அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினி சாமிதரிசனம்
அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பாலா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். சம்மந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரங்களில் சாமி தரிசனம் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது பக்தர்கள் ஐஸ்வர்யா ரஜினி மற்றும் இயக்குனர் பாலாவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
சேலம் வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் நடிகர் அருண்விஜய் சாமிதரிசனம்
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “ரெட்டை தல” திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண்விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இதானி வந்ததை அறிந்த ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் விஜய், […]
சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 27 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் 16 அன்று மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பம்பை ஆற்றில் புனித நீராடி, 18 படிகளை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜை டிசம்பர் 26 அன்று நடைபெற உள்ள […]
கரூர்- ஸ்ரீ பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
கரூர் குளத்துப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய கார்த்திகை மாத திருவிழாவை முன்னிட்டு கரக பாலிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு குளத்துப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகர்,பகவதி அம்மன் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ச்சியாக சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன் பின்னர் தாரை தப்பட்டைகள் முழங்க ஆலயத்தில் கரக பாலிக்கு நிகழ்ச்சி நடைபெற்று […]
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடிகர் ஜெயராம் சாமிதரிசனம்
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இன்றுகுடும்பத்துடன் சுவாமி தரிசனம். கோவில் யானை மங்கலத்திற்கு பழங்கள் வழங்கினார்.50 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணத்திற்கு வருவது மகிழ்ச்சி என நெகழ்ச்சியுடன் ஜெயராம் தெரிவித்தார். பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இன்று மாலை கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்திற்கு குடும்பத்துடன் வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயராம்,தனது அம்மாவின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள செருகுடி தான் .சிறு வயதில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
ஆந்திராவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை ஜனாதிபதி திரெளபதி முர்மு 4 மணியளவில் ரேணிகுண்டா வந்திறங்கினார். அங்கு, ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஆந்திர மாநில மந்திரி வங்கலப்புடி அனிதா, திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கடேஸ்வர், போலீஸ் ஐ.ஜி.ராஜகுமாரி, திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு, திருப்பதி தொகுதி எம்.பி. குருமூர்த்தி, ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பொஜ்ஜல.சுதீர்ரெட்டி ஆகியோர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். அதன்பிறகு ஜனாதிபதி ரேணிகுண்டா விமான […]