ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- தேசிய நெடுஞ்சாலை மூடல்
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை முதலே கனமழையும், கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. ராம்பன் மாவட்டத்தில் உள்ள ராம்சூ பகுதியிலும் சாலைகளில் வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று பனி குவிந்து கிடப்பதால், தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.மேலும் வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், பனியால் மூடப்பட்டன. சுமார் 3 மாத வறண்ட காலநிலைக்குப் பிறகு, தோடாவின் பலேசாவில் சமவெளிகள் மற்றும் மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதேபோல, பனிப்பொழிவு […]
ஜம்மு-காஷ்மீர் -ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் பலி
ஜம்மு-காஷ்மீரின் தோடா என்ற இடத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 17 வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பதேர்வாஹ்-சம்பா சாலையில் ராணுவ வாகனம் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து என தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம் உருக்குலைந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
ஜம்மு-காஷ்மீரில் திடீரென வெடித்து சிதறிய வெடிபொருட்கள்… 9 பேர் பலி…
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் நவ்காம் […]