மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார்.. புதுச்சேரி முதல்வர் அதிரடி

புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார் என்று சட்டசபையில் ரங்கசாமி அறிவித்தார். Puducherry Assembly unanimously passes resolution seeking statehood – India Today புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில், அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நடந்தது. அப்போது எதிர்கட்சித்தலைவர் குறுக்கிட்டு, புதுவை எங்கும் போராட்டம் நடக்கிறது. ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தை அரசு […]

தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல்?

 2021 சட்டப்பேரவைத் தேர்தலை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தெரிவித்துள்ளார். கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் வாக்காளர் ஆதரவு வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இதை கருத்தில் கொண்டு அடுத்த தேர்தலை எதிர்கொள்ள கட்சியினர் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், தேர்தலை முன்னிட்டு கட்சியின் நிலைப்பாடு மற்றும் அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். அதே நேரத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களை […]

சட்டமன்ற தேர்தலில் நானும்-ராதிகாவும் போட்டியிடவில்லை… சரத்குமார்

பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை வந்தார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், ”வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஆனால் என்னுடன் பயணிக்கும் சகோதரர்களுக்கு வாய்ப்பு வாங்கி தருவேன். தேர்தலில் போட்டியிடாதது எனது விருப்பம். நான் சுயநலமாக சிந்திக்கவில்லை, உடன் பயணிப்பவர்கள் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார். எனது கூட்டணி […]

சட்டமன்ற தேர்தலில் கோவையில் 10 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- VSB பேச்சு

சிங்காநல்லூர் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிக்காக கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் காமராஜர் ரோடு ராமானுஜர் நகரில் நேற்று திறக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல கழக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்;- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நடைபெற உள்ள மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் பங்கேற்க மாண்புமிகு […]