ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் பேசக்கூடாது- நடிகை திரிஷா காட்டம்

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13ம் தேதி சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பொதுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “நடிகை திரிஷாவைவிட்டு விஜய் வெளியே வரவேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்” எனப் பேசியது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. நடிகை திரிஷா குறித்த நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஒரு பெண் குறித்து பொறுப்பில் இருக்கும் கட்சி […]

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் கூட்டம் நடத்த அனுமதி கோரி, தவெக மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையில் த.வெ.க. நிர்வாகிகள், காவல் ஆணையர் அனில்குமார் கிரியிடம் கடந்த புதன்கிழமை மனு அளித்தனர். ஆனால், அரசு வழிகாட்டுதல்படி வழிமுறைகள் குறிப்பிடப்படவில்லை என்று தெரித்து அந்த மனு காவல் துறை சார்பில் நிராகரிக்கப்பட்டது. முன்னதாக, சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதி திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு […]

36 பேர் கொண்ட மாநில சட்ட பாதுகாப்பு குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’-வை நியமித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தவெக இணைப்பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார், பொருளாளர் வெங்கடராமணன் உள்ளிட்ட 36 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும். இந்நிலையில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’, பின்வரும் வகையில் […]

கனிமொழிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி, இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில்,திமுக எம்.பி. கனிமொழிக்கு தவெக தலைவர் விஜய் தொலைபேசி மூலம் பிறந்த‌நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி’ என கூறிவரும் நிலையில் கனிமொழிக்கு விஜய் பிறந்த நாள் கூறியது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.. விஜய் பேச்சு..

ஈரோடு, விஜயமங்கலம் பெருந்துறை, சுங்கச்சாவடி அருகே உள்ள 16 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் ஏராளாமான மக்கள் குவிந்தனர். பொதுமக்களின் நடுவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது… மஞ்சள் என்றாலே மகத்தானது, அதிர்வை ஏற்படுத்தும் மஞ்சள் நகர்ததிற்கு எனது வணக்கம். மஞ்சள் என்றாலே தனி VIBE தான்.. அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அன்றைக்கும், இன்றைக்கும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுபவர் பெரியார். என்னை வீழ்த்த என்னவெல்லாம் அவதூறு பரப்பலாம் என […]

தவெக தலைவர் விஜய் உடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களம் காண இருக்கிறது. தற்போது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்கிறது. இந்த நிலையில், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் பேசியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இதை மறுத்தார்.இந்த பரபரப்புக்கு மத்தியில், தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து […]