ஜெயங்கொண்டம்.. ரூ. 25 கோடியில் அரசு மருத்துவமனை திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் மற்றும் ரூ.6.26 கோடி மதிப்பீட்டில் 20 முடிவுற்ற திட்டப்பணிகளையும்திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு வசதிகளுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் […]
பழைய சென்டரல் பஸ் ஸ்டாண்டை, பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டாக்க கோரிக்கை
சத்திரம் பேருந்து நிலையத்தில் இருக்கும் அரியலூர் பெரம்பலூர் பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றுங்கள்? பிளீஸ்… திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் பெரம்பலூர் ஜெயங்கொண்டம் ஆகிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அங்கிருந்து புறப்படுகின்றன பேருந்துகள் அனைத்தும் அவர்களது நேரத்திற்கு முன்பாகவே அங்கு வந்து நிறுத்துவதன் காரணமாக சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் லால்குடி மண்ணச்சநல்லூர் சமயபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அஸ்வின் ஸ்வீட்ஸ் கடை அருகே திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக […]
ஜெயங்கொண்டம்- கடை முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவர்- பரபரப்பு
ஜெயங்கொண்டம் கடைவீதியில் உள்ள தனியார் பாத்திரக்கடை உரிமையாளரிடம் ரூ 2 லட்சம் பணம் கேட்டு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சித்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (69). இவர் ஜெயங்கொண்டம் கடைவீதியில் உள்ள ஒரு தனியார் பாத்திரக்கடை ஒன்றில் தினக்கூலி அடிப்படையில் கடந்த 26 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். திடீரென காரணம் இல்லாமல் தன்னை வேலையை விட்டு நிறுத்தி விட்டதால், தனக்கு வாழ்வாதாரம் ஏதும் இல்லாததால் […]
ஜெயங்கொண்டம்- வீட்டுக்குள் புகுந்த கார்- உயிர் தப்பிய வீட்டு உரிமையாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செந்துறை பகுதியை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரான நடராஜன் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பாண்டிச்சேரி சென்று விட்டு மீண்டும் செந்துறை செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர். அப்போது மருதூர் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் இடது புறமாக இருந்த விஜயலட்சுமி என்பவரது ஓட்டு வீட்டின் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் வீட்டிலிருந்த விஜயலட்சுமி, கார் ஓட்டி வந்த நடராஜன் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் […]
ஜெயங்கொண்டம்-விவசாயி வீட்டில் தங்க செயின் திருட்டு-2பேர் கைது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் தெற்குவெளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(46). விவசாயியான இவர் கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து மகன் உத்திராபதி […]
அரியலூர்-ஜெயங்கொண்டம் தொகுதியில் 23,695 பேர் நீக்கம்- கலெக்டர் தகவல்
அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் 23 ஆயிரத்து 695 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் இறந்தவர்கள், கண்டறிய இயலாதவர்கள், நிரந்தரமாக […]
ஜெயங்கொண்டம்-1302 பயனாளிகளுக்கு ரூ.662.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழாவின் நேரலை அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுபம் திருமண மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் ரூ.662.29 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1302 பயனாளிகளுக்கு […]
ஜெயங்கொண்டம்-கைத்தறி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் 2023-2024 ஆம் ஆண்டு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சரால் ‘தமிழ்நாட்டில் 10 இடங்களில் தலா ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர், இன்று 6500 சதுர அடி பரப்பளவில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டினார். இந்த சிறிய […]
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் திருச்சி ஐஜி ஆய்வு
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகம், மற்றும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு… திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் அரியலூர் மாவட்டகாவல் அலுவலகத்திற்கு வருகை புரிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரியுடன் மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். இதனையடுத்து காவல் அலுவலகத்தில் இயங்கும் காவல்துறை புகைப்பட பிரிவினை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள், பராமரிக்கப்படும் பதிவேடுகள் […]
ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் இன்று மாலை நடைபெறும் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, தற்போது லிங்கத் திருமேனிக்கு அன்னம் சாத்துவதற்காக சாதம் வடிக்கும் பணிகள் பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. கங்கை வரை படையெடுத்து, கடாரத்தை வென்று அங்கு வெற்றி பெற்றதன் அடையாளமாக கங்கைகொண்ட சோழபுரம் என்னும் மாநகரை மாமன்னன் ராஜேந்திர […]