வேலூரில் பிப்.23ம் தேதி விஜய் பிரசாரம்
சேலத்தைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அந்த பரப்பரைக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதில் சேலம் கூட்டம் போலவே சுமார் 5000 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்நிலையில் வேலூரில் விஜய் பிரச்சாரம் நடக்கும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார். பிரச்சார திடலில் பொதுமக்கள், தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாகன பார்க்கிங், பிரச்சாரத்திற்கு வந்து, செல்லும் வழி குறித்தும் […]
சேலம் தவெக கூட்டத்தில் வாலிபர் பலி… சந்தேக மரணம் என வழக்கு
சேலம் : மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் (தவெக / TVK) நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று (பிப்ரவரி 13, 2026) சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றிய இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கடுமையான வெயில் தாக்கம் இருந்த நிலையில், கூட்டத்தில் ஒரு நபர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நபர் சூரஜ் (37) என்பவர் ஆவார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் சேலத்தில் தங்கியிருந்தவர். கூட்டத்தில் வலிப்பு ஏற்பட்டு […]
சேலத்தில் நாளை தவெக நிர்வாகிகள் கூட்டம்- நுழைவு சீட்டு இருப்பவர்களுக்கு அனுமதி
சேலத்தில் நாளை த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-“மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி […]
சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் கூட்டம் நடத்த அனுமதி கோரி, தவெக மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையில் த.வெ.க. நிர்வாகிகள், காவல் ஆணையர் அனில்குமார் கிரியிடம் கடந்த புதன்கிழமை மனு அளித்தனர். ஆனால், அரசு வழிகாட்டுதல்படி வழிமுறைகள் குறிப்பிடப்படவில்லை என்று தெரித்து அந்த மனு காவல் துறை சார்பில் நிராகரிக்கப்பட்டது. முன்னதாக, சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதி திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு […]
சேலத்தில் விஜய் பங்கேற்கும் ‘மக்கள் சந்திப்பு’: 51 கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அதிரடி அனுமதி
சேலம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் வரும், 13ல் நடத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக அனுமதி கேட்டு, போலீசில் கடந்த, 3ல் கடிதம் வழங்கப்பட்டது. அதேபோல், மாநகர் போலீஸ் கமிஷனரிடம், கடந்த, 4ல் நிர்வாகிகள் மனு அளித்தனர். இந்த மனு குறித்து போலீசார் தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.இந்நிலையில், பிப்.,13ல் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.* 13ம் தேதி மதியம் 12.00 மணி முதல் 3 மணி […]
சேலத்தில் ஓடும் காரில் பயங்கரத் தீ 5 பேர் உயிர் தப்பினர்
சேலம் குரங்குசாவடி பகுதியில் நேற்றிரவு ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் பயணம் செய்த ஐந்து பேர் நூலிழையில் உயிர் தப்பினர். சேலம் சித்தனூர் புவனேஸ்வரி பகுதியைச் சேர்ந்த சக்திஅனீஷ் (32), நேற்று மாலை தனது மனைவி கீர்த்தனா, மகள் எஸ்னா, தாய் கமலா மற்றும் சகோதரி மோனிகா ஆகியோருடன் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் ஷோரூமிற்குச் சென்றுள்ளார். பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் […]
கால்பந்து விளையாடிய கல்லூரி மாணவி மயங்கி விழுந்து பலி
சேலம்: அரசு கலைக்கல்லூரியில் கால்பந்து விளையாடிய மாணவி, மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சி வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் ஒரு மணியளவில், கல்லூரி மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி கணினி அறிவியல் படிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் […]
சேலம், பெரம்பலூர் உட்பட 4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கடந்த சில மாதங்களாகவே, நீதிமன்றங்கள், பள்ளிகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் படைகள் சோதனையில் ஈடுபடுவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகின்றது. இந்த நிலையில், நேற்று பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம் ஆகிய நான்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து நான்கு நீதிமன்றங்களிலும் பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்களை அவசர அவசரமாக வெளியேற்றி போலீஸார் […]
கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகாப்பு நிகழ்ச்சிக்காக உறவினர்கள் ஒரு டிராவல்ஸ் வேனில் சென்று கொண்டிருந்தனர். கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியை முந்த வேன் முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் மீது லேசாக உரசவே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த […]
சேலம்-கள்ளக்குறிச்சியில் ஜன.,4,5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்
சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 4, 5ம் தேதிகளில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார். சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் ஜனவரி 4ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 5ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
சேலம் வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் நடிகர் அருண்விஜய் சாமிதரிசனம்
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “ரெட்டை தல” திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண்விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இதானி வந்ததை அறிந்த ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் விஜய், […]
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அறை முன் மாந்திரீக பூஜை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமாண்டப்பட்டியில், ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ கென்னடி உட்பட 30- ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். இந்த பள்ளி தலைமை ஆசிரியர் அறை முன்பாக கரி தூள் கொண்டு நட்சத்திர வடிவில் கோலமிட்டு, அதன் நடுவில் மஞ்சள், குங்குமம், மரக்கட்டை பொம்மை மற்றும் முட்டை வைத்து மாந்திரீக பூஜை […]
கடும் குளிரால் தொழிலாளி உயிரிழப்பு
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அடுத்துள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி (57), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 16-ம் தேதி இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டிற்குள் படுத்திருந்தபோது, திடீரென கடுமையான குளிரை தாங்க முடியாமல் நடுங்கி கொண்டிருந்தார்.பிறகு சிறிது நேரத்தில் அவருக்கு ஜன்னி (வலிப்பு) ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பழனிசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக […]
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
சேலம் சிவதாபுரம் மெயின்ரோடு திருமலைகிரி பகுதியில் சைலகிரீஸ்வரர், சைலாம்பிகா என்ற சிவன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோவிலில் நித்திய பூஜையை பூசாரி முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது. கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது. கோவிலுக்குள் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இரும்பாலை […]
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பெண் கொலை
சேலம் அஸ்தம்பட்டி சுப்பிரமணியபுரம் விரிவாக்க பகுதியை சேர்ந்த டெல்லி ஆறுமுகத்தின் 2-வது மகள் பாரதி (38). சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஆறுமுகம் இறந்து விட்டதால், பாரதி தன்னுடைய தாயுடன் வசித்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. பாரதி தனது வீட்டில் டியூசன் எடுத்து வந்தார். அவருக்கும், சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் உதயசரண் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இரவு நேர சினிமாவுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் டியூசன் சென்டருக்கு […]
அரசு பள்ளியில் 2 மாணவர்களை பாம்பு கடித்ததால் பரபரப்பு
சேலம் அரசு பள்ளியில் 2 மாணவர்களை பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வகுப்பறைக்குள் நுழைந்த பாம்பு 11 ம் வகுப்பு மாணவர்களை கடித்தது. இதனால் வகுப்பறையில் பள்ளி மாணவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். 2 மாணவர்களும் சேலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தவெக பிரச்சாரத்துக்கு அனுமதி கொடுக்காதது ஏன்?-..சேலம் காவல்துறை விளக்கம்
சேலம் மாநகர காவல்துறை, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) டிசம்பர் 4-ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து, அதிகாரப்பூர்வ விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதத்தில் மறுப்புக்கான முக்கிய காரணங்களாக இரண்டு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், ஒன்று, டிசம்பர் முதல் வாரத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பெரும்பாலான போலீஸார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுவதால், சேலத்தில் போதிய போலீசை ஒதுக்க முடியாது என்பது. இரண்டாவது, தவெக தாக்கல் செய்த மனுவில் […]
“NDA கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன”…ஜி.கே.வாசன் பேட்டி!
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை (இபிஎஸ்) தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பில் தமாகா கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் அரசியல் விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார். சந்தித்தபிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜி.கே.வாசன் “மரியாதை நிமித்தமாகவும் சந்தித்தேன்” என்று அவர் கூறினார். இது NDA கூட்டணியின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய […]