சென்னையில் 2,119 கிலோ கஞ்சா தீ வைத்து அழித்தல்..

சென்னையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,119 கிலோ கஞ்சா கூடுதல் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் தீ வைத்து அழிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கையில் போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்ததாக 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குகளில் […]

சென்னை-ஃபோரம் மாலில் திடீர் தீ… அலறி அடித்து ஓடிய மக்கள்

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ளது ஃபோரம் மால். இங்கு உணவகங்ள், தியேட்டர்கள் உள்ளிட்ட பல கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் ஃபோரம் மாலில் கீழ்த்தளத்தில் உள்ள உணவகத்தில் திடீரென தீ பற்றியது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரியப்பட்டது. அவர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருபக்கம் ஃபோரம் மாலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றிவிட்டனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டிருக்கிறது..

ரூ.60.68 கோடியில் புதிய மேம்பாலம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.2.2026) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 60 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் ராஜீவ் காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார்.ராஜீவ் காந்தி சாலையானது மத்திய கைலாஷ் பகுதியில் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து தொடங்குகிறது. இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடம் “T” வடிவிலானதாகும். இச்சாலை சந்திப்பில், அலுவலகங்கள், […]

நடிகர் மன்சூர் அலிகான் மகன் கார் மரத்தில் மோதி விபத்து

நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் சென்ற கார், சாலையோர மரத்தில் மோதி விபத்து. நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சென்னை ஹாடோஸ் சாலையில் இருந்து உத்தமர் காந்தி சாலை நோக்கி அதிவேகத்தில் சென்ற கார், வேகத்தடையில் ஏறி கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கவிழந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – தடை விதிக்க மறுப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 22ம் தேதி நடக்க இருந்த தேர்தலுக்கு எதிராக 4 தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். கடந்த முறை தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், இம்முறை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை மாற்ற விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

திடீரென சென்னை -இலங்கை விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டிகளை காண்பதற்காக இந்தியாவிலிருந்து நிறையப்பேர் அங்கு விமானம் மூலம் செல்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து இலங்கை செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகின்றன. இதனிடையே வரும் 15ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை காண்பதற்காக தற்போது சென்னையிலிருந்து இலங்கை […]

என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?இபிஎஸ் சவால்

சென்னையில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அங்கு கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இவ்வாறு அவர் பதிலளித்து பேசியதை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு விவரம்: ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைக்கும் பணியில் மும்முரமாக உள்ளது. அதிமுகவும் என்.டி.ஏ கூட்டணியை அமைத்து தேர்தலுக்கு தயாராகிவிட்டோம். ஏற்கனவே 185 தொகுதிகளில் எழுச்சிப்பயணத்தை முடித்துவிட்டேன். 2026ல் தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். கருத்துக் கணிப்புகளின் […]

தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கடும் கண்டனம்

சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பூக்கடை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்களிடம் கள ஆய்வு (சர்வே) பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனுமதியின்றி சர்வே எடுப்பதாகக் கூறி திமுகவினர் அவர்களைத் தடுத்ததாக சொல்லப்படுகிறது. இது இரு தரப்பினரிடையே வாக்குவாதமாக மாறி, பின் கைக்கலப்பாக உருவெடுத்தது. போலீசார் விரைந்து வந்து தடுத்ததால் பெரிய அளவிலான மோதல் தவிர்க்கப்பட்டது. இந்த வன்முறை குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள […]

ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு- மனைவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு தொடர்பாக அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். விவகாரத்து வழக்கில் இந்தியாவில் உள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய ஆணையரை நியமிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். கலிபோர்னியாவில் நடக்கும் விவகாரத்து வழக்கில் தனக்கு உதவ ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தனபால், ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டுள்ளார். […]

சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு

சென்னை, கோவையில் தனியார் பங்களிப்புடன் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முன்அனுபவம் உள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம், வழிகாட்டு நெறிமுறைகளை tnawb.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் விலாசத்திற்கு பிப்.26க்குள் அனுப்ப வேண்டும்.

சென்னை-டில்லி செல்லயிருந்த ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு

சென்னை உள்நாட்டு முனையம் டெர்மினல் 4ல் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று காலை 6 மணிக்கு டெல்லி புறப்பட தயாரானது. விமானத்தில், 165 பயணிகள் 6 விமான ஊழியர்கள் உட்பட 171 இருந்தனர். விமானத்தின் இயந்திரங்களை விமானிகள் சரி பார்த்தனர். அப்போது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானிகள் கண்டுபிடித்தனர். உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் டெல்லி […]

நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (09.02.2026) வருவாய்த்துறை சார்பாக, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டம், கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி மற்றும் அரசுப் பண்ணை, மடுவன்கரை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாக்களில் 158 நரிக்குறவர் பிரிவு பயனாளிகள் உட்பட்ட மொத்தம் 299 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலனுக்காக […]

பறவை காய்ச்சல் பரவல்- பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்து கிடந்த நிலையில், அவற்றுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல் எனும் (AH5N1) இன்ஃபுளுயன்சா என்பது பறவைகளுக்கு வரும் நோய். இது, பெரும்பாலும் காட்டில் வசிக்கும் பறவைகள் மத்தியில் பரவக்கூடிய ஒரு வைரஸ். ஆனாலும், வளர்ப்புக் கோழிகள், பிற பறவை மற்றும் விலங்குகளையும் இந்த வைரஸ் தாக்கும். இந்த வைரஸ்களால் மனிதர்களுக்கும் நோய் […]

சென்னையில் கடும் பனி- 40 விமான சேவை பாதிப்பு

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவுவியதால் சுமார் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர், ஐதராபாத், துபாய், புனே உள்ளிட்ட 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, கோவை, திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியிலிருந்து, கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலைய பகுதிகளிலும் கடுமையான மூடுபனி […]

மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் சுரங்கப்பணிகள் நிறைவு… அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், வழித்தடம் 3ல் “நொய்யல்” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது. சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று […]

சென்னையில் 474 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்

சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வரும் ஜூன் இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் என்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் களஆய்வு மேற்கொண்டு பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.

