்பில் ரஜினி கேங் வரும் 27-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கி உள்ளது.இந்த படத்தில் நடிகர் ரஜினி கிஷன்,நடிகை திவிகா,மீரா,மொட்டை ராஜேந்திரன்,கூல் சுரேஷ், கோப்ரா பிரதீப் குமார்,கல்கி ராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜோன்ஸ் ரூபட் இசையமைத்துள்ளார். இந்தப் படம் முழுவதும் காமெடி மற்றும் பேய் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு 25 நாட்களில் […]

கோவையில் இன்று முதல்வர் திறக்கவுள்ள செம்மொழி பூங்கா..

கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணம் – செம்மொழி பூங்கா இன்று 25 ஆம் தேதி திறந்து வைக்கிறார் !!! கள ஆய்வுப் பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். கோவையில் செம்மொழி பூங்கா இன்று 25-ம் தேதி திறந்து வைக்கிறார். கள ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 25, 26 ஆம் தேதிகளில் கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் […]

கோவையில் நாளை மறுநாள் கேப்டன் ரத யாத்திரை- பிரேமலதா

கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில் தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் பேசிய அவர் இந்த கூட்டம் மிகவும் முக்கியமான ஒன்று. அனைத்து தொகுதிகளிலும் உள்ளம் தேடி இல்லம் நாடி ரத யாத்திரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்திற்கு ஏற்கனவே வந்திருக்க வேண்டும் ஆனால் தாயார் மறைவினால் வர இயலாமல் போனது என கூறினார். புயலே வந்தாலும் ஆலோசனை கூட்டம் […]

கோவையில் செம்மொழிப் பூங்காவாக மாறிய முதல்வர் ஓவியம்..

கோயமுத்தூரில் நாளை 25ம் தேதி செம்மொழி பூங்கா திறப்பு விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்கும் விதமாக செம்மொழிப் பூங்காவே வருக என்ற வகையில் விதைகளை செம்மண்ணில் பதித்து முதல்வரின் முழு உருவத்தை ஒரு ஓவியமாக வரைந்துள்ளேன். இந்த ஓவியத்தை ஒரு வாரம் காலமெடுத்து விதைகளை கொஞ்சம் கொஞ்சமாக வளரவிட்டு முதல்வர் வருகை தினத்தில் அவருக்கு அன்பு பரிசாக வரவேற்கும் விதமாக உருவாக்கியுள்ளேன். இந்த ஓவியத்தில் முதலில் செம்மண்ணில் அமைத்து பிறகு உருவத்தி ன் மேல் […]

கோவை-வில்வித்தை பயிற்சியாளர் போக்சோவில் கைது

கோவை அடுத்த வடவள்ளி – சிறுவாணி சாலை பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார். இவர் வில் வித்தை பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரிடம் 13 வயது சிறுமி வில் வித்தை பயிற்சிக்குச் சென்றார். சிறுமியிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்று உள்ளது. ஆனால் அச்சம் காரணமாக சிறுமி யாரிடமும் புகார் செய்யவில்லை, இந்நிலையில் அந்த சிறுமி தற்போது சென்னையில் நடந்த வில் வித்தை போட்டியில் […]

கோவையில் “Festival Street” நிகழ்ச்சி.. ஆடி பாடி மகிழ்ந்த குழந்தைகள்- பெரியவர்கள்

கோவை: கோயம்புத்தூர் விழா வீதி நிகழ்வில் சிறியவர்கள், பெரியவர்கள் என பலரும் உற்சாகமாக ஆடி பாடி மகிழ்ந்தனர். கோயம்புத்தூர் விழா துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இந்த கோயம்புத்தூர் விழாவில் நடத்துவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு அதன்படி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று விழாவீதி எனும் Festival Street நிகழ்ச்சி காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வள்ளிக்கும்மி ஆட்டம், உருமி ஆட்டம், பொய்கால் குதிரை, ஒயிலாட்டம், […]

கோவையில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீர்… துர்நாற்றம்

கோவையில் இன்று பிற்பகல் திடீர் கன மழை பெய்தது.அதன்படி கோவை காந்திபுரம் உக்கடம் பூ மார்க்கெட் ஆர் எஸ் புரம் சாய்பாபா காலனி சிவானந்தா காலனி கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் என மாநகரின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் உருவானது. மேலும் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழை நீர் தேங்கியால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.இதே போல் கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் மழை நீர் […]

