செங்கோட்டையனின் நிலை யாருக்கும் வரக்கூடாது – திண்டுக்கல் சீனிவாசன்

தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தேமுதிகவின் கோரிக்கை தொடர்பாக மாநில அளவில் முடிவெடுக்க முடியவில்லை என்பதால் தேசிய தலைமை பேச்சுவார்த்தை நடத்துகிறது. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும் என அதிமுக, மாநில பாஜக எதிர்பார்க்கிறது. தேமுதிகவை பாஜக அழைத்தாலும், அதிமுக அழைத்தாலும் கூட்டணி எங்களுடன் தான். […]

விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்?.. செல்லூர் கேள்வி

விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், “ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் விஜயை முதல்வர் ஆக்கலாம். எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர். என சொல்லிக் கொள்ளலாம், மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தலுக்கு பின்னர் தவெக என்னவாக போகிறது என்பது இப்போதே தெரிகிறது,”என்றார்.

அரசியல் அனுபவம் இருந்தும் தவறான முடிவு? – செங்கோட்டையனை சாடிய வானதி!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குச் செல்ல வேண்டும் என்பது தனது ஆசை என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை தமிழக அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்ற தலைவராக இருப்பதால், அவர் சட்டசபைக்கு வருவது கட்சிக்கும் தமிழகத்துக்கும் பெரும் பலமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “சகோதரர் அண்ணாமலை சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என்பது எங்கள் எல்லோரின் விருப்பம்” என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.வானதி சீனிவாசன் மேலும் கூறுகையில், […]

தோல்வி பயத்தில் பேசுகிறார் ஈபிஎஸ்.. செங்கோட்டையன்

கோவை விமானநிலையத்தில் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது.. தோல்வி பயத்தால்தான் எடப்பாடி பழனிசாமி தினமும் ஒரு தேர்தல் அறிக்கையை வௌியிட்டு வருகிறார். தேர்தல் தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார் என்று இவ்வாறு தெரிவித்தார்.

செங்கோட்டையனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த டிடிவி

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-எனது அன்பிற்குரிய மூத்த சகோதரரும், முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செங்கோட்டையன் அவர்கள், நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மக்கள் திலகத்திற்கு செங்கோட்டையன் மலரஞ்சலி

தமிழக முன்னாள் முதலமைச்சரும், ‘புரட்சித் தலைவர்’ என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் அவருக்குத் தங்களது மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மரியாதை செலுத்த உள்ள நிலையில், அரசியல் களம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போது தமிழக வெற்றிக் […]

இனி செங்கோட்டையன் போடும் ரூட்டில் விஜய் பயணிப்பார்“- என். ஆனந்த்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் வரும் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெறும் பரப்புரை மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், “தங்கமான அண்ணன் கிடச்சிருக்காரு… இனி […]

விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி” – செங்ஸ்…

தவெக தலைவர் விஜய், ஈரோட்டில் நடத்தவுள்ள கூட்டத்தில் மாற்று கட்சியினர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோட்டி இன்று (டிச.12) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில், “விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி. ஈரோடு கூட்டத்தில், தவெகவில் யாரெல்லாம் இணையவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார். இதனால், அடுத்தடுத்து பலரும் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்…?

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் இருந்து வருகிறார். இந்நிலையில் அங்கிருந்து விலகி வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. வைத்திலிங்கம், 2001-2006 மற்றும் 2011- 2016 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இப்போது அவர் ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கடந்த மாதம் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் […]

செங்கோட்டையனை கண்டித்து அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 27-ம் தேதி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார். அவருக்கு த.வெ.க.வில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பதவிகள் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் கோபியில் உள்ள செங்கோட்டையன் அலுவலகத்தில் அவர் வைத்திருந்த பழைய பெயர் பலகை அகற்றப்பட்டு புதிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய் உருவப்படங்களுடன் செங்கோட்டையன் உருவப்படமும் இடம் பெற்றுள்ளது. […]