தங்கப் பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு

குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை உரியவரிடமே ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவிற்கு கடல் கடந்தும் பாராட்டுகள் குவிகின்றன. பத்மாவின் நேர்மையை அறிந்த மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன் அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார். தனது உதவியாளரான வடிவுக்கரசி என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்து பத்மாவிடம் பரிசை வழங்கியதோடு, வீடியோ காலில் உரையாடி மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

சென்னையில் பறவை காய்ச்சல் அலர்ட்… இறந்த பறவைகளை தொடாதீங்க

சென்னை : அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காக்களில் பறவைக் காய்ச்சல் H5N1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பல முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலாவதாக, காக்கள், கோழிகள் அல்லது வேறு பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தால் அவற்றை மனிதர்கள் வெறும் கையால் […]

கோடம்பாக்கத்தில் அரசு பஸ் மோதி 3 பேர் காயம்

சென்னை கோடம்பாக்கத்தில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தப்பியோட்டம்.தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனம். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை-காகங்கள் இறப்பிற்கு பறவை காய்ச்சல் தான் காரணம்

சென்னை அடையாறில் காகங்கள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சல் காரணம் என தலைமை செயலருக்கு ஆராய்ச்சி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு கற்றியுள்ள பகுதிகளில் காகங்கள் திடீரென உயிரிழந்த நிலையில் சோதனை நடக்குப்பட்டது. காகங்கள் இறப்புக்கான காரணத்தை அறிய போபாலில் உள் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் சோதனை நடந்தது. இந்த நிலையில் தலைமை செயலருக்கு ஆராய்ச்சி நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், ” […]

திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மௌன விரதம் இருந்து வழிபாடு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானம் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு சென்றார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது எந்த கட்சியுடன் கூட்டணி குறித்து பேசாத நிலையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமானை தரிசனம் செய்து நாளை வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மௌன விரதம் இருப்பதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு […]

சென்னையில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3233 சார்பில் சென்னை, கே.கே. நகரில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’ நடைபெற்றது. ‘டீம் கேன்சர் கேர்’ (Team Cancer Care) அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், நகரின் அங்கீகரிக்கப்படாத நாயகர்களான 300-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மூலம் பயனடைந்தனர். தலை முதல் கால் வரை […]

லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

சென்னை கே.கே நகர், அடுத்த நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுபாஷ் (வயது19). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வங்கி கடன் மூலம் மாத தவணை செலுத்தும் வகையில் ரூ.3 லட்சத்துக்கு பழைய கார் ஒன்றை வாங்கினார். இதற்கிடையில் தனிநபர் கடன் பெற்று காருக்கு வாங்கிய கடனை அடைக்க திட்டமிட்ட சுபாஷ், நேற்று இரவு ஆன்லைனில் பிரபல […]

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

அண்ணாவின் நினைவு நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியானது சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச் சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நேரு, தயாநிதி மாறன், ஆ.ராசா மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். தொடர்ந்து, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர் ம்.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி.ராசா .அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி […]

ஆயுதப்படை பெண் போலிசின் கணவர் போக்சோவில் கைது

சென்னை பாண்டி பஜாரில் பள்ளிக்கு நடந்து சென்ற 15 வயது மாணவியிடம் செல்போன் நம்பரை கேட்டு தொந்தரவு செய்த பெண் காவலரின் கணவர் பூபாலனை(33) தேனாம்பேட்டை மகளிர் போலீஸ் போக்சோவின் கீழ் கைது செய்தனர். வீட்டின் மொட்டை மாடியில் நின்று பறக்கும் முத்தம் கொடுத்து மாணவிக்கு பெண் காவலரின் கணவர் தொந்தரவு கொடுத்துள்ளார்.

ரூ.307 கோடி குடியிருப்புப் பணிகள் ஆய்வு: சைதாப்பேட்டையில் அமைச்சர்கள் அதிரடி

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரத்தில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் 1,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (30.1.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்வேறு முக்கிய விளக்கங்களை அளித்தார்: “தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய இந்தியாவில் எந்த மாநில அரசாலும் முடியாது. இனச் சுழற்சி முறையைப் பின்பற்றாமல் […]

சென்னையில் துணிகரம்: வாக்கிங் சென்ற பெண்ணை மிரட்டி வீட்டுக்குள் புகுந்த கும்பல் – 15 சவரன், ₹25 லட்சம் கொள்ளை

சென்னை புழல் அருகே இன்று அதிகாலை ஒரு குடும்பத்தையே கத்திமுனையில் கட்டிப்போட்டு, பெரும் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. புழல் மகாவீர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (50), ஜவுளி வியாபாரி. இன்று அதிகாலை இவரது மனைவி வசந்தா நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென வசந்தாவைக் கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டிற்குள் தள்ளியது. தொடர்ந்து வீட்டிற்குள் புகுந்த அந்தகும்பல், அங்கிருந்த விஜயகுமார், […]

3 பேர் கொலை வழக்கில் பெண்ணின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் மீட்பு

சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது குழந்தை ஆகிய மூவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஏற்கனவே கௌரவ்குமார் மற்றும் குழந்தையின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான முனிதா குமாரியின் உடலைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்து முனிதா குமாரியின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இக்கொலை தொடர்பாகப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், […]

கேன்டீன் வளாகத்தில் பெண் பலாத்காரம்… 3 பேர் கைது

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீன், வளாகத்தில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேன்டீனில் பணிபுரிந்த பெண்ணை உரிமையாளர் உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குணசேகரன், கார்த்திகேயன், முத்துச்செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் ‘தவெக’ செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். […]

மூட்டையில் பிணம்: அடையார் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் – 5 பேர் சிக்கினர்

சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் கடந்த 26-ம் தேதி சாலை ஓரம் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த அடையார் போலீசார், அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வடமாநில வாலிபர் ஒருவர் பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், இருவர் மோட்டார் சைக்கிளில் மூட்டையைக் கொண்டு வந்து வீசி சென்றது உறுதியானது. கொல்லப்பட்ட […]

தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் தவெக: ராயப்பேட்டையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நாளை (28.1.2026, புதன்கிழமை) மாலை 4 மணி அளவில், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் […]

இந்தியாவிற்கே ரோல் மாடல் அரசு திராவிடல் மாடல் அரசு … உதயநிதி பேச்சு

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (TNWESafe) சார்பில் நடைபெறும் இரண்டு நாள் உலக மகளிர் உச்சி மாநாடு – 2026ல் ஆற்றிய வரவேற்புரை:- தமிழ்நாட்டு மகளிரினுடைய வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய 5 ஆயிரம் கோடி ரூபாயில் Tamil Nadu WE Safe திட்டத்தை இன்றைய […]

சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை

உலக மகளிர் உச்சி மாநாடு 2026-னை தொடங்கி வைத்து, TNWESafe திட்டத்தையும், மகளிருக்கான பல்வேறு வாகன சேவைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (27.01.2026) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் இரண்டு நாள் உலக மகளிர் உச்சி மாநாடு 2026-னை தொடங்கி வைத்து, TNWESafe திட்டத்தையும் தொடங்கி வைத்தார்கள். […]

சென்னை ஏர்போட்டில் மின் கசிவு..திடீர் தீ விபத்தால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தைத் தொடர்ந்து ஏர்லைன்ஸ் ஊழியர்கள், பயணிகள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சிறிது நேரம் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீவிபத்தால் ஏற்பட்ட புகை சர்வதேச விமானங்கள் […]

சென்னை மெரினாவில் 5 அடுக்கு பாதுகாப்பு: டிரோன்கள் பறக்கத் தடை

இந்திய குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் குடியரசு தின விழாவை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை மாநகர் முழுவதும், குறிப்பாகக் காமராஜர் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் மற்றும் […]

ரூ.3.80 லட்சத்துக்கு ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை

சென்னை காசிமேடு பவர் குப்பம் இரண்டாவது பிளாக் சேர்ந்த திலகவதி (25). இவரது கணவர் சகாயராஜ் இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வயதில் சர்வேஷ், ஏழு வயதில் பிரியா, இரண்டு வயதில் கிருத்திவிக் என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள அரசு மருத்துவமனையில் திலகவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் பிறந்த குழந்தையை விற்பனை செய்து விடலாம் என […]

டெங்கு காய்ச்சல்..கல்லூரி மாணவி பலி

சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியில் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி இயஙகி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டஙகள் மற்றும் மாநிலஙகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் தங்கி படித்து வந்த பாலகாடு பகுதியை சேர்ந்த மாணவி சரண்யா சில நாட்களாக காய்ச்சலால பாதிக்கபட்டு வந்தவர் மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார் ,நேற்று அதிக அளவில் காய்சலால் மாணவி பாதிக்கபட்டதால் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டார். […]

தமிழகத்தில் 23ம் தேதி மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 21-01-2026 மற்றும் 22-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 23-01-2026: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:24 மணி […]

சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி

சென்னையில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். பல்லாவரத்தில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது மோதியது. லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கோகுல்ராஜ், தனாய் மண்டல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை பள்ளிக்கரணை அருகே லாரி மோதியதில் டூவீலரில் சென்ற அருணாச்சலம் (51) என்பவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று சென்னையில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு

இளநிலை படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெறவேண்டும். இது, ஜே.இ.இ. முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படும்.இதில், முதன்மை தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டுக்கான ஜே.இ.இ. முதல்கட்ட முதன்மை தேர்வு இன்று தொடங்கி ஜனவரி 30-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதன்படி, 22, 23, 24 மற்றும் 28 ஆகிய நாட்களிலும் தேர்வு […]

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக பாடல் எழுதிய எம்பி கனிமொழி

சென்னையில் கலாச்சாரத் திருவிழாவான ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ இன்று தொடங்குவது கலை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விழாவின் சிறப்பம்சங்கள் இதோ: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று மாலை இந்த விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். கனிமொழி எம்.பி. எழுதிய பாடல்: இவ்விழாவிற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் ‘வானமில்லை பூமியில்லை’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பாடலை எழுதியுள்ளார். நாட்டுப்புறக் கலைகள், பாரம்பரிய இசை மற்றும் உணவுகளை […]

சென்னையிலிருந்து தென்காசிக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து தென்காசிக்கு இன்று இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06072) இயக்கப்படுகிறது. 8 தூங்கும் வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, […]

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பயங்கரம்: ரவுடி வெட்டிக்கொலை

சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதிகேசவன் (23). பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் ஆவடியைச் சேர்ந்த சுசித்ரா (21) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனிடையே, கர்ப்பிணியாக இருந்த சுசித்ராவுக்கு கடந்த 18-ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. நேற்று இரவு பிறந்து சில நாட்களே ஆன குழந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. இது குறித்துத் தகவல் அறிந்த […]

சென்னை மெட்ரோ அப்டேட்: போரூர் – வடபழனி இடையே இன்று ரயில் சோதனை ஓட்டம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, போரூர் முதல் வடபழனி வரையிலான 7 கி.மீ. வழித்தடத்தில் இன்று (ஜனவரி 11) சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே பூந்தமல்லி – போரூர் இடையிலான 10 கி.மீ. தூரத்திற்குச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக இந்தச் சோதனை இன்று காலை 11:00 மணியளவில் தொடங்குகிறது. இந்த வழித்தடத்தின் சிறப்பம்சமே இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பாலம் […]

சென்னை கடற்கரைகளில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னையின் அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமாகவும் விளங்கும் மெரினா கடற்கரையைத் தூய்மையாகவும், சர்வதேச தரத்திலும் பராமரிக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், கடற்கரையின் சுகாதாரத்தைப் பேணுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மெரினா கடற்கரையைத் தூய்மைப்படுத்த 7 நவீன இயந்திரங்கள் மற்றும் சுழற்சி முறையில் 274 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் […]

சென்னையில் 24 உதவி கமிஷனர்கள் இடமாற்றம்

சென்னையில் 24 உதவி கமிஷனர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 88 துணை போலீஸ் சூப்பிரண்டுக்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. (பொறுப்பு) வெங்கடராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி, சென்னையில் ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் ராஜபல் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் காயத்ரி வேப்பேரிக்கும். உளவுப்பிரிவு உதவி கமிஷனர் சங்கரநாராயணன் அமலாக்கப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். பரங்கிமலை உதவி கமிஷனர் முரளி செம்பியத்துக்கும். மீனம்பாக்கம் உதவி கமிஷனர் முகேஷ் ஜெயகுமார் கிண்டிக்கும். தரமணி உதவி கமிஷனர் […]

சென்னை கிண்டி கொலை வழக்கு- பாண்டியன் – பாஸ்கருக்கு ஆயுள் தண்டனை

சென்னை கிண்டியில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பரபரப்பான கொலை வழக்கில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜனவரி 10, 2026) சென்னை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை கிண்டி பகுதியில் கார்த்திக் என்பவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரும் வகையில் காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தனது இறுதித் தீர்ப்பை அறிவித்துள்ளது. 🗞️ […]

சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி

சென்னை, மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடற்கரையை நேரில் ஆய்வும் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறமுள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும் என உத்தரவிட்டு, நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்படும் பகுதிகளில் எந்த கடைகளையும் அமைக்க கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தனர்.இந்த நிலையில் வழக்கு […]

வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய ஜன.,10, 11-ல் சிறப்பு முகாம்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, 10.1.2026 (சனிக்கிழமை) மற்றும் 11.1.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் 19.12.2025 முதல் […]

இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது-சென்னையில் பரபரப்பு

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அரசின் “நோ ஒர்க் – நோ பே” அதிரடி: ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தொடக்கக் கல்வித்துறை தற்போது கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, […]

சென்னை- 781 பூங்காக்களிலும் தீவிர தூய்மைப்பணி

சென்னையில் உள்ள 781 பூங்காக்களிலும் தீவிரத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மை பணியாளர்கள் அவற்றை சுத்தம் செய்தனர். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினசரி சராசரியாக 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், சராசரியாக நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளும் நடவடிக்கையாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பேருந்து […]

சென்னையிலிருந்து வரும் 9ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்..

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து 22,792 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “ பொங்கலையொட்டி சென்னையில் இருந்து ஜனவரி 9 முதல் 14ஆம் தேதி வரை 22,797 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 12,552 பேருந்துகளுடன் 10,245 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு முன்பதிபு செய்ய […]

நாளை முதல் அமல்: காலி மதுபாட்டில்களைக் கொடுத்தால் ரூ.10 திரும்பப் பெறலாம்

சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் நாளை (ஜனவரி 06, 2026) முதல் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பாக மக்கள் செய்தி தொடர்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,டாஸ்மாக் லிட், சென்னை (வடக்கு தெற்கு மத்தியம்) மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 06-01-2026 முதல் அமல்படத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு. அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி. மதுபாட்டில்களை […]

கோவை – சென்னை இடையே சிறப்பு ரயில்

தென்னக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-கோவையில் இருந்து வருகிற 11, 18-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் கோவை – சென்னை சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06034) மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை செல்லும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஜனவரி 12, 19-ந் தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்படும் சென்னை-கோவை விரைவு ரெயில் (எண்:06033) மறுநாள் காலை 9 மணிக்கு கோவை வந்தடையும்.இந்த ரெயில் […]

புத்தாண்டு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ […]

நாளை முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்கள் நேர மாற்றம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்/ வந்து சேரும் ரயில்களின் நேர மாற்றம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்/ வந்து சேரும் ரயில்களின் நேர மாற்றம் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்/ வந்து சேரும் ரயில்களின் நேர மாற்றம்

சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம்” வேண்டி அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் இன்று எழும்பூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை காவல்துறையினர், ஆசிரியர்களுக்கு போராடுவதற்கான இடம் மற்றும் அனுமதி கொடுக்காததன் காரணமாக பல்வேறு பொது இடங்களில் ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். டிசம்பர் 26ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 27ம் தேதி எழும்பூரில் […]

