வீரமா காளியம்மன் கோவிலில் 200 பேருக்கு கறிவிருந்து வைத்த இஸ்லாமிய தம்பதி

வேண்டுதல் நிறைவேறியதால் தஞ்சை அருள்மிகு. வீரமா காளியம்மன் ஆலயத்தில் கிடா வெட்டி, பூஜை செய்து 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறி தனது நேர்த்தி கடனை நிறைவேற்றிக் கொண்டனர் இஸ்லாமிய தம்பதியினர். தஞ்சை நாவலர் நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜாகிர் உசேன். 25 வயதான இவரது மகனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். ஜாகிர் உசேன் பெரும்பாலும் இந்து மக்களிடம் அண்ணன் தம்பி அக்காள் தங்கை மாமன் மச்சான் என்று […]