திண்டுக்கல்-புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு-காளை முட்டி வீரர் பலி

திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் அலங்காநல்லூரை சேர்ந்த பாலகுரு படுகாயம் அடைந்தார். உடனடியாக காயமடைந்த அவரை அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தப் போட்டியில் பாலகுரு தவிர, மாடு பிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மேலும் சிலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்கமாக ஜல்லிக்கட்டு […]

பெரம்பலூர் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 616 காளைகள்- மல்லுக்கட்டிய 390 வீரர்கள்

பெரம்பலூர் பூலாம்பாடியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 616 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவற்றை அடக்க 390 வீரர்கள் மல்லுக்கட்டினர். 76 வீரர்கள் காயம் அடைந்தனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, பூலாம்பாடி, கள்ளப்பட்டி, சில்லக்குடி கொளத்தூர், தொண்டமாந்துறை ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு 2026ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்முறையாக நேற்று வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி கிராமத்திலுள்ள மேற்குத்திடலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தப் போட்டிகளை […]

ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் சிறுவன் பலி

புதுக்கோட்டை மாவட்டம், குலமங்களம் கிராமத்தில் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் சிறுவன் சின்னையா (17) உயிரிழந்தான். பிப்.2ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேர் விடுவிப்பு

ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜல்லிக்கட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பெண்கள் உள்பட 57 பேர் விடுவிப்பு; 2017ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது

திருச்சி நவலூரில் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 600 காளைகள்

திருச்சி நவலூர் குட்டப்பட்டில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 600 காளைகள் – பரிசுகளை அள்ளிய வீரர்கள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார் திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில், தைப்பொங்கலை முன்னிட்டு இன்று பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. ஆண்டுதோறும் தை மாதம் 5-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டும் அரசின் உரிய அனுமதியுடன் போட்டிகள் மிக உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு […]

VSB தலைமையில் ஆர்.டி மலை ஜல்லிக்கட்டு…750 காளைகள் பங்கேற்பு

குளித்தலை அருகே ராஜண்டார் மலையில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது இதில் 750 காளைகள் பங்கேற்க உள்ளனர் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜண்டார் மலையில் இன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது இதில் 750 காளைகள் கலந்து கொள்ள உள்ளன மாடுபிடி வீரர்கள் சுமார் 500 மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் முதல் சுற்றில் 100 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன அதன் ஏற்பாடாக மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது பலத்த […]

சீறிப்பாயும் காளைகள்: நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுத் திருவிழா

உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 15) கோலாகலமாகத் தொடங்குகிறது. நாளை காலை 7 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க சுமார் 3,000 காளைகளும், 1,800 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான டோக்கன்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுள்ளன. போட்டியையொட்டி வாடிவாசல், காளைகள் வெளியேறும் பகுதி, பார்வையாளர்கள் மாடம் மற்றும் […]

நாளை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

உலகப் புகழ்பெற்ற மதுரையின் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தை மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற உள்ளன. இதன்படி, ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16-ஆம் தேதி பாலமேட்டிலும், 17-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு மதுரையில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியான அவனியாபுரம் போட்டிக்காக, சுமார் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் பிரம்மாண்ட விழா மேடை, காளைகள் வரிசைப்படுத்தும் தடுப்பு வேலிகள் மற்றும் திருப்பரங்குன்றம் சாலையில் இரும்புத் தடுப்புகள் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் […]

17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதல்வர் நேரில் பார்வை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜனவரி.17ல் நேரில் செல்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சங்கமம் கலை விழாவை நாளை தொடங்கி வைக்கிறேன். எல்லோருக்குமான திருநாள் பொங்கல்; எல்லோருக்குமான அரசு திராவிட மாடல் அரசு. சாதி, பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடு எங்கும் பொங்கட்டும். பொங்கல் விழா, விளையாட்டுப் போட்டி, கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்தி திமுகவினர் பரிசு வழங்க வேண்டும். 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாக இருக்கட்டும். […]

உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு-வாடிவாசல் அமைக்கும் பணி

அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகப் பிரபலமானது. இதைக் காண உலகம் முழுவதிலுமிருந்து ரசிகர்கள் வருகிறார்கள். முக்கியமாக, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 15-ம் தேதியும், பாலமேட்டி 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில் வரும் 15ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம் – திருப்பரங்குன்றம் சாலையில் வாடிவாசல் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் எனப்படும் […]

தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு .. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டியினை இயற்கை வளங்கள் துறை ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை , முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன் , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

ஜல்லிக்கட்டு காளையுடன் திருச்சி கலெக்டரிடம் மனு- பரபரப்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அழித்தனர்.இப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் மூலம் டோக்கன் பெறும் முறையை தவிர்க்ககோரி ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்துபொதுமக்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் தலைமையில் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழர்களின் வீரம் செறிந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழக முழுவதும் ஜனவரி மாதம் முதல் மே […]

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-ஜன.17ம்தேதி அனுமதி கோரி மனு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தின் முக்கிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு விழாக்குழு நிர்வாகிகள் மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். அத்துடன் ஜனவரி 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கக் கோரி மனுவும் சமர்ப்பித்தனர். போட்டியின் பாதுகாப்பு, அனுமதி […]

ஜல்லிக்கட்டு…இதையெல்லாம் கடைப்பிடிக்கனும்… தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாகவும், விலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையிலும் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல், வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது. போட்டிகளை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு முழுமையாக இணங்கி போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. […]