கோவை- 18 ஆண்டுக்கு பிறகு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருவிழா நாளில் கண்ணீர் சிந்தும் அம்மன் : சிறப்புகள் குறித்து கூறிய கோவில் பூசாரி – கோவையில் உள்ள நூறாண்டு பழமை வாய்ந்த பெரிய கடை வீதி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா !!! கோவை, பெரிய கடை வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது இந்தத் திருக்கோவிலில் கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க, திருவிளக்கு பூஜை, கோ […]

கோவை-மதுரை மெட்ரோவுக்கு முதல்வர் தீவிர முயற்சி.. அமைச்சர் சிவசங்கர் தகவல்

அரியலூரில் நான்கு வழித்தடங்களில் கிராமப்புறங்களுக்கான புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு செயல்படுத்த அனுமதி இல்லை என்று கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் பாஜக அமைச்சர் 20 லட்சம் மக்கள் தொகை பயணம் இல்லை என்று கூறுகிறார். தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களுக்கான வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரோம் […]

கோவையில் செம்மொழி பூங்கா- 25ம் தேதி திறப்பு

கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், செம்மொழி பூங்கா கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மூலிகை தோட்டங்கள், நீரூற்றுக்கள், மலை குன்றுகள், உணவகங்கள், படிப்பகங்கள், குழந்தைகள் சிறுவர்கள் விளையாடும் பகுதிகள், என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.இதன் திறப்பு விழா மற்றும் ஏற்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பார்வையிட்டார். அப்போது அவருடன் தி.மு.க மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, கலெக்டர் பவன் குமார், மாநகராட்சி […]

”அமரன்” இன்று வௌியானதுபோல் இருக்கு-சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

கோவாவில் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் கோல்டன் பீகாக் விருதுக்கு ‘அமரன்’ திரைப்படம் முன் மொழியப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 3 படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ‘அமரன்’ திரைப்படமும் நேற்று கோவாவில் நடைபெறும் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் திரையிடப்படது. இதில் நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிலையில் விழாவை முடித்து நடிகர் கமலஹாசன் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வந்தனர் அவர்களுடன் நடிகை குஷ்புவும் விமான […]

கோவை டாக்ஸி டிரைவர்களை தாக்கிய உதகை டிரைவர்கள்- கலெக்டரிடம் மனு

கோவை டாக்ஸி ஓட்டுநர் உதகை டாக்ஸி ஓட்டுநர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வலியுறுத்தியும் சக டாக்சி ஓட்டுநர்கள் மனு அளித்தனர். கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். கால் டாக்ஸி ஓட்டுனரான இவர் நேற்று முன்தினம் கோவையில் இருந்து உதகைக்கு வாடகைக்கு சென்று விட்டு திரும்பும் பொழுது உதகையில் இருந்த கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேறு மாவட்டங்களில் இருந்து உதகைக்கு வாடகைக்கு வரக்கூடாது என்றும் உதகையிலிருந்தும் வாடகை ஏற்றக்கூடாது என்று […]

கலெக்டர் அலுவலகத்தில் SIR விழிப்புணர்வு ரங்கோலி… புதிய முயற்சி

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலம் அமைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் வருகை தரும் ஆட்சியர் அலுவலக வளாகமே விழிப்புணர்வுக்கான தளமாக தேர்வு செய்யப்பட்டது. இந்த கோலத்தை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின் […]

கீழ் சித்திரைசாவடி அணைக்கட்டை சீரமைக்கும் பணி- கோவை கலெக்டர் துவங்கி வைத்தார்

கோவை சிறுதுளி அமைப்பானது 2003ம் ஆண்டு துவங்கப்பட்டு, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்று சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை கோயம்புத்தூர் மற்றும் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது. இன்று சிறுதுளி அமைப்பானது கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை மற்றும் கரூர் வைஸ்யா வங்கியுடன் இணைந்து கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றின் முக்கிய அணைக்கட்டுகளான “புதுக்காடு மற்றும் கிழ்ச்சித்திரைச்சாவடி (குனியமுத்தூர்) அணைக்கட்டுகளை […]

பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

கோவை , பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகேமேட்டுப்பதி பாறைப்பதி போன்ற பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் இருந்தது குறிப்பாக அங்குள்ள ஆடு மற்றும் கன்றுக்குட்டிகளை தொடர்ந்து அடித்து சாப்பிட்டு வந்தது இதனை அடுத்து விவசாயிகள் வனத்துறையினருக்கு சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று மூன்று இடங்களில் கூண்டு வைத்து இரவு பகலாக சுழற்சி முறையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். […]

மெட்ரோவுக்கு அனுமதி கொடுக்காத பாஜகவை கண்டித்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள செஞ்சிலுவை சங்கம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.. இந்த ஆர்ப்பாட்டம் மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கான கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது, தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவது என தொடர்ந்து தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் புறக்கணிக்கும் ஒன்றிய பாஜக அரசு, […]

சிறு வயதிலேயே தமிழை கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது…பிரதமர் மோடி பேச்சு…

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவருக்கு தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து பிரதமர் மோடி, இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ‘பி.எம். கிசான்’ திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை வழங்கி பேசினார். இந்த திட்டத்தின் கீழ் […]

மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.. கோவை- மதுரையில் திமுக ஆர்ப்பாட்டம்

கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து நவ.20 கோவையிலும், நவ.21 மதுரையிலும் காலை 10 மணிக்கு  “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம் – மாணவர்களின் கல்வி நிதியைக் கூட ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து […]

கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து-ஏற்க முடியாதது- வைகோ விமர்சனம்

கோவை நகரில் மக்கள் தொகை அடிப்படையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது ஏற்க முடியாதது என ம.தி.மு.க.பொது செயலாளர் வை.கோ.கோவையில் தெரிவித்துள்ளார்.. ம.தி.மு.க.சார்பாக அதன் பொது செயலாளர் வை.கோ.தலைமையில் சமத்துவ நடைபயணம் எனும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து உள்ளவர்களை தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் பொது செயலாளர் வை.கோ.கோவை வந்தார். காந்திபுரம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,பள்ளி, பள்ளி கல்லூரி மாணவர்களை சீர்கெடுக்கும் […]

விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி.. கோவையில் இன்று பிரதமர் வழங்குகிறார்

கோவையில் இயற்கை வேளாண் மாநாடு : ரூபாய் 6000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூபாய் 18,000 கோடி நிதி – பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்..! கோவையில் இன்று நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 18,000 கோடி நிதியை பிரதமர் மோடி வழங்குகிறார். பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று கோவை வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ள தென்னிந்தியா இயற்கை வேளாண் […]

பொள்ளாச்சி அருகே சிக்கிய சிறுத்தை

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ளஆனைமலை குப்புச்சிபுதூர் அருகே மேட்டுப்பதி,பாறைப்பதி பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. இதனை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க மூன்று இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.மேலும் சுழற்சி முறையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து வனத்துறை வைத்திருந்த கூண்டுக்கு அருகில் வந்த சிறுத்தை, கூண்டின் உள்ளே இருந்த ஆட்டை சாப்பிடாமல் அருகிலேயே படுத்து இருந்து விட்டு பிடிபடாமல் போக்கு காட்டி சென்றது. இந்நிலையில் கடந்த சில […]

பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்ள பஸ் ஊழியர்களுக்கு RTO அறிவுரை

கோவை, பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் இன்று வட்டார போக்குவரத்து துறை சார்பில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செழியன் பங்கேற்று, பேருந்து ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது பயணிகளிடம் இருந்து வரும் குறைகளை கருத்தில் கொண்டு,குறைகளை களைய வேண்டும்,பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்,பேருந்தில் ஒலிபெருக்கி மூலம் அதிக சப்தத்துடன் பாடல்களை இயக்கக் கூடாது ,சாலைகளில் விபத்துக்கள் நிகழாமல் பேருந்துகளை கவனமாக கையாள வேண்டும் உள்ளிட்ட […]

SIR பணிக்கு எதிராக… பொள்ளாச்சியில் ஜாக்டோ- ஜியோ கண்டனம்

கோவை, பொள்ளாச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை உறுதிப்படுத்திட வேண்டும். ஜாக்டோ – ஜியோ ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய – மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் […]

பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் RED ZONE அறிவிப்பு

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகள் தற்காலிகமாக Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19″ம் தேதி பிரதமர் மோடி கோவை கொடிசியாவில் நடைபெற உள்ள இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை துவக்கி வைக்க வருகை புரிய உள்ளார். அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடி வேளாண் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க உள்ளார். விமான மூலம் கோவை வரும் பிரதமருக்கு விமான நிலைய பகுதி மற்றும் கொடிசியா சாலையில் இருபுறங்களிலும் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு […]

கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு.. அலுவலர்கள் அச்சம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் கோவை நகரத்தின் மையப் பகுதியில் அமைந்து உள்ளது. இது மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாக உள்ளது. இங்கு தினந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, குறைகேட்பு முகாமில் பங்கேற்க, மனு அளிக்க என ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழையது, புதியது என்று 2 கட்டடங்கள் உள்ளன. இதில் புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் அறைகளும், குடிமைப் […]

தூய்மை பணி டிரைவர்கள் பணி நீக்கத்தை கண்டித்து-காத்திருப்பு போராட்டம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் ஒப்பந்த தூய்மை பணி வாகன ஓட்டுனார்களாக பணிபுரிந்து வந்த பிரபாகரன் பெருமாள் சிவசங்கர் பிரகாஷ் ஆகிய நான்கு பேரை நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த ஒப்பந்த நிறுவனம் பணிநீக்கம் செய்தது. உரிய காரணங்கள் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாக சக வாகன ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தற்போது வரை அவர்கள் பணிக்கு எடுக்கப்படவில்லை என்று கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு சக ஒப்பந்த வாகன ஓட்டுநர்கள் […]

பெண்கள் பாதுகாப்பிற்கு ”ரோந்து வாகனம்” அறிமுகமான ஒரே நாளில் கல்லூரி மாணவி மீட்பு

கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் தொடர்புடையவர்கள் சுட்டு பிடிக்கப்பட்டனர். இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலையில் சனிக்கிழமை அன்று பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் “பிங்க் ரோந்து வாகனம்” அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் நேற்று இரவு எஸ்.எஸ்.ஐ கவிதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கல்லூரி மாணவி ஒருவர் வழி தெரியாமல் நின்று கொண்டு இருந்ததை பார்த்து போலீசார் விசாரணை […]

வால்பாறை சாலக்குடி சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலை தொடர் மலை காரணமாக பழுதடைத்ததால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் , பஸ்கள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக சாலை சீரமைக்கப்பட்டவுடன் வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் வனத்துறை என தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில் வால்பாறை சாலக்குடி சாலையில் ஆனைக்காயம் அருகில் ஒரு வளைவில் மழையின் காரணமாக விரிசல் விழுந்து பாலம் சேதம் அடைந்தது. இதனால் வால்பாறையில் இருந்து சோலையார் அணை வழியாக […]

கோவை அருகே கன்றுகுட்டியை அடித்து கொன்ற சிறுத்தை- பரபரப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்பிச்சிபுதூர் விவசாய தோட்டங்களில் பெருமாள் கரடு பகுதியில் இருந்து சிறுத்தை விவசாய தோட்டத்தில் வளர்த்து வரும் கிடா ஆடு கன்று குட்டிகள் தொடர்ந்து தாக்கி கொன்று வருகிறது வனத்துறை சார்பில் தனியார் தோட்டங்களில் மூன்று கூண்டுகள் சிறுத்தை பிடிக்க வைக்கப்பட்டிருந்த நிலையில் கூண்டுக்குள் சிக்காமல் சிறுத்தை பாலு என்பவர் தோட்டத்தில் வளர்த்து வந்த கன்று குட்டியை அடித்துக் கொன்றது இரவு நேரங்களில் வளர்ப்பு பிராணிகளை தாக்கும் சிறுத்தை நடமாட்டத்தைக் […]

