அரசு ஆஸ்பத்திரியில் பிரசவங்களின் விகிதம்: தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்

மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கத்தோடு மாநிலத்தில் 130 அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கருவுற்ற தாய்மார்களையும், பச்சிளஞ்சிசுக்களையும் பராமரிப்பதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாக செல்படுகிறது. அரசு மருத்துவமனையில் நிகழ்ந்திடும் பாதுகாப்பான பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதனால் மகப்பேறு இறப்பு விகிதம் ஆயிரம் சிசுக்களுக்கு 35 என்ற அளவிலும், சிசு இறப்பு விகிதம் ஆயிரம் சிசுக்களுக்கு 12 என்ற அளவிலும், தேசிய சராசரியைவிட மிகக் […]

சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம்

இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்ற 2024ஆம் ஆண்டு 67,526 சாலை விபத்துகளும், 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 370 விபத்துகளும் நடந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.