சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு
சென்னை, கோவையில் தனியார் பங்களிப்புடன் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முன்அனுபவம் உள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம், வழிகாட்டு நெறிமுறைகளை tnawb.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் விலாசத்திற்கு பிப்.26க்குள் அனுப்ப வேண்டும்.
செல்லப்பிராணிகளுக்கு உரிமம்…கால அவகாசம் நீட்டிப்பு…
சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை சென்னை மேயரால் கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்துவரும் நாய் மற்றும் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளுக்கு […]