பிரதமர் 19ம் தேதி கோவை வருகை… போக்குவரத்து மாற்றம்

பிரதமர் கோவை வருகையை முன்னிட்டு  19ம் தேதி பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  கோவை மாநகர காவல்துறை கூறியிருப்பதாவது…சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து கோவை மாநகருக்கு வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து விமான நிலையம் வழியாக வர தடை செய்யப்பட்டு உள்ளது. மாறாக நீலாம்பூரில் இருந்து எல் அண்டு டி பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர் வழியாக வரவேண்டும். […]

தேசிய கார் கோப்பை பந்தயம்- கோவையில் சீறி பாய்ந்த கார்கள்

கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே”யில் தேசிய அளவிலான கார் பந்தயம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, டெல்லி, மராட்டியம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் மிக முக்கிய பந்தயமான எல்.பி.ஜி. பார்முலா 4 பந்தயத்தில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வீரர் துருவ் கோஸ்சுவாமி 19 நிமிடம், 58 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். ருகன் ஆல்வா 2-ம் இடம், தில்ஜித் 3-ம் […]

கோவை-சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..அதிக சத்தத்துடன் வந்த வாகனம் பறிமுதல்

கோவை விழாவில் இன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்க இருசக்கர வாகனத்தின் சைலன்சர்களை அல்டர் செய்து அதிக சத்தத்துடன் வந்த வாகனங்களை மேடையில் இருந்த படியே பறிமுதல் செய்ய போக்குவரத்து காவல் துணை ஆணையர் அசோக்குமார் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவையில் யங் இந்தியன்ஸ் அமைப்பின் சார்பில் ஆண்டு தோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 18வது ஆண்டு கோவை விழா தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் , நகரின் பல்வேறு பகுதிகளில் […]

கோவையில் செம்மொழி பூங்கா விரைவில் திறப்பு-அமைச்சர் கே.என்.நேரு

கோவை செம்மொழி பூங்கா பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது, இந்த மாத இறுதியில் முதல்வர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.என். நேரு பேட்டி… கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்,நேரு, செம்மொழி பூங்கா பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இந்த […]

கோவை வரும் பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி… திருச்சியில் அய்யாக்கண்ணு பேட்டி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு,விவசாய சங்க தலைவர் நாகை காவிரி தனபாலன்,தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில் அன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-காவிரியில் மாதந்தோறும் நீர் பங்கீடு செய்வதை நிறுத்தி தினந்தோறும் நீர் பங்கீடு செய்து தமிழகத்துக்கு வழங்க வேண்டும்,மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்,மரபணு திருத்தப்பட்ட பயிர்களை ஊக்குவிப்பதற்கு 500 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்ததற்கு […]

கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகம் இன்று திறப்பு

ஒரு வருடத்துக்கு மேலாக பாரம்பரியத் தோற்றத்துடன் புதுப்பிக்கப்பட்ட கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த புதிய அலுவலகத்தை கோவை மாவட்ட ஆட்சியரும் SPCA தலைவருமான திரு. பவன் குமார் கிரியப்பனவர், ஐ.ஏ.எஸ்., திறந்து வைக்கிறார். இவ்விழாவுடன் இணைந்து RID 3206 ரோட்டரி கிளப்புகள் சார்பில் விலங்குகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி இயக்கமும் தொடங்கப்படுகிறது. சமூக விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த இயக்கத்தின் […]

கோவையில் சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டத்திற்கான 5 சதுரங்கப் போட்டிகள் துவக்கம்.

தமிழகத்தில் அதிக கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும் இலக்கை நோக்கி செல்லும் மாநில சதுரங்க சங்கம்.தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பில், கோவை மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்த 36வது முதல் 40வது வரையிலான தமிழ்நாடு சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம் குளோஸ்ட் சர்க்யூட் சதுரங்க (செஸ்) போட்டிகள் 2025-26, கோவையில் உள்ள ஹோட்டல் அலங்கார் கிராண்டில் தொடங்கியது.இந்த ஐந்து போட்டிகளும் டிசம்பர் 22, 2025 வரை நடைபெற உள்ளன.இது பற்றிய செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது […]

கோவை… கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு.. கேக் மிக்சிங் நிகழ்ச்சி

