சமயபுரம் மாரியம்மன் கோவில் நடையடைப்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கொள்ளிடம் வடதிருக்காவேரியில் மாரியம்மன் தீர்த்தவாரி கண்டருள செல்வதால், நாளை (பிப்.1) மாலை 3:30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, நாளை மறுதினம் (பிப்.2) காலை 5:30 மணிக்கு வழக்கம் போல நடை திறக்கப்பட்டு, மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும் என, கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன் தெரிவித்துள்ளார்.

மாநில அளவில் ஏரோஸ்கேட்டோபால் போட்டி- திருச்சி மாவட்டம் முதலிடம்

தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் 7-ஆவது மாநில அளவிலான போட்டி திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு கல்லூரியில் 27 மற்றும் 28ம் தேதி மிக விமர்சியாக நடைபெற்றது.ஏரோஸ்கேட்டோபால், ஒரு நிமிட ஸ்கேட்டிங் ரேஸ் மற்றும் ஸ்கேட்டிங் ஜிக்-ஜாக் போட்டிகளில் திருச்சி, திண்டுக்கல், மதுரை என 11 மாவட்டங்களிலிருந்து 350-க்கும் அதிகமான ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி பல பதக்கங்களை பெற்று வெற்றி வாகை சூடினர்.தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் தலைமையில் செயலாளர் […]

திருச்சியில் விடிய விடிய மழை… 96.5 மிமீட்டர் பதிவு

திருச்சி மாவட்டத்தில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. அதன்படி லால்குடியில் கல்லக்குடியில் 8.4 மிமீ, லால்குடி 10.2 மிமீ, நந்தியார் ஹெட் 8.4 மிமீ, புல்லம்பாடி 12.6மிமீ, மண்ணச்சநல்லூரில் தேவிமங்கலம் 2.6 மமீ, சமயபுரம் 0, சிறுகுடி0, வாத்தலை அணைகட் 0, மணப்பறை பகுதியான மணப்பாறை 1மிமீ, பொன்னையார் டாம் 2.6மமீ, மருங்காபுரி பகுதியான கோவில்பட்டி 2.4 மிமீ, மருங்காபுரி 0, முசிறி பகுதியான முசிறி 0, புலிவளம் 0, தாத்தியன்கார்பெட் 0, ஸ்ரீரங்கம் நவலூர் […]