சென்னை-ராமேஷ்வரம் சென்ற பஸ்-லாரியில் மோதி விபத்து-7 பேர் காயம்

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி 41 பயணிகளை ஏற்றிகொண்டு சென்ற தனியார் ஆம்னி பேருந்து புதுக்கோட்டை அடுத்த சத்தியமங்கலம் மேலூர் அருகே சென்ற போது எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு முன்னே சென்ற டிப்பர் லாரியை முந்த முயன்ற போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தின் ஒருபகுதி முழுமையாக சேதமடைந்த நிலையில் பேருந்தில் பயணித்த 7 பேர் காயமடைந்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெள்ளனூர் காவல்துறையினர் மற்றும் […]

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வளர்ந்திருந்த கஞ்சா செடி

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னை உள்பட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் மற்றும் சிறை கைதிகள் சிறப்பு வார்டும் இங்குள்ளது. மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் சுகாதாரத்துக்காக மரங்கள், செடி, கொடிகள் நட்டு பாதுகாத்து வரப்படுகிறது.இந்தநிலையில் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தின் உள்ளே கிருமி நீக்கல் மையம் என்ற துறையின் கட்டிடத்துக்கு அருகாமையில் சுமார் 3 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளர்ந்துள்ளது. இதை அங்கிருந்த […]

எம்.ஜி.ஆர் நினைவு நாள்… எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 38-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, மெரினா கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர், அதன் பின் அங்குள்ள கலைஞர் […]

BSNL அலுவலகத்தில் தீவிபத்து…6வது மாடியில் சிக்கிய நபர் மீட்பு

சென்னையின் மிக முக்கியமான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சுமார் 9:30 மணி அளவில், அலுவலகப் பணிகள் தொடங்கவிருந்த நேரத்தில், கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறத் தொடங்கியது. உள்ளே இருந்த ஊழியர்கள் புகையைக் கண்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால், அடர்த்தியான கரும்புகை நொடிப் பொழுதில் கட்டிடத்தின் மேல் தளங்களுக்கும் […]

சென்னை ஐகோர்ட்-க்கு 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்ப 24 பேரின் பெயர்களை ஐகோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கடந்த சில வாரங்களில் 24 பேர் கொண்ட 4 பட்டியல்களை உச்ச நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கொலீஜியம் அனுப்பியுள்ளது. ஒரு பெண் வழக்கறிஞர் உள்பட 9 வழக்கறிஞர்களின் பெயர்கள், நீதிபதி பணியிடத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஐகோர்ட் கொலீஜியம் குழுவில் நீதிபதி நிஷா பானு இடம்பெற்ற நிலையில் அவரது பங்களிப்பின்றி பட்டியல் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் நீதிபதி நிஷா […]

வடமாநிலத்தில் கடும் பனி.. சென்னையில் 7 விமானங்கள் ரத்து

டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான பனிமூட்டம், மோசமான வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால், சென்னையில் இருந்து டெல்லி, கொல்கத்தா, வாரணாசி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள், தொடர்ந்து பல மணி நேரம் காலதாமதம், விமானங்கள் ரத்து போன்றவைகள் ஏற்படுகின்றன. இந்தநிலை இன்றும் தொடர்கிறது. அதன் அடிப்படையில் சென்னையில் 7 விமானங்கள் […]

எப்போதும் உங்க வீட்டுப் பிள்ளையாக இருப்பேன்-முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை , கொளத்தூரில் 15 ஜோடிகளுக்கான விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. ஒவ்வொரு தொகதிக்கும் 3 மாதங்களுக்கு ஒருமுறைதான் செல்வேன். கோளத்தூருக்கு வார வாரம் வருகிறேன். கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே புத்துணர்ச்சியும், வந்துவிடுகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு வந்தால்தான் எனக்கு முழு திருப்தி. எந்த தொகுதியில் கிடைக்கக்கூடிய வரவேற்பை விட கொளத்தூரில் கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. கொளத்தூர் தொகுதியை பார்த்தாலே பெருமையாகவும், பொறாமையாகவும் இருப்பதாக கூறுகின்றனர். கொளத்தூர் என்றாலே சாதனையும், இந்த ஸ்டாலினும்தான் நினைவுக்கு […]

என்றும் கடமைப்பட்டுள்ளேன்…தோனி குறித்து பத்திரனா உருக்கம்!

சென்னை : ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனா ரூ.18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பத்திரனாவை மீண்டும் வாங்க முயற்சி செய்தாலும், அதிக தொகை செலவழித்த கொல்கத்தா அணி அவரை கைப்பற்றியது. இது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், KKR ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை […]

சென்னையில் 11 விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், டெல்லி, பாட்னா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். எனினும், விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு அடிக்கல்

தமிழக இஸ்லாமிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான, அதிநவீன வசதிகளுடன் கூடிய சென்னை ஹஜ் இல்லம் கட்டுவதற்கு இன்று (டிசம்பர் 16, 2025) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வு தமிழக அரசின் மத நல்லிணக்க முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.ஹஜ் இல்லத்தின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம்ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணத்திற்காகச் சவூதி அரேபியா செல்லும் தமிழகப் பயணிகளுக்குப் பயனளிக்கும் வகையில், இந்தப் புதிய இல்லம் அமைக்கப்பட […]

சென்னை வந்த விமானத்தில் மாரடைப்பால் பெண் பலி

வங்கதேசத்தைச் சேர்ந்த அக்லிமா அக்தர் (32) என்ற பெண், நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக நேற்று சென்னைக்கு தனியார் விமானத்தில் அழைத்து வரப்பட்டார். சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது நடுவானில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. விமானம் தரையிறங்கியதும் மருத்துவக் குழுவினர் பரிசோதித்தபோது, பெண் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தமிழ் தேசிய பேரியக்கம் 16-ம் தேதி சென்னை-திருச்சியில் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது… சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் ( எஸ்.ஐ.ஆர்) என்ற திட்டத்தை தமிழகத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுத்துவதை கண்டித்தும் எஸ். ஐ. ஆர். மூலம் தகுதி உள்ள தமிழக வாக்காளர்கள் பல லட்சம் பேர் நீக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு மாறாக பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த இலட்சக்கணக்கானோரை வாக்காளர்களாக சேர்த்து விடுவர். இந்திக்காரர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கி அவர்களை நிரந்தர குடிமக்களாக […]

தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

தூய்மை பணியாளர்கள் தலைமைச் செயலகத்தில் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு சென்னை தலைமைச் செயலகத்தில் எதிரே உள்ள காமராஜர் சாலையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழங்க சாலை மறியல் ஈடுபட்டனர் பின்பு போலீசார் வந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் பணியில் ஈடுபட்ட போலீசார் தூய்மை பணியாளர்களை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர் இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதுஇவர்கள் தலைமை செயலகத்திற்கு எதிரே வந்து ஆர்ப்பாட்டத்தில் […]

சபரிமலைக்கு சென்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து பலி

கேரளா: பத்தனம்திட்டாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜைக்காக தற்போது கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், மலைப்பாதையில் சென்ற சென்னையை சேர்ந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் இதுவரை 19 பக்தர்கள் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

சென்னை-தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்-தள்ளுமுள்ளு- கைது

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.பணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் போலீசாருக்கும் , தூய்மை பணியாளருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தூய்மைப் பணியாளர்கள் மீது மோதிய கார்- 3 பேர் காயம்

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் நேற்று இரவு சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று மோதியது. இதில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 1 நபர் உள்பட 2 பெண்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

லாரி மீது மோதிய கார்- மருத்துவ மாணவி பலி

சென்னை அருகே திருப்போரூரில் நடந்த கார் விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று (டிச.10) மாமல்லபுரம் சென்று இரவு விருந்தில் பங்கேற்றுவிட்டு, இன்று 2 கார்களில் திரும்பி உள்ளனர். அப்போது 2 கார்களும் போட்டிப் போட்டுக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில், ஒரு கார் வேகமாக லாரி மீது மோதியது. இதில், மிஸ்பா பாத்திமா என்ற மாணவி உயிரிழந்தார். 3 மாணவர்கள் கவலைக்கிடமாக உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் […]

இன்றும் 36 விமானங்கள் ரத்து

சென்னையில் 9-வது நாளாக நேற்று சென்னையில் இருந்து சிங்கப்பூர், பாங்காக், பினாங்கு, குவைத், மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 33 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும், சென்னைக்கு வரவேண்டிய 37 விமானங்களும் என 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நிர்வாக காரணங்களுக்காக ரத்து என்று அறிவித்து இருந்தாலும் பயணிகள் முன்பதிவு ரத்து போன்ற காரணங்களால் விமான சேவையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், […]

வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை விட்டு சென்ற பெண்… பரபரப்பு

சென்னை வேளச்சேரியில் வங்கியில் 1.25 கிலோ தங்கத்தை பெண் ஒருவர் விட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பேங்க் மேனேஜரை சந்தித்து வங்கியில் உள்ள லாக்கர் வசதி தொடர்பான விவரங்களை பெண் கேட்டுள்ளார். அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிவிட்டு நகை பையை விட்டு சென்றுள்ளார். 5 நாட்களாகியும் நகை பையை விட்டுச் சென்ற பெண் வங்கிக்கு திரும்பி வரவில்லை. பேங்க் மேனேஜர் அளித்த புகாரின்பேரில் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பெண்ணை போலீசார் தேடி […]

ஒரு பூத்தில் திமுகவுக்கு எத்தனை வாக்கு ? இலக்கு நிர்ணயித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த வாக்குச்சாவடிக்கு 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினருக்கும் அவரவருக்கான இலக்கை முதலமைச்சர் நிர்ணயித்துக் கொடுத்தார். இக்கூட்டத்தில் நிர்வாகிகள், பூத் கமிட்டியினர், சார்பு அணியினர் கலந்து கொண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 440 வாக்குகளைப் பெறுவதற்கான வியூகத்தை விவாதித்து அதனை படிவத்தில் குறித்து தலைமைக் கழகத்தில் சமர்ப்பித்தனர்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு… 50 பேர் காயம்… பரபரப்பு

சென்னை, வானகரம் பொதுக்குழுவிற்கு வருகை தந்த இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.பொதுக்குழுவில் பங்கேற்க வருகை தந்த இபிஎஸ் வாகனத்துடன் தொண்டர்களும் மண்டபத்திற்குள் நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுக்குழு கூ ட்டத்திற்கு வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தவர்களுக்கு ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இபிஎஸ் வாகனத்தை நோக்கி முண்டியத்த தொண்டர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இதனைதொடர்ந்து போலீசார் பாதுகாப்பாக பொதுக்கூட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து

விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. இதனால் அந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 5 நாட்களாக இது தொடர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு விமானங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் […]