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள பிரபல லீ மெரிடியன் ஓட்டலில், 2025 கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாகத் வருடாந்திர கேக் மிக்சிங் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது இந்த நிகழ்வில், ஹோட்டலின் விருந்தினர்கள் மற்றும் ரோட்டரி கிளப்பில் இருந்து வந்த சிறப்பு அழைப்பாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வு குறித்து லீ மெரிடியன் மெரிடியன் ஹோட்டலின் நிர்வாகச் செஃப், டொமினிக் சேவியர் கூறுகையில் : 2025 கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கேக் கலவைக்காக 100 முதல் 120 […]

குழந்தை மாதிரி வளர்த்த கன்றுக்குட்டி.. சிறுத்தை தாக்கி பலி.. விவசாய குடும்பம் வேதனை

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்புச்சி புதூரில் கடந்த மாதம் 27ம் தேதி வனப்பகுதி விட்டு வெளியே வந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கன்று குட்டி, கிடா ஆடு தாக்கிக் கொன்றது.அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் வனத்துறையினர் தனியார் தோட்டங்களில் இரண்டு கூண்டுகள் வைத்து சிசிடிவி கேமரா மற்றும் வனத்துறை கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்த நிலையில் மீண்டும் சிறுத்தை நேற்று முன்தினம் இரவு சுமதி […]

கோவை-ராட்சத பாதாள குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் பல லட்சம் குடிநீர்

கோவை சக்தி சாலை சரவணம்பட்டி சந்திப்பில் சாலையின் கீழே உள்ள ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல லட்சம் லிட்டர் குடிநீர் அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர் . ஒரு கட்டத்தில் அதனை சரி செய்ய கொண்டுவரப்பட்ட ஜேசிபி வாகனமும் குழாய் உடைந்த பகுதியில் சரிந்து உள்ளே விழுந்ததால் அதனை மீட்க நீண்ட நேரம் போராடினர். சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் […]

கோவை அரசு தொழில்நுட்பகல்லூரி விடுதி சமையல் கூடத்தில் சுகாதார சீர்கேடு

கோவை, தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி விடுதியில் சமையல் கூடத்தில் சுகாதார சீர்கேடு என தொடர்ந்து வந்த புகார்கள். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இங்கு கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்தும் சுமார் 3000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். தமிழக […]

தோட்டத்தில் புகுந்த யானை கூட்டம்.. 2 யானைகள் முட்டி மோதல்- பரபரப்பு

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், கணுவாய், வரபாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அண்மை காலங்களாகவே அதிகரித்து உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன அவ்வப்போது வீடுகளிலும் ரேஷன் கடைகளிலும் வைக்கப்பட்டுள்ள அரிசி உள்ளிட்ட பொருட்களையும் தின்று செல்கிறது இதனால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குட்டி யானைகள் உட்பட ஏழுக்கும் […]

பொள்ளாச்சி அருகே ஆட்டு பட்டியில் தீ …. 30 ஆடுகள் தீயில் கருகி பலி

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நித்தின் இவரது மனைவி மாலதி பிரியா விவசாயத் தோட்டத்து வீட்டின் முன் பகுதியில் பரன் அமைத்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர் . நேற்று இரவு வழக்கம் போல வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஆட்டுக்குட்டிகளின் அலறல் சட்டம் கேட்டுள்ளது வெளியில் வந்து பார்த்தபோது பரண் மற்றும் […]

பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அடுத்த குப்புச்சிபுதூர் பாறை மேடு அருகே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டது இதனை அடுத்து விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி வனச்சகர் ஞான பாலமுருகன் தலைமையில் இரண்டு பகுதியில் சிறுத்தை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், சத்தியமூர்த்தி என்பவர் தோட்டத்தில் கோவிலுக்கு நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட ஆட்டுக்கடாவை அடித்து சாப்பிட்டது இதனை […]

அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என நாம் காட்ட வேண்டும்… கோவையில் VSB பேச்சு

வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்று நாம் காட்ட வேண்டும் என்றும் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக SIR செயலை கண்டித்து கோவை சிவானந்தாகாலனி பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]

SIR பணியை கைவிடக்கோரி… பொள்ளாச்சியில் கோரிக்கை மனு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாநில வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் எனப்படும் SIR பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்த வருவாய் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் SIR பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்தும் முயற்சினை கைவிட வேண்டும் எனக் கூறி என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை ஊராட்சி செயலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகைட்டு கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், தனி அலுவலர் […]

அரிசி லோடு ஏற்றி வந்த லாரியின் சக்கரம் சிக்கி விபத்து..

