அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என நாம் காட்ட வேண்டும்… கோவையில் VSB பேச்சு

வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்று நாம் காட்ட வேண்டும் என்றும் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக SIR செயலை கண்டித்து கோவை சிவானந்தாகாலனி பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]