டியூஷன் சென்ற சிறுவனை கடித்துக்குதறிய தெருநாய்

சென்னை போரூர் அருகே அக்காவுடன் டியூஷன் சென்றபோது 8-வயது சிறுவனை தெருநாய் கடித்துள்ளது. தெருநாய் கடித்ததில், காயம் அடைந்த சிறுவன், பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல, பூவிருந்தவல்லி அருகே வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த சரளாதேவி என்ற பெண்ணையும் நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், அதைக்கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை- கோவைக்கு விமான டிக்கெட் 10 மடங்கு உயர்வு- பயணிகள் ஷாக்

இண்டிகோ விமான நிறுவனம் விமான சேவையை ரத்து செய்துள்ள சூழ்நிலையை பிற விமான நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி விமான டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளன. சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கான டிக்கெட் விலையை விமான நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்தியுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து 400 ஆக இருக்கும் நிலையில் தற்போது ரூ. 57 ஆயிரத்து 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு […]

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்…மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் நாளை (டிச.6) வழக்கம்போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும் எந்த நாள் பாடவேளையில் பள்ளிகள் செயல்படும் என்பது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார்.சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,மழை காரணமாக நடப்பு வாரத்தில் தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், டிச. […]

என் கஷ்டத்தில் உறுதுணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்… ரஜினி உருக்கம்

ஏவிஎம் நிறுவன உரிமையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் (86) இன்று காலை காலமானார். சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் 3வது தளத்தில் அஞ்சலிக்காக சரவணனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை அவர் தயாரித்துள்ளார் . இந்நிலையில்,  நடிகர்கள் ரஜினி, சிவக்குமார், […]

சென்னையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு விநியோகம்

சென்னையில் இன்று காலையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. நவ.30, டிச.1 ஆகிய 2 நாட்களில் சென்னையில் 2.78 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் 22 சுரங்கப்பாதைகளில் 21 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்றும் போக்குவரத்து சீராக உள்ளது என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூரில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை: 01-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 […]

சென்னையில் தொடர் கனமழை… தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையில் காலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. குழந்தைகள் பெற்றோர் அழைத்து செல்லலாம் என தனியார் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிட்வா புயல் – வலுவிழந்தாலும் சென்னையில் தொடர் மழை

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது சென்னையில் 6 இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது, சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தேவைப்பட்டால் புனே மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னைக்கு வருவார்கள் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அதிகாரிகள் உடன் ஆலோசனையில் ஈடுப்பட்ட பின்னர் தேசிய பேரிடர் […]

சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து..!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இவை புதுவையில் இருந்து சுமார் 330 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் (நவ.29), நாளையும் (நவ.30) வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக நேற்று இரவு முதல் தென் தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. […]

புலிக்கு வாலாக இருப்பேனே தவிர.. எலிக்கு தலையாக இருக்க மாட்டேன்”– ஜெயக்குமார்

 அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த செங்கோட்டையனுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். “நான் பெரிதும் மதிக்கக்கூடியவர் அண்ணன் செங்கோட்டையன். அவர் ஒரு முடிவு எடுத்து தவெகவில் இணைந்திருக்கிறார். எங்கிருந்தாலும் அவர் நன்றாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று அவர் உருக்கமாகக் கூறினார். செங்கோட்டையனின் 50 ஆண்டுகால அதிமுகப் பயணத்தை மதித்தே இந்த வாழ்த்தைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.அதே நேரத்தில், தானும் அதிமுகவிலேயே தொடர்ந்து இருப்பேன் என்று […]

சென்னைக்கு தெற்கே 430 கிமீ. தொலைவில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல்

சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை 30 ம் அதிகாலையில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் கரை […]

செல்லப்பிராணிகளுக்கு உரிமம்…கால அவகாசம் நீட்டிப்பு…

சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை சென்னை மேயரால் கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்துவரும் நாய் மற்றும் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளுக்கு […]

அண்ணன் செங்கோட்டையன் தவெக வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்.. விஜய்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து, தலைமைக்கு காலக்கெடு விதித்தார், செங்கோட்டையன். இதையடுத்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோருடன் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய முடிவு செய்தார். நேற்று விஜய்யை நேரில் சந்தித்தும் பேச்சு நடத்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று (நவ.,27) பனையூரில் உள்ள தவெக […]

”மனிதநேய உதயநாள்” – கமலுக்கு சென்னை மேயர் அழைப்பு

அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி பிரியா ராஜன், ஏற்பாட்டில், 27-11-2025 அன்று ‘‘மனிதநேய உதயநாள்” விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கமல் ஹாசன், கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, உபகரணங்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான பேறுகால நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில், 27-11-2025 அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கான அழைப்பிதழை  மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற […]

மாடு முட்டி முதியவர் பலி

சென்னை மணலியை அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவ முதியவர் ஆனந்தன். இவர் கடந்த நாட்களுக்குமுன் தெருவில் நடந்து சென்றபோது அவரை மாடு முட்டியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த ஆனந்தனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்தன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, மாத்தூர் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் விரட்டிப்பிடித்தனர். அப்போது மாடுகளின் உரிமையாளர்கள் மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலையில் […]

கட்டிடம் இடிக்கும் பணி… மேற்கூரை சரிந்து விழுந்தது… 2 பேர் உயிரிழப்பு

சென்னை மாவட்டம் வெட்டுவாங்கேணி பகுதியில் பழைய கட்டிடத்தை உடைக்கும் பணியில் இன்று தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டனர். கட்டிடத்தை உடைத்துக்கொண்டிருந்தபோது இரும்பு சாரத்தால் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் கட்டிடத்தை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலமான ஒடிசாவை சேர்ந்த பாபு மாலிக், சசிகாந்த் மாலிக் ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து […]

டூவீலர் ஓட்டி வந்த சிறுவனால் விபத்து… எம்பி அலுவலக ஊழியர் பலி

சென்னை கொட்டிவாக்கம் அருகே பள்ளிச் சிறுவன் தவறான திசையில் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில், மற்றொரு டூவீலரில் வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். பள்ளிச் சிறுவனின் தந்தை முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சுரேஷ் (50) ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனியின் முகாம் அலுவலகத்தில் டிரைவராக உள்ளார்.