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வில்சன் என்பவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னை மாதவரம் பகுதியில் இருந்து 16 டன் அரிசி ஏற்றி வந்த லாரி கோவை சிரியன் சர்ச் சாலையில் ஓரமாக பிளாட்பாரத்தில் நிறுத்த முயன்ற போது லாரி சக்கரம் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது லாரி சாலையோரம் சாய்ந்து அருகில் இருக்கும் காம்பவுண்டு சுவர் பிடியில் நின்று கொண்டிருக்கிறதுசம்பவ […]

கோவை அருகே நாய்குட்டிகளை கல்லால் அடித்து கொன்ற வாலிபர்.. கொடூரம்

கோவை, சரவணம்பட்டி அடுத்த சிவ தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜிச்சு விஷ்ணு என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள ஐந்தாவது வீதி பகுதியில் ஜிச்சு விஷ்ணு நடந்து சென்ற பொழுது அங்கிருந்த வீட்டின் முன்பாக இரண்டு குட்டி நாய்கள் படுத்து கிடந்துள்ளன .அப்போது அதனை கண்ட விஷ்ணு திடீரென அங்கிருந்த செங்கல்லை எடுத்து நாய்க்குட்டிகளை கடுமையாக தாக்கியுள்ளார்.அதில் […]

சாதிசான்றிதழ் விவகாரம்.. நரிக்குறவர் மக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: நரிக்குறவர் இன மாண்பை காத்திடும் வண்ணம் சாதி சான்றிதழில் பெயரை மாற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழங்குடியின சமூகத்தில் சேர்க்கப்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு தற்பொழுது சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நம் மக்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதன் மூலம் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சாதிச் சான்றிதழ்களில் நரிக்குறவன் என்ற “ன்” என்ற எழுத்தை குறிப்பிட்டு வழங்குவதாகவும் எனவே அவர்களின் மாண்பை […]

பெண் கடத்தப்பட்டதாக இதுவரை புகார் இல்லை… கோவை கமிஷனர் தகவல்

கோவை இருகூரில் பெண் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பெண் கடத்தப்பட்டதாக இதுவரை எந்த புகாரும் இல்லை என மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தகவல் பெண் சத்தமிடுவது போன்ற சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருவதாகவும்,சிசிடிவி காட்சிகளில் சரியான அடையாளங்கள் தெரியவில்லை எனவும், காரின் பதிவு எண்ணை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும்,இதுவரை எந்த புகாரும் பதிவாகவில்லை. தனிப்படைகள் […]

கோவையில் இளம்பெண்ணிற்கு இன்ஸ்டாவில் கொலை மிரட்டல்…வாலிபர் கைது

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண். அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்திக் என்பவர் உடன் பழகி வந்தார். இந்நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேசி அவரை கண்டதுண்டமாக வெட்ட வேண்டும் என்று வீடியோ பதிவு செய்து இருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியை அடைந்த அந்த இளம் பெண் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு […]

கல்லூரி மாணவி வன்கொடுமை.. குற்றவாளிகளிடம் கோவை வடக்கு கோட்டாட்சியர் விசாரணை

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கோவை வடக்கு கோட்டாட்சியர் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திச் சென்றுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் விசாரணை செய்து சென்றார்.சுட்டு பிடிக்கப்பட்ட குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்தி என்கிற காளீஸ்வரன் ஆகிய மூன்று பேர் அனுமதிக்கப்பட்ட வார்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு சென்றார். அவரிடம் இது குறித்து செய்தியாளர்கள் […]

பெண் பலாத்காரம்-அதிகபட்ச தண்டனை பெற்று தருவது காவல்துறையின் பொறுப்பு

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வந்து அடைந்தார். விமான நிலையத்தில் அவரை மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் “இன்று ஆயிர கணக்கான தாய்மார்களுடன் இணைந்து விளக்கு பூஜையில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். பெண்களின் நம்பிக்கையும், தெய்வீக அன்பும் எனக்கு வியப்பை அளிக்கிறது,” என தெரிவித்தார். மேலும், சமீபத்தில் கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான […]