அரைகுறை ஆடையுடன் வலம் வந்த பெண் – தட்டிக்கேட்ட பெண் போலீஸ்க்கு நேர்ந்த கதி: பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூருவின் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கே.ஆர். புரம் ரயில் நிலையப் பகுதியில், தாமினி என்ற மோகினி (31) என்ற இளம்பெண் அரைகுறை ஆடையுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். தனியார் நிறுவன மேலாளராகப் பணியாற்றும் இவரைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் கேலி செய்தபோதும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் சாலையின் நடுவே நடந்து சென்றதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அங்குப் போக்குவரத்துப் பணியில் இருந்த லட்சுமி நரசம்மா என்ற பெண் காவலர், மோகினியிடம் சென்று […]

காதலன் வீட்டிற்குச் சென்ற இளம்பெண் – காதலியின் தாய் மற்றும் சகோதரர்கள் வீடு புகுந்து தாக்குதல்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அடுத்துள்ள போலையார்புரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் ராஜேஷ் (28). இவரும் இவரது உறவினரான ஜெபாஸ்லின் விஜி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஜெபாஸ்லின் விஜியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இரு குடும்பங்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், தனது சகோதரர் தன்னைத் தாக்குவதாகக் கூறி ஜெபாஸ்லின் விஜி, காதலன் ராஜேஷின் வீட்டிற்குத் தஞ்சமடையச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து அவரது தாயார் […]

திருச்சி காங்., நிர்வாகி மீது கம்பியால் தாக்குதல்

திருச்சி காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் நிர்வாகியை தாக்கிய மற்றொரு நிர்வாகி மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி பொன்மலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ஜுன் (35).திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் தில்லைநகர் வடக்கு விஸ்தரிப்பு ராமச்சந்திர நகரை சேர்ந்த ஸ்ரீ ராகவேந்திரா (43 ) .திருச்சி மாநகரில் காங்கிரஸ் கோட்ட தலைவராக உள்ளார். இவரிடம் அர்ஜுன் ரூபாய் […]

அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). கார் டிரைவரான இவருக்கும் அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த யுவராஜ் (25), அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்த பழனி தீபக் ( 21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 23ந்தேதி (நேற்று) மதியம் கார்த்திகேயன் அரியமங்கலம் காமராஜ் நகரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்ட வந்துள்ளார். அப்போது அங்கு வந்த யுவராஜ் மற்றும் பழனி தீபக் இருவரும் கார்த்திகேயனை தகாத […]

கரூர் அருகே பெண்மணியை அடித்து தாக்குதல்- கலெக்டரிடம் புகார்

கரூர் அருகே பண தேவைக்காக நிலத்தினை கிரையம் வைத்து கடன் வாங்கிய பிரச்சனையில் பெண்மணியை அடித்து கீழே தள்ளிய சிசிடிவி வீடியோவை வெளியிட்டு பாதிக்கப்பட்ட பெண்மணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். கரூர் மாவட்டம், தென்னிலை அடுத்த வைரமடை கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி இவரது கணவர் பெரியசாமி இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் . ரேவதி தனக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலத்தை பண தேவைக்காக கருக்கம்பாளையத்தை சேர்ந்த ராஜா மணி என்பவரிடம் […]

வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்ததால் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்

திருப்பத்தூர் மாவட்டம் செல்லரப்பட்டி பகுதியை சேர்ந்த நெப்போலியன் என்பவர் மைக்காமேடு பகுதியில் ஹாலோ பிரிக்ஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவரிடம் வடமாநில தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்து வரும் நிலையில், அரவிந்த் மான்ஜே என்பவர் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு எதிரில் உள்ள மாட்டுப் பண்ணையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த நெப்போலியன், வடமாநில இளைஞரை கொடூரமாக தாக்கியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. வடமாநில இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாக […]

7ம் வகுப்பு மாணவனை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

கரூர், காந்திகிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆங்கிலப் பள்ளியில் கரூர் பஞ்சமாதேவி அடுத்த சந்தன காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பானுமதி என்பவரின் ஒரே மகனான (விஜயலட்சுமி வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி) 7ஆம் வகுப்பு படித்து வரும் (12 வயது) மாணவனை தாமதமாக வந்ததாக கூறி உடற்கல்வி ஆசிரியர் மணி என்பவர் நேற்று பிரம்பால் அடித்த விவகாரம். தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளியின் முதல்வர் மற்றும் […]