மக்கள் அலறி அடித்து ஓட்டம்…சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இன்று காலை முதல் தளத்தில் உள்ள மின் கட்டுப்பாட்டு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை வெளியேறியதால் மாலில் இருந்த பொதுமக்கள் என்னவோ ஏதோ என அலறியடிடுத்து ஓடினர். ஊழியர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மாலில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் சாலை ஓரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்த திருவல்லிக்கேணி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஷாப்பிங் மாலில் பணியாற்றும் […]

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை

சமீப நாட்களாகவே தமிழகம் முழுவதும் மழை கொட்டி வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இன்றைய தினம் 10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (சனிக்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது […]

கஞ்சா வழக்கில் சிம்புவின் நண்பன் கைது

சென்னையில் சினிமா இணை தயாரிப்பாளர் சர்புதீன் முகமது மஸ்தான் என்பவரிடம் ரூ. 27.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த சர்புதீன் முகமது மஸ்தான். இவர் திருமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக சர்புதீன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் வாலிபர் சடலம்

சென்னை அக்கரை கடற்கரையில் உள்ள கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது. தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் கிடந்த சடலம், வேலூரை சேர்ந்த கலையரசனின் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாலிபர் உடலை மீட்டு சென்னை நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகத்தில் செலோடேப் சுற்றியபடி இளைஞர் சடலம் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் ரூ.261 கோடியில் விளையாட்டு நகரம்- அரசாணை வெளியீடு

சென்னைக்கு அருகில் 261 கோடியில் விளையாட்டு நகரம் அமைக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னைக்கு அருகே உலகத் தரத்திலான ‘சர்வதேச விளையாட்டு நகரம்’ அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதனை செயல்படுத்தும் வகையில் சென்னை செம்மஞ்சேரியில் 112 ஏக்கர் பரப்பளவு நிலம் அடையாளம் காணப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 261 கோடியில் விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. மேலும் முதல் […]

நாயை அடித்து கொன்று குப்பையில் வீசிய டீக்கடைக்காரர் கைது

சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் மோகன் (வயது 56). இந்த நிலையில் நேற்று இவரது கடைக்கு வந்த ஒரு முதியவரை தெரு நாய் கடிக்க வந்ததாக கூறப்படுகிறது. இவர் அந்த நாயை விரட்ட முயன்றுள்ளார். அப்போது இவரையும் தெரு நாய் கடிக்க வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோகன் கட்டையை எடுத்து தெரு நாயை சரமாரியாக அடித்து கொன்று அந்தப் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் தூக்கி வீசியுள்ளார். இந்த சம்பவம் விலங்குகள் நல […]

சென்னை உட்பட 5 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இண்டிகோ’ விமான நிறுவனத்துக்கு நேற்று பிற்பகல் 3:30 மணியளவில், ‘இ – மெயில்’ மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், ‘சென்னை, டில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் குண்டு வெடிக்கும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. எனினும் வெடிகுண்டுகள் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதை தொடர்ந்து, மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து உத்தர பிரதேசத்தின் […]

பிங்க் நிற ஆட்டோ… ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்… எச்சரிக்கை

சென்னை : மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜக்தாப், பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட “பிங்க் ஆட்டோ”க்களை ஆண்கள் இயக்கினால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண்களின் பொருளாதார சுயசார்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கிக் கடன் உதவியுடன் பெண்களுக்கு மட்டுமே பிங்க் நிற ஆட்டோக்களை வழங்கியது. இவற்றை ஆண்கள் இயக்குவது முற்றிலும் தவறு என்று ஆட்சியர் தெரிவித்தார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டி […]

எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது…முதல்வர் ஸ்டாலின்

சென்னை : இன்று (நவம்பர் 7, 2025) ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். விழாவில் பேசிய அவர் “திமுகவை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம் என சிலர் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது” என்று தனது பேச்சில் தெரிவித்தார். திமுகவின் வலிமையையும், மக்கள் ஆதரவையும் நினைவுபடுத்தும் வகையில் அவர் உரையாற்றினார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான எஸ்.ஐ.ஆர். (SIR) பணிகள் தமிழ்நாட்டில் […]

இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது ரூ.3 கோடி மோசடி புகார்

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் பார்வதி என்ற இன்ஸ்டா பிரபலம்  மற்றும் ஆடை வடிவமைப்பாளர் மீது ஈவிபி ப்லிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி புகார் அளித்து இருந்தார்.அது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். பின்னர் இதுதொடர்பாக ஆவடி காவல் ஆணையரகத்தில் பேட்டியளித்த சந்தோஷ் ரெட்டி, “பார்வதி என்பவரை எனக்கு 4 வருடங்களாக தெரியும். அவர் நகைகள் மற்றும் ஆடைகளை குறைந்த விலைக்கு வாங்கித்தரக்கூடிய நபர். அதுபோல தான் என்னிடமும் பணத்தை பெற்றார். அதன்பின்னர் பணத்தையும் திரும்பத்தரமால், […]