செஸ் போட்டியில் கிராமப்புற மாணவர்கள் பரிசு வென்று அசத்தல்
பொள்ளாச்சியில் கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் ஈஷாCBE அறக்கட்டளையால் பயிற்சி அளிக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் பல்வேறு வயது பிரிவுகளில் பரிசுகளை வென்று அசத்தி உள்ளனர். அவனே செஸ் அசோசியேஷன் சார்பில் பொள்ளாச்சி உடுமலை பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) கோவை மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர், மாணவிகள் என இருபாலருக்கும் பல்வேறு வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. […]